பொது செய்தி

இந்தியா

'தொழிலதிபர்கள் அரசியல் பக்கமே வருவதில்லை. அது தேவையில்லாத ஆணி என நினைத்து இருக்கலாம்'...

Updated : அக் 20, 2020 | Added : அக் 20, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
பணத்தை வைத்து, வெற்றி பெறலாம் என்றால், டாடா, பிர்லா கூட, இந்தியா முழுவதும், வெற்றி பெற்று பிரதமர் ஆகி விடலாம். எனவே, துணை முதல்வர் பன்னீர் செல்வம் நினைப்பது போல, வருங்காலத்தில், அ.தி.மு.க., வெற்றி பெற முடியாது - தேனி மாவட்ட தி.மு.க., செயலர் தங்க தமிழ்செல்வன்.'டாடா, பிர்லா போன்ற தொழிலதிபர்கள், அரசியல் பக்கமே தலைவைத்து படுப்பதில்லை. அது, தேவையில்லாத ஆணி என்பது, அவர்களின்
தங்கதமிழ்செல்வன், திருப்பதிநாராயணன், உதயநிதிஸ்டாலின்

பணத்தை வைத்து, வெற்றி பெறலாம் என்றால், டாடா, பிர்லா கூட, இந்தியா முழுவதும், வெற்றி பெற்று பிரதமர் ஆகி விடலாம். எனவே, துணை முதல்வர் பன்னீர் செல்வம் நினைப்பது போல, வருங்காலத்தில், அ.தி.மு.க., வெற்றி பெற முடியாது
- தேனி மாவட்ட தி.மு.க., செயலர் தங்க தமிழ்செல்வன்.


'டாடா, பிர்லா போன்ற தொழிலதிபர்கள், அரசியல் பக்கமே தலைவைத்து படுப்பதில்லை. அது, தேவையில்லாத ஆணி என்பது, அவர்களின் எண்ணமாக இருக்கிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தேனி மாவட்ட தி.மு.க., செயலர் தங்க தமிழ்செல்வன் பேச்சு.



தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. தேர்தல் நெருங்க நெருங்க இனி மேலும் இது அதிகரிக்கும். ஆனால், பா.ஜ.,வினர் உட்பட அனைத்து கட்சியினரும் சமூக விலகலை கடைப்பிடிப்பதில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை
- பா.ஜ., செய்தித் தொடர்பாளர் திருப்பதி நாராயணன்.


'இப்படித் தான், கேரளாவில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு, தளர்வுகளை யாரும் கடைப்பிடிக்கவில்லை. இப்போது, அந்த மாநிலத்தின் நிலைமை மோசமாக உள்ளது...' என, கூறத் துாண்டும் வகையில், பா.ஜ., செய்தித் தொடர்பாளர் திருப்பதி நாராயணன் அறிக்கை.



திரிபுராவில், 3,536 பேர், 'நீட்' எழுதி, 88,889 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேர்வு முடிவு வந்துள்ளது. ஒவ்வொரு மாணவரும், 25 முறை தேர்வு எழுதினால் கூட இவ்வளவு பேர் தேர்ச்சியடைய முடியாது. இந்த குளறுபடிகள், நீட் ஓர் அயோக்கியத்தனம் என்பதை நிரூபித்துள்ளது
- உதயநிதி ஸ்டாலின்.


latest tamil news





'சமீபத்தில், உங்கள் கட்சியிலும் இதுபோல, உறுப்பினர் சேர்க்கை நடந்ததாக, அ.தி.மு.க.,வினர் கூறினரே...' என, நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை.



முன்னேறிய வகுப்பு மாணவர்களுக்கான, 10 சதவீத இட ஒதுக்கீடு ஆணை மூன்றே நாட்களில் நடைமுறைக்கு வருகின்றது. மருத்துவக் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் தர, கவர்னருக்கு, 45 நாட்கள் போதாதாம்; அரசு நடக்கிற லட்சணம்!
- தமிழக காங்., செய்தித் தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ்


'அனைத்து பிரிவு மாணவர்களும் ஒன்று தான் என்றே, அரசியல் தலைவர்கள் எண்ண வேண்டும். ஆனால், தமிழகத்தில் தான், முன்னேறிய பிரிவு, பின்னேறிய பிரிவு, நடுத்தர பிரிவு என, பிரிவினைவாத அரசியல் நடக்கிறது...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தித் தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை.



இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கொள்கையில், பா.ஜ., உறுதியாக உள்ளது. இட ஒதுக்கீட்டில், மத்திய அரசு கை வைக்க முயன்றால், அதை என்னால் ஏற்க இயலாது
- பா.ஜ., துணைத் தலைவர் அண்ணாமலை.


'கட்சியில் சேர்ந்த உடன், மிரட்டலா...' என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., துணைத் தலைவர் அண்ணாமலை பேட்டி.


Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Ganesan - Chennai,இந்தியா
20-அக்-202021:56:15 IST Report Abuse
R.Ganesan பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு தமிழகத்தில் மட்டும் தான் செயல்படுத்தப்படவில்லை என்பது பீட்டர் அல்போன்ஸ்க்கு தெரியாதா? இவ்வாறு பொறுப்பற்று பேசும் இவர் ஜாதி மற்றும் மத பற்றாளர் என்பது தெளிவாகிறது. ஒரு காங்கிரஸ்காரர் , தி.மு.கவை குஷிப்படுத்த இவ்வாறு பேசுவது கேவலம்.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
21-அக்-202016:48:37 IST Report Abuse
Endrum Indianஅது என்ன ஜாதி மத பற்றாளர், வெறியர்கள் அவர்கள். கிறித்துவர்கள் அல்லது முஸ்லிம்கள் தங்களை மனிதர்களாக பார்ப்பதே கிடையாது, தங்களை வெறும் கிறித்துவர்களாக அல்லது முஸ்லிம்களாக மட்டுமே பார்க்கின்றார்கள்...
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
20-அக்-202019:41:04 IST Report Abuse
Rajagopal அரசியல்வாதிகளே தொழிலதிபர்களாக மாறி, சட்டங்களைத் தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்தி தங்களுக்கும், தங்கள் குடும்பத்துக்கும் எல்லாம் செய்து கொள்வது தெரியவில்லையா?
Rate this:
Cancel
20-அக்-202017:05:28 IST Report Abuse
மாயவரம் சேகர் திமுக தலைவர்கள் சம்பாதித்த பணத்தை பணத்தை குறுகிய கால பெரிய வருவாயை முதலீடு செய்து தொழிலதிபராகி மேலும் மேலும் சம்பாதிக்கின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X