சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.,: பிச்சை எடுத்து மூதாட்டி போராட்டம்

Updated : அக் 20, 2020 | Added : அக் 19, 2020 | கருத்துகள் (37)
Share
Advertisement
அந்தியூர்: வாரிசு சான்றிதழ் தர, லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.,வை கண்டித்து, பேத்திகளுடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டியால், அந்தியூரில் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த ஆலாம்பாளையத்தைச் சேர்ந்த மூதாட்டி ஜோதிமணி, 63; கூலி தொழிலாளி. இவரது மருமகள் பிரியா, பிப்., 16ல் உடல்நலக்குறைவால் இறந்தார்.இதனால், சொத்துகளை, பிரியாவின் குழந்தைகள் பெயருக்கு
வாரிசுசான்றிதழ், லஞ்சம், VAO, விஏஓ, பிச்சை, மூதாட்டி, போராட்டம்

அந்தியூர்: வாரிசு சான்றிதழ் தர, லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.,வை கண்டித்து, பேத்திகளுடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டியால், அந்தியூரில் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த ஆலாம்பாளையத்தைச் சேர்ந்த மூதாட்டி ஜோதிமணி, 63; கூலி தொழிலாளி. இவரது மருமகள் பிரியா, பிப்., 16ல் உடல்நலக்குறைவால் இறந்தார்.
இதனால், சொத்துகளை, பிரியாவின் குழந்தைகள் பெயருக்கு மாற்ற முடிவு செய்தார். மாத்துார் வி.ஏ.ஓ., சந்தோஷிடம், வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பித்தார். அவர் இழுத்தடிக்கவே, சில நாட்களுக்கு முன் நேரில் சென்று கேட்டுள்ளார். அப்போது, வி.ஏ.ஓ., 3,௦௦௦ ரூபாய் கேட்டுள்ளார். இந்நிலையில், அந்தியூர் தாலுகா அலுவலகத்துக்கு, பேத்திகளுடன் ஜோதிமணி நேற்று வந்தார்.

'வாரிசு சான்றிதழ் தர, மாத்துார், வி.ஏ.ஓ., லஞ்சம் கேட்கிறார். என்னிடம் பணமில்லை. எனவே பிச்சை போடுங்கள்' என எழுதிய பதாகையை, ஒரு பேத்தி கைகளில் பிடித்திருக்க, வளாகத்தில் அமர்ந்து, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். பரிதாபப்பட்ட ஒரு சிலர், சிறு தொகை அவருக்கு தந்தனர். இதையடுத்து, தாசில்தார் மாரிமுத்துவிடம் புகார் அளித்தார். 'விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என தாசில்தார் கூறவே, பேத்திகளுடன் கிளம்பி சென்றார்.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
23-அக்-202005:36:11 IST Report Abuse
NicoleThomson சந்தோஷ் போன்றவர்களுக்கு அவனின் சந்ததியினருக்கும் இனி மேல அரசு வேலை கிடையவே கிடையாது என்று சட்டம் வரவேண்டும் அப்போதுதான் அடங்குவார்கள் பன்னீர்செல்வங்களும் சந்தோஷுக்களும் பீட்டர்களும்
Rate this:
Cancel
VENKATRAMAN SAMPATHKUMAR - al Hasa,சவுதி அரேபியா
22-அக்-202010:19:37 IST Report Abuse
VENKATRAMAN SAMPATHKUMAR This corrupted VAO will born as a PIG in his next Re-Birth, for sure
Rate this:
Cancel
C Sagayaraj - Periyakulam,இந்தியா
20-அக்-202023:21:35 IST Report Abuse
C Sagayaraj அரசு ஊழியர்களுக்கு குறைந்த அளவு சம்பளம் நிர்னயித்து லஞ்சம் வாங்கினால் உடனே வேலையை விட்டு தூக்கி விடனும். சேவை மனப்பான்மையுடன் மக்கள் பணியாற்ற வேண்டும். இந்த கொராண காலத்திலும் கவலைப்படாமல் சம்பாதித்தவர்கள் அரசு ஊழியர்கள் மட்டுமே.
Rate this:
samkey - tanjore,இந்தியா
21-அக்-202009:02:40 IST Report Abuse
samkeyஒரு குடும்பத்தில் ஒருவருக்கே அரசு வேலை என்ற அவசர சட்டம் உடனடியாக நிறைவேற்றி உடனே அமுல் படுத்தவேண்டும். இப்போ உள்ள ட்ரெண்ட் என்னவென்றால் டாக்ட்டரும் டாக்டரும் படிக்கும்போதே கோர்த்து கொள்கின்றனர் அதுபோல் வாத்தியாரும் வாத்தியாரும் கோர்த்து கொள்கின்றனர். சுளையாக மாதம் கிம்பளம் தவிர சம்பளம் மட்டும் ஒன்னரை லட்சம் வருகிறது. ஒரே வருடத்தில் வீடு கட்டி விடுகின்றனர் பேங்க் காரன் அவர்களுக்கு லோன் தருகிறான் அரசு பொதுமக்கள் ...வது அவர்களுக்கு மாதாமாதம் சம்பளம் போட்டுவிடும்.நம்பி கடன் தருகிறான்....
Rate this:
samkey - tanjore,இந்தியா
21-அக்-202009:18:19 IST Report Abuse
samkeyஎன்ன இருந்தாலும் வெள்ளைக்காரன் மனித தன்மையுடையவன் காந்தி சுதந்திர போராட்டத்துக்கு மதிப்பளித்து சுதந்திரம் கொடுத்தான். ஆனால் இந்த கொள்ளைக்காரனுகளுக்கு காந்தி முறை சரிப்பட்டு வாராது நேதாஜி முறையில் ஒழிக்க வேண்டும்....
Rate this:
samkey - tanjore,இந்தியா
21-அக்-202009:26:37 IST Report Abuse
samkeyஅய்யா உயர் நீதி மன்ற நீதி அரசர்களே ... தெரிந்தோ தெரியாமலோ இந்த தாய் அநீதிக்கு எதிராக போராடிவிட்டார் தயவு செய்து மன்னித்து இவரை காப்பாற்றுங்கள் உடனே "சூ மோட்டாவாக" இந்த வழக்கிணை எடுத்து இவரை காப்பாற்றுங்கள். இந்த இரு பிஞ்சு குழந்தை களுக்காவது இவரிடம் கருணை காட்டி இவருக்கு உதவி செய்யுங்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X