பொது செய்தி

தமிழ்நாடு

விரைவில் விடுதலை: சசிகலா நம்பிக்கை

Updated : அக் 21, 2020 | Added : அக் 19, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை: 'கர்நாடக சிறைத்துறை, நன்னடத்தை தண்டனை குறைப்பு சலுகை விஷயத்தில், விரைவில் சட்டப்படி முடிவெடுக்கும்' என, சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். இம்மாதம் முதல் வாரம், சிறையிலிருந்து வெளியில் வருவார் என, தகவல் வெளியானது. ஆனால், அவரது விடுதலை தாமதமாகி வருகிறது. இந்த
விடுதலை, சசிகலா, நம்பிக்கை

சென்னை: 'கர்நாடக சிறைத்துறை, நன்னடத்தை தண்டனை குறைப்பு சலுகை விஷயத்தில், விரைவில் சட்டப்படி முடிவெடுக்கும்' என, சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். இம்மாதம் முதல் வாரம், சிறையிலிருந்து வெளியில் வருவார் என, தகவல் வெளியானது. ஆனால், அவரது விடுதலை தாமதமாகி வருகிறது. இந்த சூழ்நிலையில், அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டதாக, தகவல் பரவியது. இதுதொடர்பாக, அவரது வழக்கறிஞர் ராஜாசெந்துார் பாண்டியன், அவருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு சசிகலா, பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது: கொரோனா காரணமாக, தமிழக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாக வரும் செய்திகள், எனக்கு வேதனை அளிக்கிறது. தொற்று பரவல் காரண மாக, மார்ச் மூன்றாம் வாரத்தில் இருந்து, பார்வையாளர் அனுமதியை, கர்நாடக சிறைத்துறை, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. எப்போது நேர்காணலுக்கு அனுமதி அளிக்கப்படும் என்பது, இதுவரை உறுதியாக தெரியவில்லை.

சிறைத்துறை, என் நன்னடத்தை தண்டனை குறைப்பு சலுகை விஷயத்தில், விரைவில், சட்டப்படியாக முடிவெடுக்கும் என, நம்புகிறேன். உத்தரவு கிடைத்ததும் தெரிவிக்கிறேன்.
அதன்படி, அபராதத் தொகையை, முறைப்படி நீதிமன்றத்தில் செலுத்த ஏற்பாடு செய்யவும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து, ராஜாசெந்துார்பாண்டியன் கூறுகையில், ''சட்டப்படி சசிகலா விடுதலை யாக, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அபராதத் தொகை செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. விரைவில், சசிகலா வெளியில் வருவார்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
20-அக்-202019:53:46 IST Report Abuse
sankaseshan நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கும் .
Rate this:
Cancel
P.ELAMARAN - riyadh,சவுதி அரேபியா
20-அக்-202011:18:26 IST Report Abuse
P.ELAMARAN சசிகலாவுக்கு தமிழக மக்கள் மீது கவலையா..... யோவ் நான்கு வருசமா தமிழகம் நாசமா போகாம நிம்மதியா இருக்கு ....
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
20-அக்-202010:12:44 IST Report Abuse
mindum vasantham dhayanithi brothers adikkatha சசிகலா அடிச்சிட்டாரு மற்றும் இந்த தா தமிழக கட்சிக்கும் தேசிய கட்சிக்கும் ரகசிய உறவு இல்லைங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X