காங்., கையெழுத்து இயக்க போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காங்., கையெழுத்து இயக்க போராட்டம்

Added : அக் 19, 2020
Share
கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையத்தில் வேளான் மசோதாவை கண்டித்து காங்., கட்சியினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.கச்சிராயபாளையம் பழைய பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு,மாவட்ட துணைத்தலைவர் முத்தமிழ்கண்ணன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் கோவிந்தராசு, தனபால் முன்னிலை வகித்தனர்.நகர தலைவர் தெய்வநாயகம் வரவேற்றார். காங்., கமிட்டி உறுப்பினர் மணிரத்தினம்,

கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையத்தில் வேளான் மசோதாவை கண்டித்து காங்., கட்சியினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

கச்சிராயபாளையம் பழைய பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு,மாவட்ட துணைத்தலைவர் முத்தமிழ்கண்ணன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் கோவிந்தராசு, தனபால் முன்னிலை வகித்தனர்.நகர தலைவர் தெய்வநாயகம் வரவேற்றார். காங்., கமிட்டி உறுப்பினர் மணிரத்தினம், மாவட்டதலைவர்கள் ஜெய்கனேஷ், ராஜமோகன், ஜெயச்சந்திரன், இளைஞர் காங்., மாநில செயலாளர் கமல் மணிரத்தினம் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக பொது மக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கையெழுத்து பெற்றனர். நகர செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X