பின்னலாடை துறை வரலாறு பேசும் சுவர் ஓவியங்கள்! கல்லூரி மாணவர்கள் அசத்தல்| Dinamalar

தமிழ்நாடு

பின்னலாடை துறை வரலாறு பேசும் சுவர் ஓவியங்கள்! கல்லூரி மாணவர்கள் அசத்தல்

Updated : அக் 19, 2020 | Added : அக் 19, 2020
Share
திருப்பூர்:திருப்பூர் பின்னலாடை துறையின் வரலாறு கூறும் சுவர் ஓவியம் வரைந்து, நிப்ட் டீ கல்லுாரி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.மகாராஷ்டிராவில் வார்லி ஓவியம் பிரசித்திபெற்றது. இந்த ஓவிய முறையைப் பின்பற்றி, திருப்பூர் முதலி பாளையம் நிப்ட் - டீ கல்லுாரி மாணவர்கள் சஞ்சய், வசந்த், சபரீஸ், பிரகாஷ், கவின், மணீஸ் கூட்டாக இணைந்து, கல்லுாரி சுவற்றில்,சிவப்பு, வெள்ளை வண்ணங்களில்,
 பின்னலாடை துறை வரலாறு பேசும் சுவர் ஓவியங்கள்! கல்லூரி மாணவர்கள் அசத்தல்

திருப்பூர்:திருப்பூர் பின்னலாடை துறையின் வரலாறு கூறும் சுவர் ஓவியம் வரைந்து, நிப்ட் டீ கல்லுாரி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.மகாராஷ்டிராவில் வார்லி ஓவியம் பிரசித்திபெற்றது.
இந்த ஓவிய முறையைப் பின்பற்றி, திருப்பூர் முதலி பாளையம் நிப்ட் - டீ கல்லுாரி மாணவர்கள் சஞ்சய், வசந்த், சபரீஸ், பிரகாஷ், கவின், மணீஸ் கூட்டாக இணைந்து, கல்லுாரி சுவற்றில்,சிவப்பு, வெள்ளை வண்ணங்களில், திருப்பூர் பின்னலாடை துறையின் வரலாற்றை, அழகிய ஓவியமாக வரைந்துள்ளனர்.
பஞ்சு மற்றும் நுால் உற்பத்தி; துணி தயாரிப்பு; பல்வேறு வண்ணங்களில் துணிக்கு சாயமேற்றும் காட்சி; துணியை வெட்டி, தைத்து, அழகிய ஆடையாக மாற்றுதல்; உற்பத்தி செய்த ஆடைகளை துறைமுகங்களுக்கு கொண்டுசென்று, வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்தல், திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்ட ஆடை, உலகின் பேஷன் நகரான பாரீசுக்கு சென்றடைவது போலவும்; அங்கிருந்து உலகம் முழுவதும் எடுத்துச்செல்லப்படுவது போன்ற காட்சிகளை, மிக நுட்பமாக, சிறிய ஓவியங்கள் மூலம் விளக்கியுள்ளனர்.
ஆடை உற்பத்தி என்பது, சங்கிலித்தொடர் போன்றது. நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி என பல்வேறு துறையினரின் கூட்டு முயற்சியாலேயே ஆயத்த ஆடைகள் முழுமை பெறுகின்றன.இதை உணர்த்தும் வகை யில், தொழில்முனைவோர் ஒருவரை ஒருவர் கரம்கோர்த்து நிற்பது போன்ற காட்சிகளை உள்ளடக்கிய, உற்பத்தி சங்கிலி கோர்க்கப்பட்ட வட்டத்தையும் வரைந்துள்ளனர்.
கல்லுாரி முதன்மை டிசைனர் பூபதி விஜய் கூறுகையில், 'ஓவியம், கல்லுாரி சுவரில், நிரந்தரமாக இருக்கும்வகையில், அக்ரலிக் பெயின்ட் கொண்டு வரையப்பட்டுள்ளது.இந்த ஓவியங்களை தினமும் பார்க்கும்போது, மாணவர்கள் மத்தியில், கடின முயற்சியால், தாங்களும் தொழில்முனைவோராக மாறவேண்டும் என்கிற ஆர்வம் துாண்டப்படும்' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X