சிராக் பஸ்வானுக்கு தேஜஸ்வி ஆதரவு குழப்பத்தில் நிதிஷ்

Updated : அக் 20, 2020 | Added : அக் 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பாட்னா : பீஹார் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தனித்து போட்டியிடும் லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வானுக்கு ஆதர வாக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் பேசுவதால், முதல்வர் நிதிஷ் குமார் கவலை அடைந்து உள்ளார்.பீஹார் சட்டசபை தேர்தல், வரும், 28ல் துவங்கி, மூன்று கட்டங்களாக நடக்கவுள்ளது. தலைவலி மத்திய அரசின், தே.ஜ., கூட்டணியில் அங்கம்
சிராக் பஸ்வானுக்கு தேஜஸ்வி ஆதரவு  கடும் குழப்பத்தில் நிதிஷ் குமார்

பாட்னா : பீஹார் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தனித்து போட்டியிடும் லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வானுக்கு ஆதர வாக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் பேசுவதால், முதல்வர் நிதிஷ் குமார் கவலை அடைந்து உள்ளார்.
பீஹார் சட்டசபை தேர்தல், வரும், 28ல் துவங்கி, மூன்று கட்டங்களாக நடக்கவுள்ளது.


தலைவலி



latest tamil news



மத்திய அரசின், தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும், மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, பீஹாரில் தனித்து போட்டியிடுகிறது.இந்த விவகாரம், முதல்வர் நிதிஷ் குமாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இந்நிலையில், லோக் ஜனசக்தியின் தற்போதைய தலைவரான, ராம்விலாஸ் பஸ்வானின் மகன், சிராக் பஸ்வானுக்கு ஆதர வாக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் பேசுவது, மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் ஒரு நிகழ்வில், சிராக் பஸ்வான் கூறியதாவது:
என் தந்தையின் மறைவையடுத்து எனக்கோ, என் தாயாருக்கோ, முதல்வர் நிதிஷ் குமார் ஆறுதல் கூறவில்லை. என் தந்தையின் உடல் பீஹார் கொண்டு வரப்பட்டபோது, விமான நிலையம் வந்திருந்த நிதிஷ் குமார், என்னை கண்டுகொள்வில்லை.நான் அவரது பாதங்களை தொட்டபோதும், அவர் என்னை ஒரு பொருட்டாக கருதவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.


கவலை



இந்த விஷயங்களை சுட்டிக்காட்டி, தேஜஸ்வி யாதவ், நேற்று பேசியதாவது:சிராக் பஸ்வான் விஷயத்தில், நிதிஷ் குமார் செய்தது சரியானது அல்ல. தந்தையை இழந்து வாடும் அவருக்கு, நாம் இப்போது ஆறுதலாக இருக்க வேண்டும். ஆனால், நிதிஷ் குமார் அவருக்கு அநீதி இழைக்கும் விதமாக செயல்படுகிறார்.இவ்வாறு, அவர் கூறினார். தேஜஸ்வி யாதவ் தெரிவிக்கும் கருத்துகள், சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடும் சிராக் பஸ் வானுக்கு ஆதரவாக அமை வதால், இது தேர்தல் முடிவு களில் எதிரொலிக்குமோ என, நிதிஷ் குமார் கவலை அடைந்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
20-அக்-202012:13:31 IST Report Abuse
ponssasi அப்பா காலை தான் தொட்டு கும்பிட்டிருக்கவேண்டும், மடையன் அரசியலுக்காக நிதிஷ் காலை ஏன் தொட்டு கும்பிடவேண்டும். இப்பொது அனுதாபத்திற்கு ஏன் அலையவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X