வேளாண் மசோதா விளக்கக் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் மசோதா விளக்கக் கூட்டம்

Added : அக் 19, 2020
Share
கடலுார் : பா.ஜ., கடலுார் கிழக்கு மாவட்ட விவசாய அணி செயற்குழு கூட்டம் மற்றும் மத்திய அரசின் வேளாண் மசோதா விளக்க அரங்க கூட்டம், கடலுாரில் நடந்தது. விவசாய அணி மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மணிகண்டன், மாவட்ட பார்வையாளர் விநாயகம், மாநில செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், அருள், நீர் மேலாண்மை திட்டக்குழு குமார் தாமோதரன், விழுப்புரம் மண்டல

கடலுார் : பா.ஜ., கடலுார் கிழக்கு மாவட்ட விவசாய அணி செயற்குழு கூட்டம் மற்றும் மத்திய அரசின் வேளாண் மசோதா விளக்க அரங்க கூட்டம், கடலுாரில் நடந்தது.

விவசாய அணி மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மணிகண்டன், மாவட்ட பார்வையாளர் விநாயகம், மாநில செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், அருள், நீர் மேலாண்மை திட்டக்குழு குமார் தாமோதரன், விழுப்புரம் மண்டல பெருமாள் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலர் ராமசாமி, பொருளாளர் முருகவேல் வரவேற்றனர். விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.

மாநில பொதுச் செயலர் விஜயராகவன், விழுப்புரம் மண்டல பொறுப்பாளர் ரவிச்சந்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட பொதுச் செயலர்கள் விஜயரங்கம், பாஸ்கர், அக்னி கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் வினோத்குமார், மாவட்ட செயலர்கள் ராமமூர்த்தி, முருகன், நாகராஜன், வேல்முருகன், சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். கடலுார் நகர தலைவர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X