விஞ்ஞானிகளே நம் சொத்து : பிரதமர் மோடி பெருமிதம்

Updated : அக் 19, 2020 | Added : அக் 19, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: ''கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில், நம் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்; அவர்கள்தான், நம் நாட்டின் சொத்து,'' என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.இந்தியா, அமெரிக்கா இணைந்து நடத்தும், 'பெரும் சவால்கள்' என்ற தலைப்பிலான மாநாடு, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடந்தது. இதில், பிரதமர், நரேந்திர மோடி பேசியதாவது:ஒரு சமூகத்தின்
 விஞ்ஞானிகள்,  நம், சொத்து,  பிரதமர், மோடி, பெருமிதம்

புதுடில்லி: ''கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில், நம் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்; அவர்கள்தான், நம் நாட்டின் சொத்து,'' என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

இந்தியா, அமெரிக்கா இணைந்து நடத்தும், 'பெரும் சவால்கள்' என்ற தலைப்பிலான மாநாடு, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடந்தது. இதில், பிரதமர், நரேந்திர மோடி பேசியதாவது:

ஒரு சமூகத்தின் எதிர்காலம், அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் செய்யப்படும் முதலீடுகளாலேயே நிர்ணயிக்கப்படுகிறது. இது குறுகிய கால நோக்கத்துக்காக இருக்கக் கூடாது. இவற்றில் அதிக அளவு முதலீடு செய்வதால், எதிர்கால சந்ததியினருக்கு பலன் கிடைக்கும்.இந்த மாநாடு, இந்தியாவில் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடக்கிறது; அது தொழில்நுட்பத்தின் வலிமையை நமக்கு உணர்த்தியுள்ளது.


latest tamil news



இந்தியாவில் மிகவும் வலிமையான மற்றும் உயிர்ப்புடன் கூடிய அறிவியல் சமூகம் உள்ளது. மிகச் சிறந்த அறிவியல் கல்வி நிறுவனங்களும் இங்கு உள்ளன. கடந்த சில மாதங்களாக, கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இருந்து, அதற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிப்பது வரை, நம் விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.


அவர்கள்தான் இந்தியாவின் சொத்து. அவர்களது முயற்சிகளால், வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியுள்ளோம்.நாம் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை, இந்த கொரோனா வைரஸ் நமக்கு உணர்த்தியுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.

அமெரிக்காவைச் சேர்ந்த, 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ், இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பில் கேட்ஸ் பேசுகையில், ''-கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசியை கண்டுபிடிக்க, உலகின் பல்வேறு பகுதிகளில் விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது பாராட்டுக்குரியது,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-அக்-202023:08:22 IST Report Abuse
kulandhai Kannan ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சாலைக்கோ, கட்டிடத்திற்கோ ஏதாவது ஒரு விஞ்ஞானியின் பெயர் இருக்கிறதா?
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
20-அக்-202011:34:33 IST Report Abuse
Dr. Suriyaஇருக்கேங்க.....அப்துல் காலம் தெரு... சர் சி வி ராமன் தெரு......காயம்பத்தூளை ஜி டி நாயுடு தெரு இப்படி சொல்லிகிட்டே போகலாம்........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X