சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்வேலியில் சிக்கி யானை பலி: புதைத்து மறைத்த 3 பேர் கைது

Updated : அக் 20, 2020 | Added : அக் 19, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
ஊட்டி: ஊட்டி அருகே மின்சாரம் தாக்கி யானை கொல்லப்பட்ட சம்பவத்தில், மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.நீலகிரி வன கோட்டம், ஊட்டி வடக்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட சின்னகுன்னூர் பகுதியில், உருளை கிழங்கு பயிர் செய்த தோட்டத்தில், மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. வனக்காவலர் மகேந்திரன் ஆய்வு செய்ய சென்றபோது, துர்நாற்றம் வீசியது. சந்தேகமடைந்து, அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
மின்சாரம், யானை, பலி, உயிரிழப்பு

ஊட்டி: ஊட்டி அருகே மின்சாரம் தாக்கி யானை கொல்லப்பட்ட சம்பவத்தில், மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி வன கோட்டம், ஊட்டி வடக்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட சின்னகுன்னூர் பகுதியில், உருளை கிழங்கு பயிர் செய்த தோட்டத்தில், மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. வனக்காவலர் மகேந்திரன் ஆய்வு செய்ய சென்றபோது, துர்நாற்றம் வீசியது. சந்தேகமடைந்து, அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். உதவி வனப்பாதுகாவலர் சரவணன் தலைமையில், வனத்துறையினர் சம்பவ பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர். பெந்துார் பகுதியை சேர்ந்த விக்னேஷ்வரன்,40, கோபாலகிருஷ்ணன், 21 உட்பட மூவர் பயிர் செய்த இடத்தில், விலங்குகள் வருவதை தடுக்க மின்வேலி அமைத்துள்ளனர். அதில், 20 வயது ஆண் யானை இறந்துள்ளது.

யானை உடலை அப்பகுதியில் குழிதோண்டி புதைத்துள்ளனர். இதையடுத்து, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.உதவி வனப்பாதுகாவலர் சரவணன் கூறுகையில்,''மின்சாரம் பாய்ந்து, யானை இறந்த இடத்தில், மண்ணை தோண்டி புதைத்து மறைத்துள்ளது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.

மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா கூறுகையில்,''பிரேத பரிசோதனைக்குப் பின், முழு தகவல் தெரியவரும். குற்றவாளிகள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


latest tamil news

பிரேத பரிசோதனை


இந்நிலையில், இன்று நீலகிரி கோட்ட உதவி வனப்பாதுகாவலர் சரவணன், நீலகிரி வனக்கோட்ட அலுவலர் குருசாமி மேற்பார்வையில், யானை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.


latest tamil news
கோவை, நீலகிரியை சேர்ந்த கால்நடை டாக்டர்கள், வனத்துறையினர் இணைந்து, யானை கொல்லப்பட்டது எப்படி என்பது குறித்து பிரேத பரிசோதனை செய்தனர். அதில், யானை கடந்த 14ம் தேதி கொல்லப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-அக்-202003:11:10 IST Report Abuse
ருத்ரா கல்லாய் போன மனித மனம். இதற்கு இவன் இல்லாமலேயே போகலாம் கொடுமை.
Rate this:
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
20-அக்-202001:19:41 IST Report Abuse
rajesh அந்த மகா பாதக செயலை செய்தவன் குடும்பம் வம்சம் அழிந்து போகும்....... மிகவும் மோசமாக அழிந்து போகும்
Rate this:
Cancel
19-அக்-202023:02:55 IST Report Abuse
ஆரூர் ரங் பிற நாடுகளில் மின்வேலி என்றால் 40 வோல்ட் மின்சாரத்தையே பயன்படுத்துவர் எனக் கேள்விப்பட்டுள்ளேன் . அது மிருகங்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்து விரட்டுமே தவிர கொல்லாது. 👹இங்கு சட்டவிரோத 230 வோல்ட் பயன்பாடு ஆபத்தானது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X