'டி.ஆர்.பி.,வழக்கு: 'சம்மன்'அனுப்பிய பின் அர்னாப்பை விசாரிக்கலாம்

Updated : அக் 21, 2020 | Added : அக் 19, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
மும்பை: 'டி.ஆர்.பி., மோசடி தொடர்பான வழக்கில், பிரபல பத்திரிகையாளர், அர்னாப் கோஸ்வாமியை சேர்க்க விரும்பினால், முதலில் அவருக்கு, 'சம்மன்' அனுப்ப வேண்டும்' என, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.'டி.ஆர்.பி., எனப்படும் தொலைக்காட்சி பார்வையாளர் எண்ணிக்கையை கணக்கிடும், 'ரேட்டிங்' முறையில் மோசடி நடந்ததாக சமீபத்தில் புகார் எழுந்தது. இது தொடர்பாக, 'ரிபப்ளிக்
'சம்மன்' அனுப்பிய பின்   அர்னாப் கோஸ்வாமியை  விசாரிக்கலாம்

மும்பை: 'டி.ஆர்.பி., மோசடி தொடர்பான வழக்கில், பிரபல பத்திரிகையாளர், அர்னாப் கோஸ்வாமியை சேர்க்க விரும்பினால், முதலில் அவருக்கு, 'சம்மன்' அனுப்ப வேண்டும்' என, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'டி.ஆர்.பி., எனப்படும் தொலைக்காட்சி பார்வையாளர் எண்ணிக்கையை கணக்கிடும், 'ரேட்டிங்' முறையில் மோசடி நடந்ததாக சமீபத்தில் புகார் எழுந்தது. இது தொடர்பாக, 'ரிபப்ளிக் டிவி' உட்பட, மூன்று ஊடகங்கள் மீது, மஹாராஷ்டிர மாநிலம் மும்பை போலீசார் சமீபத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

'ரிபப்ளிக் டிவி' மற்றும் அதன் தலைமை ஆசிரியரான, அர்னாப் கோஸ்வாமி சார்பில், மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்த மோசடி வழக்கில், அர்னாப் கோஸ்வாமியின் பெயரையும் சேர்க்க முயற்சி நடக்கிறது. கைது செய்யவும் திட்டமிட்டுள்ளனர். அதனால், அவரை கைது செய்வதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாவது:

இந்த மோசடி வழக்கில் இதுவரை, எட்டு பேர் மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன், அவர்களுக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டு, விசாரணை நடந்துள்ளது.அதுபோல, அர்னாப் கோஸ்வாமிக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாக, மும்பை போலீஸ் நினைத்தால், முதலில், அவருக்கு, 'சம்மன்' அனுப்ப வேண்டும்.
இந்த மோசடி வழக்கில் இதுவரை, அவரது பெயரை, மும்பை போலீஸ் சேர்க்கவில்லை. அதனால், அவரைக் கைது செய்ய தடை விதித்து எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது.
இந்த வழக்கில் இதுவரை நடந்துள்ள விசாரணை குறித்து, நவ., 5ம் தேதி, மும்பை போலீசார் முழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, அமர்வு உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Truth Triumph - Coimbatore,இந்தியா
20-அக்-202019:14:19 IST Report Abuse
Truth Triumph அர்னாப் கொஞ்சம் தமிழ் நாடு டிவி வண்டவாளங்களையும் தண்டவாளத்தில் ஏற்றுங்கள். இங்கே டிவி மீடியா மாபியா தலைவிரித்து ஆட்டம் போடுகிறது. ஒரு சில சிந்தாந்த கும்பல்களின் கைக்கூலிகளாக மாரி அல்லது அவர்கள் கட்டுப்பாட்டில் மக்களை தவறாக நம்ப வைக்க ப்ரியதனம் செய்கின்றன இதை முறியடிக்க அவசியம் நல்லவர்கள் முன் வரவேண்டும்.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
20-அக்-202014:23:33 IST Report Abuse
Anand சோனியா சேனா அரசு ரவுடி அரசு என்பதற்கு இது மிகப்பெரிய எடுத்துக்காட்டு...
Rate this:
Cancel
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) NBA ( News Broaders Association ) இதோயுடைய தலைவரு ரஜத் சர்மா இந்தியா டிவி ஓனர் லோபி மீடியா , ரிபுலிக் வளர்ச்சி தடுக்க இபப்டி ஒரு பித்தலாட்டம் கடிதங்கள் எழுதி கொண்டு இருக்கிறார்கள் ?????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X