சீமை கருவேல மரங்களின் பிடியில் கவுசிகா நதி: நிலத்தடி நீர் குறையும் அபாயம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சீமை கருவேல மரங்களின் பிடியில் கவுசிகா நதி: நிலத்தடி நீர் குறையும் அபாயம்

Added : அக் 19, 2020
Share
பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே கவுசிகா நதியில் நிலத்தடி நீருக்கு பாதிப்பு தரும் சீமை கருவேல மரங்களால் விவசாயத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.நீர் வளத்தை முற்றிலும் வற்றச்செய்யும் வல்லமை கொண்ட சீமை கருவேல மரங்கள், வேளாண்மைக்கு எதிரான நச்சுத்தன்மை உடைய தாவரமாக கருதப்படுகிறது. தமிழகத்தில் பெருகிவிட்ட இந்த வகை மரங்களை
 சீமை கருவேல மரங்களின் பிடியில் கவுசிகா நதி: நிலத்தடி நீர் குறையும் அபாயம்

பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே கவுசிகா நதியில் நிலத்தடி நீருக்கு பாதிப்பு தரும் சீமை கருவேல மரங்களால் விவசாயத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.நீர் வளத்தை முற்றிலும் வற்றச்செய்யும் வல்லமை கொண்ட சீமை கருவேல மரங்கள், வேளாண்மைக்கு எதிரான நச்சுத்தன்மை உடைய தாவரமாக கருதப்படுகிறது. தமிழகத்தில் பெருகிவிட்ட இந்த வகை மரங்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குருடி மலையில் கவுசிகா நதி உற்பத்தியாகிறது. இது கிழக்கு நோக்கி பயணித்து, பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ். குளம், அன்னுார் ஒன்றியங்களை கடந்து, திருப்பூர் வட்டாரத்தில் உள்ள பேரூராட்சி, ஊராட்சிகள் வழியாக, 35 கி.மீ., பயணித்து, திருப்பூர் அருகே நொய்யல் நதியில் கலக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன், இந்நதி நொய்யல் நதிக்கும், பவானி நதிக்கும் இணைப்பாக இருந்ததுடன், பல குளம், குட்டைகளுக்கு நீராதாரமாக இருந்து வந்தது.ஆனால், இன்று வறண்டு, குப்பை மேடாக காட்சியளிப்பதுடன், பல இடங்களில் ஆக்கிரமிப்பிலும் சிக்கியுள்ளது. சீமை கருவேல மரங்கள் பெருகி விவசாயம் பாதிக்கப்படும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில்,'கவுசிகா நதி, ஆக்கிரமிப்புகளால், நதி என்ற தனது சிறப்பை இழந்து, பள்ளமாக சுருங்கி விட்டது. தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைக்காலங்களில் பெய்யும் மழைநீர் மட்டும் வெள்ளமாக ஓடும். சீமை கருவேல மரங்களும் ஏராளமாக முளைத்துள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயத்துக்கு பெரும் பாதிப்பு உருவாகும் நிலை உள்ளது.கவுசிகா நதியை சுத்தப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, தடையில்லாமல் நீர் செல்ல வழி ஏற்படுத்தினால் மட்டுமே, இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர வழி ஏற்படும். மாவட்ட நிர்வாகம் இதற்கு தீர்வுகாண வேண்டும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X