சீன அதிகாரியால் தாக்கப்பட்டாரா தைவான் அதிகாரி? பொங்கி எழும் தைவான்; மறுக்கும் சீனா..!

Updated : அக் 20, 2020 | Added : அக் 19, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
சீனாவுக்கும் தைவானுக்கும் மோதல் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது. முன்னதாக தேசிய பாதுகாப்பு சட்டம் மூலமாக தைவானை சீனா ஆக்கிரமிக்க முயன்றது. இதனையடுத்து சீனா-தைவான் கடற்பரப்பில் இருநாட்டு கப்பற்படைகளும் மோதிக்கொண்டன. தற்போது ஃபிஜி தீவில் சீனா-தைவான் அதிகாரிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் இரு நாடுகளின் வெளியுறவுத்துறைகள் மத்தியில் சலசலப்பை

சீனாவுக்கும் தைவானுக்கும் மோதல் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது. முன்னதாக தேசிய பாதுகாப்பு சட்டம் மூலமாக தைவானை சீனா ஆக்கிரமிக்க முயன்றது. இதனையடுத்து சீனா-தைவான் கடற்பரப்பில் இருநாட்டு கப்பற்படைகளும் மோதிக்கொண்டன.



latest tamil news



தற்போது ஃபிஜி தீவில் சீனா-தைவான் அதிகாரிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் இரு நாடுகளின் வெளியுறவுத்துறைகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபிஜி தீவில் தைவான் தனது தேசிய தினத்தை கொண்டாடியது. இதில் தைவான் மக்கள் மற்றும் தைவான் தூதரக உயர் அதிகாரிகள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருந்த நிலையில் அந்த தீவில் உள்ள சீன தூதரகத்தில் பணியாற்றும் இரண்டு அதிகாரிகள் அனுமதி மறுக்கப்பட்டும் கலந்து கொண்டனர்.
அவர்கள் சீன தூதரக அதிகாரிகள் என நிரூபணம் ஆன பின்னர் நிகழ்ச்சி நடக்கும் இடத்திலிருந்து வெளியே செல்ல தைவான் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அப்போது சீன அதிகாரிகள் தைவான் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதில் ஒரு தைவான் அதிகாரிக்கு தலையில் பலமாக அடிபட்டது.


latest tamil news



இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த சம்பவத்துக்கு தைவான் வெளியுறவுத்துறை சீனாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உயரதிகாரிகள் சந்திப்பில் சீனா வேண்டுமென்றே இதுபோன்ற வன்முறை செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என தைவான் வெளியுறவுத்துறை எச்சரித்தது. இந்த சம்பவம் குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் லி ஜியான் கேட்டபோது தைவான் சீனாவை குறைகூற இதுபோன்ற ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இருநாடுகளிடையே மோதலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karthikeyan - coimbatore,இந்தியா
20-அக்-202010:22:34 IST Report Abuse
karthikeyan அட வெட்கங்கெட்ட கூவ சீனா கூபிடாத விசேஷத்துக்கு போயிருக்கியே நீயெல்லாம் எப்படி உலகத்தை ஆளுவ
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
20-அக்-202003:55:20 IST Report Abuse
blocked user சீனா கடைசியில் தைவானிடம் அடி வாங்கப்போகிறது....
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
20-அக்-202003:04:14 IST Report Abuse
NicoleThomson சீனா அப்படியே குடும்ப கழகத்திடம் பயிற்சி பெற்றிருக்கும் போல?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X