தயாராகிறது அதிகாரிகள் கல்தா லிஸ்ட்டு - டவுன் பிளானிங்கில் வெடித்தது வேட்டு| Dinamalar

தயாராகிறது அதிகாரிகள் 'கல்தா' லிஸ்ட்டு - டவுன் பிளானிங்கில் வெடித்தது 'வேட்டு'

Added : அக் 20, 2020 | |
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்குச் சென்று விட்டு, சித்ராவும், மித்ராவும் அரசு பஸ்சில் கோவை திரும்பிக் கொண்டிருந்தனர். நீலாம்பூர் பை-பாஸ் அருகே, 106 அடி உயரத்துக்கு புதிதாக அமைத்துள்ள அ.தி.மு.க., கொடிக்கம்பத்தை பார்த்த மித்ரா, ''அக்கா, கொடியேற்று விழாவையும் மாநாடு போல் நடத்தியிருக்காங்க. சூலுார் வட்டார ரத்தத்தின் ரத்தங்கள் உற்சாகத்தில் இருக்காங்களாம். இருந்தாலும்,
 தயாராகிறது அதிகாரிகள் 'கல்தா' லிஸ்ட்டு - டவுன் பிளானிங்கில் வெடித்தது 'வேட்டு'

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்குச் சென்று விட்டு, சித்ராவும், மித்ராவும் அரசு பஸ்சில் கோவை திரும்பிக் கொண்டிருந்தனர். நீலாம்பூர் பை-பாஸ் அருகே, 106 அடி உயரத்துக்கு புதிதாக அமைத்துள்ள அ.தி.மு.க., கொடிக்கம்பத்தை பார்த்த மித்ரா, ''அக்கா, கொடியேற்று விழாவையும் மாநாடு போல் நடத்தியிருக்காங்க. சூலுார் வட்டார ரத்தத்தின் ரத்தங்கள் உற்சாகத்தில் இருக்காங்களாம்.

இருந்தாலும், 'மாஜி' மேயர்கள் இருவரும், விழாவை புறக்கணிச்சிட்டாங்களாம்,''ஊருக்கு வெளியே, அவ்ளோ பெரிய கொடிக்கம்பம் எதுக்கு வச்சிருக்காங்க,''''நம்மூரு அ.தி.மு.க., கோட்டைங்கிறதை, வெளியூர்ல இருந்து வர்றவங்களும் தெரிஞ்சுக்கணும்ங்கிறதுக்காக, பை-பாஸ் அருகிலேயே கம்பம் நட்டிருக்காங்க,''''பார்க்கலாம், வரப்போற எலக்சன்ல யாரு ஜெயிக்கிறாங்கன்னு,''''அக்கா, தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சிக்காரங்க இப்பவே தயாராகிட்டாங்க.

மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு, மாவட்ட, மாநகராட்சி உயரதிகாரிகளுக்கு உத்தரவு போட்டிருக்காங்க.எந்தெந்த பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்பட்டிருக்குன்னு, பட்டியல் சமர்ப்பிக்கவும் சொல்லியிருக்காங்களாம். ஆனா, தி.மு.க., ஆதரவு அதிகாரிகள் பலரும் ஆர்வம் காட்டாம, அதிருப்தியில் இருக்காங்க,''

''இதை தெரிஞ்சுக்கிட்ட ஆளுங்கட்சி தரப்பு, ஒத்துவராத அதிகாரிகளை 'துாக்குறதுக்கு' ஆலோசனை நடந்துக்கிட்டு இருக்குதாம். 'லிஸ்ட்' ரெடி பண்ணிட்டதா, சொல்றாங்க,''''ஓ... எலக்சனை மனசுல வச்சுதான், மூணு நாளுக்குள்ள கட்டட வரைபட அனுமதி கொடுக்குற திட்டத்தை, கார்ப்பரேசன்ல செயல்படுத்தி இருக்காங்களா,''''ஆமாக்கா, உண்மைதான்! கார்ப்பரேஷன் மெயின் ஆபீசுல ஒரு பைல் கூட, பெண்டிங் இல்லையாம். விண்ணப்பதாரருக்கு இரண்டு தடவை போன் செய்து, பேசுறாங்க. ஏதாவது ஒரு ரூபத்தில் லஞ்சம் வாங்கிடக் கூடாதுன்னு நெனைக்கிறாங்க,''

