காதில் பூசுற்றிய தி.மு.க., பதிலடி கொடுத்த அ.தி.மு.க.,| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காதில் பூசுற்றிய தி.மு.க., பதிலடி கொடுத்த அ.தி.மு.க.,

Added : அக் 19, 2020
Share
வத்தலக்குண்டு: 'விராலிப்பட்டியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி நகரும் ரேஷன் கடை தங்களால் தான் சாத்தியமானது' என காதில் பூச்சுற்றிய தி.மு.க.,வினருக்கு, அ.தி.மு.க.,வினர் திட்டத்தை துவக்கி வைத்து பதிலடி கொடுத்தனர்.தமிழக அரசு ரேஷன் பொருட்கள் வாங்க அதிக துாரம் பயணம் செய்பவர்களுக்கு உதவியாக அம்மா நகரும் ரேஷன் கடை திட்டத்தை உருவாக்கியது. விராலிப்பட்டியைச் சுற்றியுள்ள நான்கு

வத்தலக்குண்டு: 'விராலிப்பட்டியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி நகரும் ரேஷன் கடை தங்களால் தான் சாத்தியமானது' என காதில் பூச்சுற்றிய தி.மு.க.,வினருக்கு, அ.தி.மு.க.,வினர் திட்டத்தை துவக்கி வைத்து பதிலடி கொடுத்தனர்.தமிழக அரசு ரேஷன் பொருட்கள் வாங்க அதிக துாரம் பயணம் செய்பவர்களுக்கு உதவியாக அம்மா நகரும் ரேஷன் கடை திட்டத்தை உருவாக்கியது. விராலிப்பட்டியைச் சுற்றியுள்ள நான்கு கிராமங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த எம்.எல்.ஏ., தேன்மொழி பரிந்துரைத்தார்.தி.மு.க.,வினரோ அத்திட்டம் இப்பகுதிக்கு வர தாங்களே காரணம் என, மாவட்ட செயலாளர் செந்தில்குமார் சகிதமாக நலத்திட்ட உதவிகளை வழங்கி கிராமத்தினர் காதில் பூ சுற்றினர். உடனே அ.தி.மு.க.,வினர் நகரும் ரேஷன் கடையை எம்.எல்.ஏ., தேன்மொழியை துவக்கச் செய்து அரசின் திட்டத்தை விளக்கி தி.மு.க.,வினருக்கு பதிலடி கொடுத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X