கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஊழலின் ஊற்றுக்கண் வருவாய் துறை:நீதிபதி கடும் அதிருப்தி

Updated : அக் 21, 2020 | Added : அக் 19, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
மதுரை: 'ஊழலின் ஊற்றுக்கண் துவங்குமிடம் வருவாய்த் துறைதான்' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, அதிருப்தியை வெளியிட்டது. கரூர் மண்மங்கலம் செந்தில் என்பவர், 'என் பட்டாவில், குறிப்பட்ட சர்வே எண்ணில் திருத்தம் செய்யக் கோரி, மண்மங்கலம் தாசில்தாருக்கு விண்ணப்பித்தேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்' என மனு செய்தார். நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவு:இவ்விவகாரத்தில் உரிய
ஊழலின் ஊற்றுக்கண் வருவாய் துறை: உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி

மதுரை: 'ஊழலின் ஊற்றுக்கண் துவங்குமிடம் வருவாய்த் துறைதான்' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, அதிருப்தியை வெளியிட்டது.

கரூர் மண்மங்கலம் செந்தில் என்பவர், 'என் பட்டாவில், குறிப்பட்ட சர்வே எண்ணில் திருத்தம் செய்யக் கோரி, மண்மங்கலம் தாசில்தாருக்கு விண்ணப்பித்தேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்' என மனு செய்தார்.

நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவு:
இவ்விவகாரத்தில் உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய, தாந்தோணி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, தாசில்தார் 2018ல் தகவல் தெரிவித்துள்ளார். பி.டி.ஓ., தரப்பில் நடவடிக்கை இல்லை.அவர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மற்றும் அவரது செயல்பாடு குறித்து பணிப்பதிவேட்டில் குறிப்பு எழுத, இந்நீதிமன்றம் உத்தரவிடலாம். ஊழலின் ஊற்றுக்கண் துவங்குமிடம் வருவாய்த்துறை.

தாசில்தார், சர்வேயர், டி.ஆர்.ஓ., - ஆர்.டி.ஓ.,க்கள் உட்பட சில அலுவலர்கள் ஆவணங்களை தவறான முறையில் திருத்தம் செய்து, அதிகமாக சொத்துகளை சேர்க்கின்றனர்.
இதுபோல், பதிவுத்துறையில் பல்வேறு மாவட்ட பதிவாளர், சார் பதிவாளர் மற்றும் சக அலுவலர்கள், 'டேபிள் டீலிங்'கில் ஈடுபடுகின்றனர். பதிவுத்துறையின் நடவடிக்கைகள் வீடியோ பதிவு செய்யப்படாலும்கூட, ஆவண எழுத்தர்கள், லஞ்சம் வாங்கிக் கொடுப்பதில், ஏஜன்ட்கள் போல் செயல்படுகின்றனர்.

பல்வேறு கார்ப்பரேஷன் அலுவலர்களையும் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்களும் வருவாய்த்துறை, பதிவுத்துறைக்கு இணையாக போட்டி போடுகின்றனர். இவர்களின் சொத்துக்கள் பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்தால், வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனரா என்பது தெரிய வரும்.தாந்தோணி பி.டி.ஓ.,வின் ஆதார், அலைபேசி எண், பணிபுரியும் இடம் விபரங்களை நவ., 5ல் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
20-அக்-202020:29:37 IST Report Abuse
M S RAGHUNATHAN In today's paper itself, there is a news item that a VAO has not issued legal heirship certificate to a girl represented by her grand mother demanding speed money i.e. bribe. The old lady started a dharna begging for money to pay to the VAO the demanded bribe ( her grand daughter whose mother expired holding a placard on that respect.) Only after that the Thasildar came to the spot and assured to do the needful. The HC which speaks so strongly about corruption can take this case suo moto and order arrest of VAO and order exemplary punishment for the higher revenue authorities including the District Collector. Will the HC bell the cat by doing so.
Rate this:
Cancel
Raj - Chennai,இந்தியா
20-அக்-202016:32:56 IST Report Abuse
Raj லஞ்சம் வாங்கி பிழைக்கும் பிழைப்பிற்கு பேசாமல் நாண்டுக்கிட்டு சாகலாம்.
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
20-அக்-202016:18:48 IST Report Abuse
Baskar நீதிபதிகள் நன்றாகவே நடிக்கின்றனர். வருவாய் துறையில் அதிகமாக ஊழல் நடக்கிறது என்கிறார் ஒருத்தர். இன்னும் சில நீதிபதிகள் ஒரு பக்கம் லஞ்சம் வாங்கி கொண்டு தான் இருக்கின்றனர் என்பது இவருக்கு தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறார். வாழ்க நீதி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X