தமிழ் பேச விரும்பும் கங்கனா!

Added : அக் 19, 2020
Share
Advertisement
தமிழக முன்னாள் முதல்வர், மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்து வருகின்றனர்.தலைவி என்ற பெயரில், தமிழில் வெளியாக உள்ள இந்த படத்தில், ஜெயலலிதாவாக, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்து வருகிறார்.சண்டிகரில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. விரைவில் தமிழகத்திலும் படிப்பிடிப்பு நடக்கவுள்ளது. ஜெயலலிதாவைப் போலவே குணம் உள்ளவர் கங்கனா. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை
 டில்லி உஷ், கங்கணா ரணாவத், தமிழகபாஜ, குஷ்பு, பிரதமர்மோடி,

தமிழக முன்னாள் முதல்வர், மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்து வருகின்றனர்.தலைவி என்ற பெயரில், தமிழில் வெளியாக உள்ள இந்த படத்தில், ஜெயலலிதாவாக, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்து வருகிறார்.சண்டிகரில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. விரைவில் தமிழகத்திலும் படிப்பிடிப்பு நடக்கவுள்ளது. ஜெயலலிதாவைப் போலவே குணம் உள்ளவர் கங்கனா. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில், பரபரப்பாக கருத்து தெரிவித்து, மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் மற்றும் அவரது மகன் ஆதித்யாவை விமர்சித்தார். இதையடுத்து, மும்பையில் இவரது வீட்டின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. அதன் பின், உத்தவை மேலும் கடுமையாக விமர்சித்தார். கங்கனாவுக்கு எதிராக போராட்டத்தை நடத்தியது சிவசேனா. ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல், ஜெயலலிதா போலவே, தன் கொள்கையில் பிடிவாதமாக இருக்கிறார். 'தலைவி படத்தில் நானே தமிழ் வசனம் பேசி நடிப்பேன். எனக்கு டப்பிங் வேண்டாம்' என, கூறி விட்டார். இதற்காக, தமிழில் பேசுவதற்கு முறையாக கற்று வருகிறார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன், இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர், படக் குழுவினர்.


தமிழக பா.ஜ.,வில் சலசலப்பு!


தமிழகத்தைச் சேர்ந்த, பா.ஜ., மூத்த தலைவர்கள், உள்ளுக்குள் குமுறுகின்றனர். இந்த வயதான தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். சமீபத்தில், நடிகை குஷ்பு கட்சியில் சேர்ந்தது, இவர்களது கோபத்தை அதிகமாக்கிவிட்டது.'பா.ஜ.,வை வசை பாடியவர்களையும், ரவுடிகளையும் கட்சியில் சேர்த்து, மக்களிடையே கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகின்றனர்' என, புலம்புகின்றனர். இது தொடர்பாக புகார் தெரிவிக்க, பிரதமரையோ, கட்சியின் மூத்த தலைவர்களையோ சந்திக்க, டில்லிக்கு செல்வது இல்லை என்பதிலும், இவர்கள் உறுதியாக உள்ளனர். மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் சென்று, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்து, இந்த விஷயங்களை கூறவும் திட்டமிட்டுள்ளனர். ஆனால், டில்லி மேலிட தலைவர்களோ, இவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை ஆகியோர், தலைவராக இருந்தபோது, இந்த அளவில் யாரும் கட்சியில் சேரவில்லை என்கின்றனர், அவர்கள். 'இளம் தலைவர் ஒருவர், பரபரப்பாக கட்சி பணியாற்றும்போது, மூத்த தலைவர்களுக்கு எரிச்சல் இருக்கத் தானே செய்யும்' என்கின்றனர்.


காணாமல் போன அடிக்கல்!


சமீபத்தில் ஹிமாச்சல பிரதேசத்தில், உலகின் மிக நீண்ட சுரங்க பாதையை திறந்து வைத்தார் மோடி. இந்த பாதை, மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. இதை, அனைத்து மீடியாக்களிலும், 'மோடி அரசின் சாதனை' என, அரசு விளம்பரம் செய்தது.ஆனால், 2010ல் இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியவர், காங்., ஆட்சியில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங். இவரால் வைக்கப்பட்ட அந்த அடிக்கல், இப்போது காணப்படவில்லை. மோடி திறந்து வைத்தது மட்டுமே, கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. இது காங்கிரசுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்திவிட்டது. பா.ஜ., அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து போராட்டம் நடத்த முடிவெடுத்து, ஹிமாச்சல் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர் காங்கிரஸ் தலைவர்கள். இதையடுத்து, இந்த அடிக்கல்லை, போலீசார் கண்டுபிடித்தனர். சுரங்க பாதையை கட்டிய நிறுவனத்தின் குடோனில், ஏதோ ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த அடிக்கல் மீட்கப்பட்டது. ஆனால், இந்த அடிக்கல், உடனடியாக சுரங்க பாதையின் வாசலில் வைக்கப்படாது என்கின்றனர் அதிகாரிகள். டில்லியிலிருந்து உத்தரவு வந்தால் தான், காங்கிரஸ் கோரிக்கை நிறைவேற்றப்படுமாம்.


இலங்கை பிரச்னை கை கொடுக்குமா?


தமிழக சட்டசபை தேர்தலுக்காக, அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை தமிழர் பிரச்னையை வைத்து, தி.மு.க., தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கு கிடுக்கிப்பிடி போட, பா.ஜ., மேலிடம் தயாராகி வருகிறது. மோடி பிரதமர் பதவியில் அமர்ந்த பின், முதலில் இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்திற்கு சென்றார்.பிரதமரின் இந்த பயணம், அங்கு தமிழ் பள்ளிகளில், தமிழ் மாணவர்களுடன் மோடி பேசுவது ஆகிய, 'வீடியோ'க்களை, பா.ஜ., மேலிடம் தயார் செய்துள்ளது.தமிழக மீனவர்களின் நலனுக்காக, இலங்கையுடன், பா.ஜ., அரசு செயல்படுத்திய திட்டங்களும், இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு நிமிடம் ஓடக் கூடிய இந்த வீடியோவை பார்த்து, பிரதமர், 'ஓகே' கூறியுள்ளாராம். தேர்தலுக்கு முன், இந்த வீடியோக்கள் வெளியாக உள்ளன. இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது, மத்தியில், காங்., கூட்டணி அரசில், தி.மு.க., அங்கம் வகித்தது.அப்போது, தி.மு.க., வினர், வாய் மூடி இருந்ததை, தமிழக மக்களுக்கு நினைவுபடுத்தும் வகையில், இந்த வீடியோக்களை வெளியிட, பா.ஜ., முடிவு செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X