சீனாவில் வேகமெடுக்கும் பொருளாதார வளர்ச்சி

Updated : அக் 20, 2020 | Added : அக் 20, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
பீஜிங்: சீனாவில், கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரம், தற்போது அதிவேக வளர்ச்சி அடைந்து வருகிறது. நம் அண்டை நாடான சீனாவில் இருந்து தான், கொரோனா வைரஸ் முதலில் பரவத் துவங்கியது.எனினும், இங்கு, தற்போது வைரஸ் பாதிப்பு, முழுதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த சீன பொருளாதாரமும், தற்போது அந்த பாதிப்பில் இருந்து

பீஜிங்: சீனாவில், கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரம், தற்போது அதிவேக வளர்ச்சி அடைந்து வருகிறது. நம் அண்டை நாடான சீனாவில் இருந்து தான், கொரோனா வைரஸ் முதலில் பரவத் துவங்கியது.



latest tamil news


எனினும், இங்கு, தற்போது வைரஸ் பாதிப்பு, முழுதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த சீன பொருளாதாரமும், தற்போது அந்த பாதிப்பில் இருந்து வேகமாக மீண்டு வருகிறது.உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக விளங்கும் சீனா, கடந்த ஜூலை முதல் செப்டம்பர் இடையிலான காலாண்டில், 4.9 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது.

அதற்கு முந்தைய காலாண்டில், 3.2 சதவீதமாக, பொருளாதார வளர்ச்சி இருந்தது.சீனாவில், அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுஉள்ளன. பெரும்பாலான தொழில்கள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன. சில்லறை செலவினங்கள், கொரோனா வைரசுக்கு முந்தைய காலத்தில் இருந்த நிலைமைக்கு மீண்டும் திரும்பியுள்ளன.


latest tamil news


முக கவசம், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் போன்ற பொருட்களின் ஏற்றுமதி தேவை அதிகரித்துள்ளது. இதனால், உள்நாட்டு உற்பத்தியும் வளர்ச்சியை காண்கிறது. 'அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார செயல்பாடுகள் குறைந்து வரும் நிலையில், இந்த ஆண்டு, வளர்ச்சியை காணும் பெரிய பொருளாதார நாடாக, சீனா இருக்கும்' என, பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,பஹ்ரைன்
20-அக்-202019:34:15 IST Report Abuse
Raj உலகத்துக்கு கொரோனா கொடுத்த சீனாவுக்கு வளர்ச்சி
Rate this:
Cancel
Madasamy - Rajapalayam,இந்தியா
20-அக்-202015:07:15 IST Report Abuse
Madasamy சீனான் என்றாலே பெய்யான் என்று தான் அர்த்தம் சார் இப்ப வரைக்கும் அவன் எந்த உண்மையை ஓப்புகொண்டுள்ளான்.கொரனா வைரஸ் எங்கிருந்து பரப்பப்பட்டது என்பது அனைவருக்கும்தெரியும் அவன் இதை பரப்பியதே அனைவரும் கொரனாவில் தவிக்க வேண்டும் அந்த சமயத்தில் அவன் தான் பெரியவன் என்று காட்ட வேண்டும் .இங்கே உள்ள எதிர்கட்சிகள் அனைத்தும் கொரனாவை ஒழிக்க மோடி கைதட்ட சொல்கிறார் என்று எல்லாம் நக்கலாக பேசினார்கள் ஆனால் எவனாவது ஒருத்தன் கொரனா வைரஸ் சீனாவில் இருந்து வந்தது என்று ஓரு கண்டனத்தையாவது தெரிவித்தானா எனக்கு தெரிஞ்சி இல்லை எல்லாம் சீனாவின் கைக்கூலிகள் பிறகு எப்படி என் நாட்டு ஜிடிபி வளரும்.இங்கு இருக்கும் பல அரசியல் தலைவர்கள் வெளி நாட்டு கைக்கூலிகள் இவர்கள் களையெடுக்கப்பட வேண்டும் விரைவில் நடக்கும் இது என் தாய் மண் வளரும் விரைவில்
Rate this:
Cancel
Giri - Erode,இந்தியா
20-அக்-202014:29:02 IST Report Abuse
Giri தனியாக ஓடும்போது முதல் இடம்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X