பாதுகாப்பு பணிக்கான தேர்வு: ஆன்லைன் பயிற்சி அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பு பணிக்கான தேர்வு: ஆன்லைன் பயிற்சி அறிவிப்பு

Added : அக் 19, 2020
Share
கோவை:ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிக்குவிண்ணப்பித்துள்ள, முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள், 'ஆன்லைன்' பயிற்சிக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்திய ராணுவத்தில் அலுவலராக பணியில் சேர, ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிக்கான தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்த, முன்னாள் படைவீரர்களின் வாரிசு களுக்கு, முன்னாள் படைவீரர் நல இயக்ககத்தால், முன்பயிற்சி

கோவை:ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிக்குவிண்ணப்பித்துள்ள, முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள், 'ஆன்லைன்' பயிற்சிக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்திய ராணுவத்தில் அலுவலராக பணியில் சேர, ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிக்கான தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்த, முன்னாள் படைவீரர்களின் வாரிசு களுக்கு, முன்னாள் படைவீரர் நல இயக்ககத்தால், முன்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம்.தற்போது, கொரோனா தொற்று காரணமாக, ஆன்லைன் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த, முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள், மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில், விண்ணப்பித்த விபரத்தை தெரிவிக்க வேண்டும்.பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள், www.exweletutor.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து, வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு, கலெக்டர் ராஜாமணி அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X