நியூசிலாந்து தேர்தல்: இந்திய டாக்டர் வெற்றி

Updated : அக் 20, 2020 | Added : அக் 20, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
ஹாமில்டன்: நியூசிலாந்து பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட்ட, இந்தியாவை சேர்ந்த டாக்டர் கவுரவ் சர்மா வெற்றி பெற்றுள்ளார்.பசிபிக் பெருங்கடல் தீவு நாடான நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் வசிப்பவர், டாக்டர் கவுரவ் சர்மா, 33. நம் நாட்டின் ஹிமாச்சல பிரதேசத்தின் ஹமிர்பூரை சேர்ந்த இவர், 20 ஆண்டுகளுக்கு முன், குடும்பத்தினருடன் நியூசிலாந்து சென்றவர். நியூசிலாந்தில்

ஹாமில்டன்: நியூசிலாந்து பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட்ட, இந்தியாவை சேர்ந்த டாக்டர் கவுரவ் சர்மா வெற்றி பெற்றுள்ளார்.



latest tamil news


பசிபிக் பெருங்கடல் தீவு நாடான நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் வசிப்பவர், டாக்டர் கவுரவ் சர்மா, 33. நம் நாட்டின் ஹிமாச்சல பிரதேசத்தின் ஹமிர்பூரை சேர்ந்த இவர், 20 ஆண்டுகளுக்கு முன், குடும்பத்தினருடன் நியூசிலாந்து சென்றவர். நியூசிலாந்தில் படித்து, டாக்டர் பட்டம் பெற்ற கவுரவ் சர்மா, அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலையில், வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். ஹாமில்டன் நகரில், டாக்டராக சேவையாற்றி வருகிறார்.

இவர், சமீபத்தில் நடந்த நியூசிலாந்து பார்லிமென்ட் தேர்தலில், தற்போதைய பிரதமர் ஜெசிந்தா தலைமையிலான தொழிலாளர் கட்சி சார்பில்,ஹாமில்டன் மேற்கு தொகுதியில் போட்டியிட்டார்.


latest tamil news


தேசிய கட்சி வேட்பாளர் டிம் மசிண்டோவை விட, 4,425 ஓட்டுகள் அதிகம் பெற்று, கவுரவ் சர்மா வெற்றி பெற்றுள்ளார்.கவுரவ் சர்மா கூறும்போது, ''இந்த வெற்றியின் மூலம், மக்களின் உரிமைகளுக்காக பார்லிமென்டிலும் குரல் கொடுப்பேன்,'' என்றார்.

இவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து உள்ள, ஹிமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், ''நியூசிலாந்து பார்லிமென்ட் தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம், நம் நாட்டிற்கும், எங்கள் மாநிலத்திற்கும் அவர் பெருமை சேர்த்துள்ளார்,'' எனக் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-அக்-202012:29:57 IST Report Abuse
Ganesan Madurai ஏன் மீண்டும் மீண்டும் அவர் இந்தியர் என பொய் கூறுகிறது? அப்படியென்றால் நமது நாட்டில் நீயுஸிலாந்து நாட்டவர் யாரேனும் நெடு நாள் வாழ்ந்த காரணத்திற்காக ஓட்டு போட முடியுமா?
Rate this:
Cancel
tkvr - trichy,இந்தியா
20-அக்-202012:08:38 IST Report Abuse
tkvr நல்லவர் யாரே ஆயினும் நாடுஆளும் தகுதி தான் முக்கியம் எங்கு பிறந்தால் என்ன? இது நம் இந்திய நாட்டிற்கும் பொருந்தும் .
Rate this:
Cancel
Rajagopal S -  ( Posted via: Dinamalar Android App )
20-அக்-202006:28:34 IST Report Abuse
Rajagopal S அதெப்படி இந்தியர். அவர் இந்தியாரக அங்கு ஏப்படி செயல் பட முடியும்.அப்படி செயல்பட்டால் தேர்ந்தெடுத்த நாட்டு மக்களுக்கு த்ரோகம் செய்தவர். இதெல்லாம் பீத்த பெருமை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X