கொரோனா தடுப்பு மூலக்கூறு கண்டுபிடிப்பு:அமெரிக்க, இந்திய சிறுமிக்கு பரிசு

Updated : அக் 19, 2020 | Added : அக் 19, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
வாஷிங்டன்: கொரோனா வைரஸை தடுக்கும் முலக்கூறு குறித்து அமெரிக்க-இந்திய- 14 வயது பள்ளி மாணவி செய்த ஆய்வுக்காக 25,000 டாலர் (ரூ.18,33,907 )பரிசு கிடைத்துள்ளது. 8வது வகுப்பு படித்து வரும் அனிகா செப்ரோலு,டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கிறார். கொரோனா வைரஸின் ஒரு குறிப்பிட்ட புரதத்துடன் பிணைக்கப்பட்டு, அந்த வைரஸ் செயல்படுவதைத் தடுக்கக்கூடிய ஒரு மூலக்கூறை அனிகா கண்டுபிடித்ததற்காக

வாஷிங்டன்: கொரோனா வைரஸை தடுக்கும் முலக்கூறு குறித்து அமெரிக்க-இந்திய- 14 வயது பள்ளி மாணவி செய்த ஆய்வுக்காக 25,000 டாலர் (ரூ.18,33,907 )பரிசு கிடைத்துள்ளது. 8வது வகுப்பு படித்து வரும் அனிகா செப்ரோலு,டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கிறார்.latest tamil newsகொரோனா வைரஸின் ஒரு குறிப்பிட்ட புரதத்துடன் பிணைக்கப்பட்டு, அந்த வைரஸ் செயல்படுவதைத் தடுக்கக்கூடிய ஒரு மூலக்கூறை அனிகா கண்டுபிடித்ததற்காக இந்த பரிசு கிடைத்துள்ளது.
பாதிப்பு சிலிகோ என்ற முறையின் மூலம் கொரோனா வைரஸ் செயல்லபாட்டை தடுக்கும் மூலக்கூறுகளைக் கண்டறிந்துள்ளார் அனிகா செப்ரோலு. கடந்த ஆண்டு இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அந்த பாதிப்பின் அனுபவத்தால், இளம் விஞ்ஞானிகளுக்காக நடந்த போட்டியில் பங்கேற்க அனிகா முடிவு செய்துள்ளார்.


latest tamil news

கடலில் விழுந்த ஒரு துளிஇது குறித்து அனிகா கூறுகையில்,"தொற்றுநோய்கள், வைரஸ்கள் மற்றும் மருந்து கண்டுபிடிப்பு பற்றி ஆராய்ச்சி செய்தபோதுதான், நான் உண்மையில் இதுபோன்ற ஏதாவது ஒன்றுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று நினைத்து பார்த்து வியப்படைந்தேன்".
கொரோனா தொற்றுநோயின் தீவிரத்தன்மை மற்றும் இவ்வளவு குறுகிய காலத்தில் அது உலகில் ஏற்படுத்திய கடுமையான தாக்கத்தின் காரணமாக, எனது வழிகாட்டியின் உதவியுடன், கொரோனா வைரஸை அழிக்கும் இலக்குகளை மாற்றியமைத்துள்ளேன். எனது கண்டுபிடிப்பு, கடலில் விழுந்த ஒரு துளி போலத்தான் என்பதை உணர்ந்துள்ளேன். ஆனாலும், பலரது பங்களிப்பில் இதையும் ஒன்றாக கருதுகிறேன்" என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-அக்-202009:39:13 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan இந்தியா , தமிழ்நாடு யூனிவர்சிட்டி எல்லாம் , ஊழலால் நிரம்பி உள்ளது ..
Rate this:
Cancel
20-அக்-202013:35:52 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K பிரச்சினை என்னவென்றால் அதே மாணவி ஒருவேளை இந்தியாவிலிருந்து சாதனை செய்திருந்தால் அதை நிரூபிக்க சொல்லி அயல் நாட்டு விஞ்ஞானிகள் எல்லாம் தொந்தரவு மேல் தொந்தரவு கொடுத்திருப்பார்கள். அமெரிக்கா என்றதும் நவ துவாரங்களையும் மூடி ஏற்று கொண்டிருக்கிறார்கள். "இந்தியாவில் இந்தியன்" என்றாலே இவர்களுடன் சேர்ந்து நம்மூர்காரர்களும் இளக்காரம் தான் செய்வார்கள். அமெரிக்காவில் இந்தியன் என்றால் "அஹா ஓஹோ" தான். எனினும் கட்டாயம் இந்த மாணவிக்கு நாம் வாழ்த்து சொல்லியே ஆக வேண்டும். என் வாழ்த்துக்கள் உரித்தாகுக .
Rate this:
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
20-அக்-202011:01:40 IST Report Abuse
Vivekanandan Mahalingam நம்ப ஊர்ல அண்ணா பல்கலை கழகம் மேம்படுத்த கூடாது, நவோதய கூடாது, புதிய கல்வி கொள்கை கூடாது ன்னு சொல்ற திராவிட ஆட்சியாளர்கள் இருக்கும் வரை நம்மக்கள் அயல் நாடுகளை மட்டும் தான் நம்ப வேண்டும்
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
20-அக்-202012:19:28 IST Report Abuse
skv srinivasankrishnaveniநோ சான்ஸ் இங்கே பல்கலைக்கழகம் எல்லாம் இருப்பது என்னாத்துக்கு தெரியாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X