அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மருத்துவ படிப்பு உள் ஒதுக்கீடு கவர்னரிடம் நல்ல செய்தி வரும்'

Updated : அக் 21, 2020 | Added : அக் 19, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை: ''மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு, கவர்னரிடமிருந்து நல்ல செய்தி வரும்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார். தமிழகத்தில் உள்ள, அரசு டாக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்யும், மருத்துவ பணியாளர்கள் நலவாழ்வு சிறப்பு முகாமை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,
'மருத்துவ படிப்பு உள் ஒதுக்கீடு கவர்னரிடம் நல்ல செய்தி வரும்'

சென்னை: ''மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு, கவர்னரிடமிருந்து நல்ல செய்தி வரும்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார்.

தமிழகத்தில் உள்ள, அரசு டாக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்யும், மருத்துவ பணியாளர்கள் நலவாழ்வு சிறப்பு முகாமை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், நேற்று துவக்கி வைத்தார். அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி: தமிழகத்தில், மூன்று வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது.

தொற்று அதிகரிக்கும் போது இருந்த கவனம், தற்போதும் இருக்க வேண்டும். பண்டிகை காலத்தில், பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூட வேண்டாம்.தொற்று பரவுதலில், காசிமேடு மீன் சந்தை கவலை அளிக்கும் வகையில் உள்ளது. கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களில், யாருக்கும் பின்விளைவுகள் ஏற்படவில்லை. மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்தை, மற்ற தீர்மானங்களுடன் ஒப்பிட வேண்டாம். இதுகுறித்து, கவர்னரிடமிருந்து நல்ல செய்தி விரைவில் வரும்.இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
20-அக்-202013:35:22 IST Report Abuse
Dr. Suriya "கவர்னரிடமிருந்து நல்ல செய்தி வரும்" கவர்னருகிட்டேருந்தது வந்தாலும் "உச்சம்" ஒத்துக்கினுமே...
Rate this:
Cancel
Svs yaadum oore - chennai,இந்தியா
20-அக்-202007:26:37 IST Report Abuse
Svs yaadum oore இதை எதுக்கு கவர்னர் தாமதம் செய்யனும் ….உண்டு அல்லது இல்லை என்று சொல்ல வேண்டியது தானே ... நல்ல செய்தி வரும் என்று சொல்லி பின்பு கழகங்கள் கல்வி தந்தைகளை தூண்டி விட்டு வழக்கு போட சொல்லும் ….அரசு உதவி பெறும் பள்ளி இதில் கிடையாது …..+1 வகுப்பில் 2.29 லட்சம் அரசு பள்ளி மாணவர்கள் ….ஒரு லட்சம் மாணவர் அரசு உதவிபெறும் பள்ளி ….அவர்கள் இதில் கிடையாது …..
Rate this:
20-அக்-202008:37:00 IST Report Abuse
ஆரூர் ரங்7.5 விழுக்காடு சட்டமே செல்லாது. கோர்டில் தள்ளுபடியாகிவிடும்.😶 அதற்குக் கையெழுத்துப்.போட்டு கவர்னர் அசிங்கப்படணுமா ?...
Rate this:
Cancel
20-அக்-202007:13:58 IST Report Abuse
ஆப்பு நல்ல சேதி வரும்... நல்ல சேதி வரும்... குடு...குடு...குடு... தமிழன் பொழப்பு இப்பிடி ஆயிடுச்சே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X