சீர்திருத்தங்களில் சீர்திருத்தம்: பிரதமர் மோடி பெருமிதம்

Updated : அக் 21, 2020 | Added : அக் 19, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
மைசூரு : ''நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த, 67 மாதங்களில், அதிக அளவு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளில் சீர்திருத்தம் செய்வதில் புதிய சீர்திருத்தம் செய்துள்ளோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் குறிப்பிட்டார். பட்டமளிப்பு விழாகர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மாநிலத்தின் மைசூருவில்
சீர்திருத்தங்களில் சீர்திருத்தம்: பிரதமர் மோடி பெருமிதம்

மைசூரு : ''நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த, 67 மாதங்களில், அதிக அளவு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளில் சீர்திருத்தம் செய்வதில் புதிய சீர்திருத்தம் செய்துள்ளோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் குறிப்பிட்டார்.


பட்டமளிப்பு விழாகர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மாநிலத்தின் மைசூருவில் உள்ள மைசூரு பல்கலையின் பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது.

இதில், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்; இதில், மோடி பேசியதாவது:கடந்த, 67 மாதங்களில் பல்வேறு துறைகளில் நாம் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். கல்வி, வேளாண்மை என, சீர்திருத்த நடவடிக்கைகளை பார்க்காத துறைகளே இல்லை என கூறலாம்.

நாட்டின் வளர்ச்சியை இலக்காக வைத்தும், இந்த சகாப்தத்தை, இந்தியாவின் ஆண்டாக உருவாக்கும் நோக்கத்திலும் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு முன், நாட்டில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், ஒரே சமயத்தில், பல்வேறு துறைகளில் சீர்திருத்தம் செய்யப்பட்டதில்லை. அந்த வகையில், சீர்திருத்தங்கள் செய்வதில், புதிய சாதனையைப் புரிந்துள்ளோம்.கடந்த, ஆறு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல சீர்திருத்த நடவடிக்கைகள், நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றுள்ளன.

புதியக் கல்விக் கொள்கையானது, உலகத் தரம் வாய்ந்த கல்வி கிடைப்பதை உறுதி செய்கிறது. புதிய வேளாண் மசோதாக்கள், விவசாயிகளின் வாழ்க்கையில் மிகப் பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும். தொழிலாளர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் புதிய சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, வேளாண்மை, விண்வெளி, ராணுவம், விமானப் போக்குவரத்து என, பல துறைகளும், சீர்திருத்த நடவடிக்கைகளை சந்தித்துள்ளன.


திறமைஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை, வரி முறையில் செய்யப்பட்ட சீர்திருத்தம். வருமான வரி முறையில் இருந்த சிக்கல் நீக்கப்பட்டு, எளிமைபடுத்தப்பட்டுள்ளது.
அதனால், வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.வங்கிகளில் நேரடியாக மானியத்தை செலுத்தும் நடவடிக்கைகளால், பொது வினியோக முறை மேம்பட்டு உள்ளது.

ரியஸ் எஸ்டேட் துறையில் புதிய கட்டுப்பாட்டு அமைப்பு அறிமுகத்தால், விற்போர் மற்றும் வாங்குவோரின் நலன் பாதுகாக்கப்படுகிறது.கல்வித் துறையில் செய்துள்ள மாற்றங்கள், உலகின் அறிவு மையமாக இந்தியாவை மாற்றும். இளைஞர்களிடையே போட்டியை உருவாக்கும். அதன் மூலம் சிறந்த திறமைகள் வெளியே வரும். ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - எய்ம்ஸ் போன்ற உயர் கல்வி நிறுவனங்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் திறக்கப்பட்டுள்ளது, இதற்கு சான்று.மாணவர்கள், தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதுடன், அதை மேம்படுத்தவும் தயாராக இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.


Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
20-அக்-202004:01:43 IST Report Abuse
blocked user நீதித்துறையை சீர்திருத்த வேண்டும். கொலீஜியம் முறைக்கு முடிவு கட்ட வேண்டும். நீதிபதிகள் முறைகேடுகளில் ஈடுபட்டால் வாழ்நாள் முழுவதும் நீதித்துறையில் வேலை செய்ய தடை விதிக்க வேண்டும். அது தவிர அவர்களின் சொத்துக்களை தேசியமயமாக்க வேண்டும்.
Rate this:
ganesha - tamilnadu,இந்தியா
20-அக்-202017:13:14 IST Report Abuse
ganeshaரொம்ப பிரமாதமான கருத்து .ஜுட்ஜ்ன்ன அவ்வளவு நல்லவர்களாக இருக்கணும். மேல் கோர்ட்ல நேர்மறையான திருப்பு வழங்கினால் அந்த கீழ் கோர்ட் ஜட்ஜ்க்கு அந்த மேல்முறையீட்டு செலவை அபராதமாக வழங்கவேண்டும். அதை தவிர அவருக்கு மூணுமாதம் முன்னாடியே ஓய்வு குடுக்கணும். அதாவது நாலு கேஸ்ல அவர் கொடுத்து தீர்ப்பு தவறுன்னு மேல் கோர்ட் ப்ரோவ் பண்ணிதுன்னாக்க அவரை ஒரு வருட...
Rate this:
ganesha - tamilnadu,இந்தியா
20-அக்-202017:16:29 IST Report Abuse
ganeshaIn judiciary there should zero error like in ship or flights. error should not be tolerated at all. they should be punished severely and completely eradicated from the tem at all. ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X