அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓடாத வண்டி தி.மு.க., ஜெயகுமார் கிண்டல்

Updated : அக் 21, 2020 | Added : அக் 20, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை: ''தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள், அ.தி.மு.க.,விற்கு வர வாய்ப்புள்ளது,'' என, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், முதல்வரை சந்தித்து ஆறுதல் கூறியது, அரசியல் நாகரிகம்; அது வரவேற்கத்தக்கது. கச்சத்தீவை மீட்பது தான், மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வாக அமையும். பிரதமராக இருந்த இந்திரா, கச்சத்தீவை தாரை
 ஓடாத வண்டி தி.மு.க.,
ஜெயகுமார் கிண்டல்

சென்னை: ''தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள், அ.தி.மு.க.,விற்கு வர வாய்ப்புள்ளது,'' என, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், முதல்வரை சந்தித்து ஆறுதல் கூறியது, அரசியல் நாகரிகம்; அது வரவேற்கத்தக்கது. கச்சத்தீவை மீட்பது தான், மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வாக அமையும். பிரதமராக இருந்த இந்திரா, கச்சத்தீவை தாரை வார்த்தபோது, தமிழகத்திடம் கருத்து கேட்கவில்லை. அன்று, முதல்வராக இருந்த கருணாநிதி, வாய் திறக்கவில்லை.
ஜெ., முதல்வரானதும், 'கச்சத்தீவை மீட்போம்' என்றார். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு, கவர்னர் ஒப்புதல் அளித்த பின், கவுன்சிலிங் துவக்கப்படும். சட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்கும்படி, முதல்வர், நேரடியாக கவர்னரை சந்தித்து வலியுறுத்தி உள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, அரசு கொண்டு வரும் சட்டத்திற்கு, கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்படி, கவர்னர் விரைவில் ஒப்புதல் அளிப்பார்.

தி.மு.க., என்பது பயணியர் ரயில்; அது ஊர் போய் சேராது. நாங்கள், 'சூப்பர் சானிக்' விமானம். 'ஜெட்' வேகத்தில், சுறுசுறுப்பாக பணிகளை துவக்கி உள்ளோம். ஜெ., ஆட்சி தொடர வேண்டும் என்ற எண்ணம், மக்களிடம் பரவியுள்ளது. கட்சியினர் முழு வீச்சோடு பணிபுரிகின்றனர். 2021 தேர்தலில், மீண்டும் எம்.ஜி.ஆர்., - ஜெ., ஆட்சி அமையும்.நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல் குறித்து, சட்டத்துறை ஆய்வு செய்யும். ஜெ., மறைவு குறித்த உண்மை தகவலை மக்களுக்கு தெரிவிக்க, விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

விரைவில் விசாரணை முடிக்கப்பட்டு, ஆணையம் தன் முடிவை அறிவிக்கும்.தி.மு.க., கூட்டணியில் இருந்து கட்சிகள் இங்கே வரலாம். அக்கட்சிகள் நடத்தும் ரகசிய பேச்சு குறித்து, வெளியில் கூற முடியாது. 'பிரேக் டவுண்' ஆகி இயங்காத வாகனத்தில் செல்ல, யாரும் விரும்ப மாட்டார்கள். ஓடுகிற வண்டியில் தான் ஏறுவர்.இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
90s kid - karaikkal,ஐக்கிய அரபு நாடுகள்
22-அக்-202003:43:14 IST Report Abuse
90s kid ஓடாத கள்ள ரயில் னு சொல்லிருக்கலாம் பொருத்தமா இருக்கும் ......
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
20-அக்-202015:28:24 IST Report Abuse
Anantharaman Srinivasan அதிமுக என்பது ஒரு "AUTO" வண்டி..ஆட்டோ வில் முன் சக்கரம் கழண்டு விட்டால் நகராது. அதுபோல MGR & ஜெயலலிதா இருந்துகொண்டு வழிநடத்தினர். அந்த force ல் அவர்கள் பின் வண்டி நொண்டி கொண்டு இருக்கிறது. இதில் அடுத்தக்கட்சியை பார்த்து இளக்காரம் என்ன வேண்டி கிடக்கிறது...
Rate this:
Cancel
ramki - chennai,இந்தியா
20-அக்-202011:59:48 IST Report Abuse
ramki நாடகம் விடும் நேரம் தான் உச்சக்காட்சி நெருங்குதம்மா . ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன என சித்திக்கும் நேரம் நெருங்குகிறது மெயின் ரோடு மைனர்களுக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X