போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகைகளுக்கு ஜாமின் கேட்டு மிரட்டல்

Updated : அக் 20, 2020 | Added : அக் 20, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
பெங்களூரு: போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னட நடிகைகளுக்கு ஜாமின் வழங்கக்கோரி வெடி பொருளுடன் நீதிபதிக்கே மிரட்டல் விடுத்த சம்பவம் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை தொடர்பாக கன்னட நடிகை ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள்

பெங்களூரு: போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னட நடிகைகளுக்கு ஜாமின் வழங்கக்கோரி வெடி பொருளுடன் நீதிபதிக்கே மிரட்டல் விடுத்த சம்பவம் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



latest tamil news



போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை தொடர்பாக கன்னட நடிகை ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நீதிமன்ற காவலில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சீனப்பா ஜாமீன் மனுக்களை விசாரிக்கிறார்.

இந்நிலையில் மர்ம பார்சல் ஒன்று நீதிபதிக்கு நேற்று மாலை வந்தது. அதை பிரித்து பார்த்தபோது மொட்டை கடிதம் ஒன்றும், டெட்டனேட்டர் எனும் வெடிகுண்டு பொருளும் இருந்தது.

கடிதத்தைப் பிரித்துப் பார்த்தபோது போதைப்பொருள் வழக்கில் நடிகைகளுக்கு ஜாமீன் வழங்கும்படியும், பெங்களூரு காவல்பைர சந்திரா வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும் படியும் குறிப்பிட்டிருந்தது. ஒருவேளை விடுவிக்காவிட்டால் நீதிபதியின் காரை தகர்ப்போம் என்றும், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல் பந்த், சி.சி.பி., இணை கமிஷனர் சந்திப் பாட்டீல், சி.சி.பி., துணை கமிஷனர் ரவிக்குமார் ஆகியோரை எச்சரிப்பதாக குறிப்பிட்டிருந்தது.


latest tamil news



இதை பார்த்து நீதிபதி சீனப்பா அதிர்ச்சி அடைந்தார். உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்த போலீஸார் சிட்டி சிவில் நீதிமன்றத்துக்கு வந்து நேற்று இரவு முழுவதும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதா என்பதை போலீஸ் மோப்ப நாயுடன் அதிரடி சோதனை நடத்தினர்.

மர்ம பார்சல் அனுப்பியது யார், அவர்களுக்கும் நடிகைகளுக்கும் காவல்பைரசந்திரா வன்முறைக்கும் என்ன காரணம் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
21-அக்-202014:59:00 IST Report Abuse
mathimandhiri பாத்தாலே புரியுது இது மூர்க்கன் தாவூத் வேலை தான் என்று. போற போக்கைப் பாத்தா இதுக்கு மேலே நாட்டில் உள்ள மிகப் பெரும் பதவியில் உள்ளவர்களையே இப்படி மிரட்டுவான் போல இருக்கே? இது எங்கே போய் முடியும். தெரிய வில்லை. யாரும் கவனிக்கலையா? கூண்டாஸிலோ அதற்கு மேலான பிரிவிலோ பிடித்து உள்ளே தள்ளணும் ம் இல்லே போட்டுத் தள்ளணும் வெயிட்டிங் ஆபத்து. இது போல் நெறைய மேட்டர் நாட்டுக்குள் ஏற்கனவே கை மீறிக் கொண்டிருக்கிறது. கவனம், கவனம்.
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
21-அக்-202014:42:54 IST Report Abuse
mathimandhiri இதெல்லாம் பாத்தா மூர்க்கன் தாவூத் வேலையாத் தெரியலையா சாமி. இதெல்லாம் ரொம்ப ஓவர். சட்டு புட்டுன்னு ஆக் க்ஷன் எடுக்கணும். இப்படி நெறய விஷயங்கள் கை மீறி போய்க் கொண்டடே இருப்பதை யாரும் கவனிக்கலையா? புடிச்சு குண்டாஸ் ஐ விட பெரிய பிரிவில் உள்ளே போடணும், இல்லே போட்டுத் தள்ளனும். வெயிட்டிங் நல்லதல்ல.
Rate this:
Cancel
Karthik - Doha,கத்தார்
20-அக்-202011:40:01 IST Report Abuse
Karthik மலேசியாவிலும் இன்னும் சில நாடுகளிலும், போதைப்பொருள் வைத்திருந்தாலே 'மரண தண்டனை'. அப்படியிருக்க, இங்கே இன்னும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.
Rate this:
Jayvee - chennai,இந்தியா
20-அக்-202019:13:13 IST Report Abuse
Jayveeமலேசியாவில் போதை பொருள் மட்டுமல்ல மிக சிறப்பாக செய்வது அனைத்தும் பிலிபின்ஸ் மற்றும் இலங்கை அமைதி விரும்பிகள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X