ராஜஸ்தானில் கெலாட் - பைலட் மோதல் உச்சக்கட்டம்

Updated : அக் 21, 2020 | Added : அக் 19, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
ஜெய்ப்பூர்,: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையேயான மோதல் மீண்டும் துவங்கியுள்ளது. ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்., அரசு அமைந்துள்ளது. கெலாட்டுக்கு எதிராக, துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி துாக்கினார். சமாதானம்போதிய, எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு இல்லாததால், கெலாட்டுக்கு எதிராக, பைலட்டால்
Congress, Ashok Gehlot, Sachin Pilot, Rajasthan, கெலாட், பைலட், மோதல், உச்சக்கட்டம், ராஜஸ்தான்

ஜெய்ப்பூர்,: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையேயான மோதல் மீண்டும் துவங்கியுள்ளது.

ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்., அரசு அமைந்துள்ளது. கெலாட்டுக்கு எதிராக, துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி துாக்கினார்.


சமாதானம்


போதிய, எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு இல்லாததால், கெலாட்டுக்கு எதிராக, பைலட்டால் எதுவும் செய்ய முடியவில்லை.கட்சியின் தலைமை அறிவுறுத்தலால், அவர் சமாதானம்அடைந்தார். கடந்த சில மாதங்களாக இரு தரப்புகளும் அமைதியாக உள்ளன. ஆனால், உள்ளுக்குள் புகைச்சல் தொடர்கிறது.சமீபத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள், பைலட்டை எரிச்சல் ஊட்டியுள்ளன.

அவரது ஊடக மேலாளரான லோகேந்திர சிங் மீது, எம்.எல்.ஏ.,க்கள் தொலைபேசிகளை, ஒட்டுக் கேட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. 'இதற்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என, கெலாட் கூறியுள்ளார். ஆனால், உள்துறை அவரிடம் உள்ளதால், சீண்டிப் பார்ப்பதாக, பைலட் தரப்பில் நம்பப்படுகிறது.அதேபோல், ராஜஸ்தான் மாநிலத் தேர்வாணைய உறுப்பினராக, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவராக இருந்த குமார் விஸ்வாசின் மனைவி, மஞ்சு சர்மா நியமிக்கப்பட்டு உள்ளார்.


எரிமலை


கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், காங்., முன்னாள் தலைவரான ராகுலுக்கு எதிராக போட்டியிட்டவர் குமார் விஸ்வாஸ். இதனால், இந்த விவகாரத்தை, கெலாட்டுக்கு எதிராக திருப்ப, பைலட் தரப்பு முயற்சித்து வருகிறது.பைலட்டை சமாதானப்படுத்த, அவரது ஆதரவாளர்களில் ஒருவருக்கு, இந்தப் பதவியை தந்திருக்கலாம் என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

'பைலட் அமைதியாக இருப்பதாக கூறினாலும், திரைமறைவில் பல்வேறு காரியங்கள் செய்து வருகிறார். அவர் ஒரு உறங்கும் எரிமலை. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். அதனால், அவருடைய ஆதரவாளர்களுக்கு எந்தப் பதவியும் தரத் தயாராக இல்லை' என, கெலாட் தரப்பில் கூறப்பட்டுள்ளது.இரு தரப்புக்கு இடையே பிரச்னை முழுதுமாக தீரவில்லை. அதனால், எப்போது வேண்டுமானாலும், மீண்டும் பிரச்னை வெடிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.Balasubramanian - Chennai,இந்தியா
20-அக்-202023:14:16 IST Report Abuse
P.Balasubramanian Give Rahul special honour of leading the force in the border and get the commitment about when he will drive the chineseb
Rate this:
Cancel
thulakol - coimbatore,இந்தியா
20-அக்-202021:01:29 IST Report Abuse
thulakol இவனுக திருந்தவே மாட்டாங்கள்
Rate this:
Cancel
KavikumarRam - Indian,இந்தியா
20-அக்-202019:26:17 IST Report Abuse
KavikumarRam எப்படி இருந்தாலும் பாஜக மேல பழியப்போடப்போறானுங்க.பாஜக உண்மையிலேயே இப்போது இறங்கி அடிக்கணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X