சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சான்றிதழுக்கு லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ., பிச்சை எடுத்து மூதாட்டி போராட்டம்

Added : அக் 20, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
அந்தியூர்: வாரிசு சான்றிதழ் தர, லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.,வை கண்டித்து, பேத்திகளுடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டியால், அந்தியூரில் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த ஆலாம்பாளையத்தைச் சேர்ந்த மூதாட்டி ஜோதிமணி, 63; கூலி தொழிலாளி. இவரது மருமகள் பிரியா, பிப்., 16ல் உடல்நலக்குறைவால் இறந்தார்.இதனால், சொத்துகளை, பிரியாவின் குழந்தைகள் பெயருக்கு
 சான்றிதழுக்கு லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ., பிச்சை எடுத்து மூதாட்டி போராட்டம்

அந்தியூர்: வாரிசு சான்றிதழ் தர, லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.,வை கண்டித்து, பேத்திகளுடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டியால், அந்தியூரில் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த ஆலாம்பாளையத்தைச் சேர்ந்த மூதாட்டி ஜோதிமணி, 63; கூலி தொழிலாளி. இவரது மருமகள் பிரியா, பிப்., 16ல் உடல்நலக்குறைவால் இறந்தார்.இதனால், சொத்துகளை, பிரியாவின் குழந்தைகள் பெயருக்கு மாற்ற முடிவு செய்தார். மாத்துார் வி.ஏ.ஓ., சந்தோஷிடம், வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பித்தார். அவர் இழுத்தடிக்கவே, சில நாட்களுக்கு முன் நேரில் சென்று கேட்டுள்ளார்.

அப்போது, வி.ஏ.ஓ., 3,௦௦௦ ரூபாய் கேட்டுஉள்ளார். இந்நிலையில், அந்தியூர் தாலுகா அலுவலகத்துக்கு, பேத்திகளுடன் ஜோதிமணி நேற்று வந்தார்.'வாரிசு சான்றிதழ் தர,மாத்துார், வி.ஏ.ஓ., லஞ்சம் கேட்கிறார். என்னிடம் பணமில்லை. எனவே பிச்சை போடுங்கள்' என எழுதிய பதாகையை, ஒரு பேத்தி கைகளில் பிடித்திருக்க, வளாகத்தில் அமர்ந்து, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.பரிதாபப்பட்ட ஒரு சிலர், சிறு தொகையைஅவருக்கு தந்தனர். தாசில்தார் மாரிமுத்துவிடம் தகவல் சென்றது. 'விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, தாசில்தார் கூறவே, பேத்திகளுடன் கிளம்பி சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
20-அக்-202013:41:37 IST Report Abuse
Dr. Suriya இதே போல அந்த அம்மாவுக்கு வாரிசு சான்றிதழ் எத்தினி வருடம் கலித்து லஞ்சம் எதுவும் வாங்காமல் கொடுத்தார்களா அல்லது வாங்கி கொண்டு கொடுத்தார்களா என்பதையும் வெளியிட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் ......
Rate this:
Cancel
P.ELAMARAN - riyadh,சவுதி அரேபியா
20-அக்-202011:41:47 IST Report Abuse
P.ELAMARAN பிஞ்சுகளின் மனதில் விதைக்கபட்டுள்ளது... பிறப்பிற்கும், இறப்பிற்கும் லஞ்சம் கேட்கும் நாடு எது என்றால் அது என் தாய் திருநாடு, தமிழ்நாடு என்பதில் பெருமை கொள்வோம்
Rate this:
Cancel
Thomas - Al Khor,கத்தார்
20-அக்-202010:27:15 IST Report Abuse
Thomas அதனை விட இந்த ஏழைகளிடம் பிச்சை எடுக்கும் அரசு அதிகாரிகளை தூக்கிலிட வேண்டும்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X