குற்றவாளிக்கு ஆதரவாக பேசுவதா? நட்டா எச்சரிக்கை!

Updated : அக் 20, 2020 | Added : அக் 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
லக்னோ : உத்தர பிரதேசத்தில், அரசு அதிகாரிகள் முன்னிலையில், ஒருவரை சுட்டுக்கொன்ற குற்றவாளிக்கு, ஆதரவாக பேசிய, பா.ஜ., - எம்.எல்.ஏ.,வை, கட்சியின் தேசிய தலைவர் நட்டா நேற்று எச்சரித்தார்.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அதிருப்திஇங்குள்ள பாலியா மாவட்டத்தில், ரேஷன் கடைகளை ஒதுக்குவது குறித்து, உள்ளூர் அரசு அதிகாரிகள்
BJP, BJP_MLA, JP Nadda

லக்னோ : உத்தர பிரதேசத்தில், அரசு அதிகாரிகள் முன்னிலையில், ஒருவரை சுட்டுக்கொன்ற குற்றவாளிக்கு, ஆதரவாக பேசிய, பா.ஜ., - எம்.எல்.ஏ.,வை, கட்சியின் தேசிய தலைவர் நட்டா நேற்று எச்சரித்தார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.


அதிருப்தி


இங்குள்ள பாலியா மாவட்டத்தில், ரேஷன் கடைகளை ஒதுக்குவது குறித்து, உள்ளூர் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம், சமீபத்தில் நடந்தது. அப்போது ஏற்பட்ட திடீர் மோதலில், பா.ஜ., உள்ளூர் பிரமுகர் திரேந்திர பிரதாப் சிங், துப்பாக்கியால் சுட்டார்; இதில், 46 வயதான ஜெய்பிரகாஷ் உயிரிழந்தார்.

குற்றவாளியான திரேந்திர சிங்கிற்கு, பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேந்திர சிங் ஆதரவாக பேசினார். எதிர்க் கட்சிகள், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, திரேந்திர சிங் உட்பட நான்கு பேரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.இந்நிலையில், குற்றவாளிக்கு ஆதரவாக பேசிய எம்.எல்.ஏ.,வுக்கு, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, நேற்று எச்சரிக்கை விடுத்தார். மாநில பா.ஜ., தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங்கை தொடர்பு கொண்டு பேசிய நட்டா, எம்.எல்.ஏ.,வின் கருத்துகளுக்கு அதிருப்தி தெரிவித்தார்.


latest tamil news



வலியுறுத்தல்


இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகி இருக்கும்படி, எம்.எல்.ஏ.,வுக்கு அறிவுறுத்தும்படி, ஸ்வதேந்திர தேவ் சிங்கிடம், நட்டா வலியுறுத்தினார். இதற்கிடையே, கைது செய்யப்பட்ட திரேந்திர சிங்கிற்கு, 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-அக்-202012:29:36 IST Report Abuse
234 லட்சியம்   180 நிச்சயம்  வெற்றி காஸ்மீரில் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஊர்வலம் நடத்திய நீங்கள் எல்லாம் பேச தகுதி இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X