இம்ரானுக்கு நெருக்கடி; காய்ச்சி எடுத்த எதிர்க்கட்சிகள்

Updated : அக் 20, 2020 | Added : அக் 20, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
கராச்சி: பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நடந்த கண்டன பொதுக் கூட்டத்தில், பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர்கள், அவரது அரசை கடுமையாக விமர்சித்தனர்.நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.'பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம்' என்ற அமைப்பை, 11 பிரதான எதிர்க்கட்சிகள் சேர்ந்து உருவாக்கின.

கராச்சி: பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நடந்த கண்டன பொதுக் கூட்டத்தில், பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர்கள், அவரது அரசை கடுமையாக விமர்சித்தனர்.



latest tamil news


நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.'பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம்' என்ற அமைப்பை, 11 பிரதான எதிர்க்கட்சிகள் சேர்ந்து உருவாக்கின. 'இம்ரான் அரசில் ஊழல் அதிகரித்து விட்டது. அரசு நிர்வாகத்தில் ராணுவத்தின் தலையீடு அதிகரித்துள்ளது' எனக் கூறி, அரசுக்கு எதிராக, போராட்டங்கள் மற்றும் பேரணிகளை, இந்த அமைப்பு தொடர்ந்து நடத்தி வருகிறது. கராச்சியில், நேற்று முன்தினம் இரவு, பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது.

அதில், பாக்., மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் சர்தாரி, நவாஸ் ஷெரீப்பின், பாக்., முஸ்லிம் லீக் கட்சியின் துணை தலைவர்கள் மரியம் நவாஸ், ஷாஹித் கக்கான் அப்பாஸி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில், லண்டனில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசிய நவாஸ் ஷெரீப் கூறுகையில், ''இம்ரான் கான் தலைமையிலான கைப்பாவை அரசு அமைந்ததற்கு பின்னணியில், பாக்., ராணுவம் மற்றும் உளவுத் துறையும் உள்ளன,'' என்றார்.

இதையடுத்து, பிலாவல் சர்தாரி கூறுகையில், ''இந்த திறமையற்ற பிரதமர், வீட்டிற்கு செல்ல வேண்டும். சர்வாதிகாரிகளால் உயிர்வாழ முடியாது என்பதை, வரலாறு நிரூபித்திருக்கிறது,'' என்றார்.


latest tamil news


இதன்பின் பேசிய நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் கூறியதாவது:இம்ரான் கான் அரசிடம் கேள்விகளை கேட்டால், எங்களை துரோகிகள் என்கின்றனர். அரசின் தோல்விகளை மறைக்க, ராணுவத்தை பயன்படுத்தும் இம்ரான் கான், ஒரு கோழை.ராணுவத்தை இழிவுபடுத்தும் உரிமையை, அவருக்கு கொடுத்தது யார்? எங்களை எளிதில் அச்சுறுத்திவிடலாம் என நினைக்க வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.எதிர்க்கட்சிகளின் தீவிரமான போராட்டத்தால், இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு, நெருக்கடி அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மோகன் - லண்டன்,யுனைடெட் கிங்டம்
20-அக்-202012:06:39 IST Report Abuse
மோகன் இதெல்லாம் தெரிஞ்ச அப்புறமும் நம்ம பப்பு அறிக்கை விடுவார். பாகிஸ்தான் அமைதி பூங்காவாக இருக்கிறது என்று.
Rate this:
Cancel
KavikumarRam - Indian,இந்தியா
20-அக்-202012:03:33 IST Report Abuse
KavikumarRam இது பாக் எதிர்க்கட்சிகளின் வன்மையான சதி. எங்கள் ராகுல்சி அவர்களும் சொக்கத்தங்கம் அவர்களும் பாகிஸ்தான் இந்தியாவை விட சிறந்த முறையில் கொரானாவை தடுத்ததாகவும்.. ஊழலற்ற அரசு என்றும் அடிச்சு சொல்லியிருக்காரு. நாங்க பாகிஸ்தான் மோசமான அரசு என்பதை நம்ப மாட்டோம்.
Rate this:
Cancel
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) இங்குள்ள பப்பு பாகிஸ்தானை போற்றுவது அவர்கள் ராணுவத்தை தான் போற்றி கொண்டு இருக்கானா அப்ப ??? அடேய் பப்பூவே கேவலமா இல்லையா அவங்க ராணுவத்திற்கு முட்டு கொடுக்க?? இப்ப உன் அஜெண்டா வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X