மாணவர்களை தொடர்ந்து ஆசிரியர்களுக்கும் கொரோனா| Dinamalar

இந்தியா

மாணவர்களை தொடர்ந்து ஆசிரியர்களுக்கும் கொரோனா

Added : அக் 19, 2020
Share
புதுச்சேரி : பள்ளி மாணவர்களை தொடர்ந்து ஆசிரியர்களும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 8 ம்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் நடந்து வருகின்றது. ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வந்து சந்தேகத்தை தீர்த்து செல்லுகின்றனர். பள்ளி வரும் மாணவர்களுக்கும் இப்போது

புதுச்சேரி : பள்ளி மாணவர்களை தொடர்ந்து ஆசிரியர்களும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 8 ம்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் நடந்து வருகின்றது. ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வந்து சந்தேகத்தை தீர்த்து செல்லுகின்றனர். பள்ளி வரும் மாணவர்களுக்கும் இப்போது கொரோனா தொற்று பரவி வருகின்றது. இதுவரை அரசு பள்ளிகளை சேர்ந்த மூன்று மாணவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சுசிலாபாய் பள்ளி ஆசிரியர் ஒருவரும், இந்திரா நகர் அரசு மேனிலைப்பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள்,சோரப்பட்டு பள்ளியில் ஒரு ஆசிரியர் என நான்கு ஆசிரியர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு கூறும்போது, கொரோனா பணியில் உள்ள ஆசிரியர்கள் வகுப்பிற்கு திரும்ப சொல்லியுள்ளோம். அதற்கு முன்னதாக அவர்கள் கொரோனா டெஸ்ட் எடுக்க கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆசிரியர் ஒருவருக்கு தொற்று உறுதியானது.இந்திரா நகர்,சோரப்பட்டு ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து இன்னும் தகவல் வரவில்லை. பள்ளிகளில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அனைத்து முன் எச்சரிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X