அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமியிடம் ஸ்டாலின் துக்கம் விசாரிப்பு

Updated : அக் 19, 2020 | Added : அக் 19, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement
சென்னை: முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவையொட்டி, திமுக தலைவர் ஸ்டாலின், சென்னை பசுமைவழி சாலையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.தமிழக முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள், 93, உடல்நலக்குறைவால் அக்.,12ம் தேதி காலமானார். அவரது உடலுக்கு பழனிசாமி, அதிமுக அமைச்சர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர்
DMK, Stalin, TamilnaduCM, Palanisamy, திமுக, தலைவர், ஸ்டாலின், முதல்வர், பழனிசாமி, சந்திப்பு, தாயார், மறைவு, ஆறுதல்

சென்னை: முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவையொட்டி, திமுக தலைவர் ஸ்டாலின், சென்னை பசுமைவழி சாலையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

தமிழக முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள், 93, உடல்நலக்குறைவால் அக்.,12ம் தேதி காலமானார். அவரது உடலுக்கு பழனிசாமி, அதிமுக அமைச்சர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. முதல்வரின் தாயார் மறைவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.


latest tamil news



இந்நிலையில், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் சென்றார். தாயார் தவுசாயம்மாள் மறைவு குறித்து கேட்டறிந்தார். அவருடன் பொதுச்செயலர் துரைமுருகன், துணை பொதுச்செயலர் பொன்முடி சென்றனர். பின்னர், அங்குள்ள பழனிசாமி தாயார் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் பழனிசாமியிடம் பா.ஜ., தலைவர் முருகன், அவரது தாயார் மறைவு குறித்து துக்கம் விசாரித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. Mariyappan - Tenkasi,இந்தியா
19-அக்-202022:24:14 IST Report Abuse
K. Mariyappan வரவேற்கின்றோம்....
Rate this:
Cancel
Logu - Karur,இந்தியா
19-அக்-202020:56:53 IST Report Abuse
Logu வரவேற்கத்தக்கது
Rate this:
Cancel
Ezekiel - Chennai,இந்தியா
19-அக்-202019:54:43 IST Report Abuse
Ezekiel எதிர் கட்சி என்றாலும் துக்க நேரத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது அரசியல் நாகரிகம்... எதிர் கட்சியாக இருந்தாலும் தமிழர் நலன் சார்ந்த விஷயங்களில் ஒன்றாக சேர்ந்து செயல்பட்டால் திமுக அல்லது அதிமுக வை தவிர வேறு எந்த கட்சியும் தமிழகத்தில் மலர வாய்ப்பில்லை..வளர்க தமிழகம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X