''மித்து, கார்ப்பரேஷன் கமிஷனரும், துணை கமிஷனரும் மட்டும் நினைச்சா போதாது; டவுன் பிளானிங் செக்சன்ல இருக்கற எல்லோருமே, மனசு வைக்கணும்,''''மெயின் ஆபீசுல ஒரு பைல் கூட பெண்டிங் இல்லைன்னு சொல்றாங்க. மண்டல அலுவலகத்துல ஒரு மாசத்துக்கு முன்னாடி பணம் கட்டுனவங்களுக்கு கூட, இன்னும் ஆர்டர் கொடுக்கலை,''

''அப்படியா, '' என, வியந்த மித்ரா, ''கார்ப்பரேஷன் துணை கமிஷனர் மதுராந்தகி, ரெண்டு நாளைக்கு முன்னாடி, டவுன் பிளானிங் செக்சனுக்கு போயி, லெப்ட் அண்டு ரைட் வாங்கியிருக்காங்க. இனி, ஜோனல் ஆபீசுக்கும் போனா தான், வேலை நடக்கும் போலிருக்கு,''ஹோப் காலேஜ் ஸ்டாப் வந்ததும், பஸ்சை விட்டு இறங்கிய இருவரும், பேக்கரிக்குள் சென்று, டீ ஆர்டர் கொடுத்தனர்.டீயை உறிஞ்சிய மித்ரா, ''வடக்கு தாலுகா அலுவலக ரெய்டு பத்தி ஏதாவது விசேஷ தகவல் இருக்கா,''

''ம்ம்...ரெய்டு நடக்கும்போது தாசில்தார்கிட்டயும் பணம் இருந்துச்சாம். அந்த தொகைக்கு அவரு, 'கணக்கு' காட்டிட்டாராம். இருந்தாலும், வடக்கு தாலுகா ஆபீசுல நடந்த விவரத்தை பட்டியலிட்டு, கலெக்டருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கையா சமர்ப்பிக்குமாம். துறை ரீதியான நடவடிக்கையை, கலெக்டர் எடுக்கணுமாம்,''

''அப்படியே, கார்ப்பரேஷன் ஆபீஸ்சுக்குள்ளயும் நுழைஞ்சா நல்லாயிருக்கும். ஏகப்பட்ட திமிங்கலங்கள் சிக்கும்,'' என்றபடி, டீயை குடித்து விட்டு, பேக்கரியில் இருந்து வெளியேறினாள் சித்ரா.'பார்க்கிங்'கில் இருந்த ஸ்கூட்டரை எடுத்து வந்த மித்ரா, ''அக்கா, லஞ்சம் வாங்காத, கவர்மென்ட் ஆபீசே இல்லைங்கிற நிலைமை வந்துடுச்சு. பேரூர் தாலுகா அலுவலகத்திலும், புரோக்கர் நடமாட்டம் அதிகமா இருக்குதாம். 'எடுபிடி' வேலை செய்றதுக்காக, ரெண்டு பேர் இருக்காங்களாம்,''

''புல வரைப்படம் (எப்.எம்.பி., ஸ்கெட்ச்) கொடுக்கறதுக்கு, ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்குறாங்க. கெஞ்சினால், 500 ரூபாய் குறைக்கிறாங்களாம். இதுமாதிரி, ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு ரேட் 'பிக்ஸ்' பண்ணியிருக்காங்களாம். கரன்சி கொடுக்காம, எந்த வேலையும் நடக்காதாம்,''''இதே மாதிரி, தொண்டாமுத்துார் யூனியனுக்கு உட்பட்ட வி.ஏ.ஓ., ஆபீசிலும் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே காரியம் சாதிக்க முடியுமாம். விவசாய பூமிகளின் உரிமை சான்று பெறுவதற்கு, ரூ.2 ஆயிரம். அடங்கல் பெறுவதற்கு, ரூ.500, சிட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.15 ஆயிரம் கேக்கறதால, விவசாயிகள் கொந்தளிப்பில் இருக்காங்களாம்,''பின் இருக்கையில் அமர்ந்த சித்ரா, ''மித்து, வடக்கு தாலுகா ஆபீசுல நடந்த ரெய்டுமே, சென்னையில் இருந்து வந்த உத்தரவாம்.

தவிர்க்க முடியாத நெருக்கடியால், சோதனை செஞ்சதா சொல்றாங்க,'' என, 'ரெய்டு'க்கான பின்னணியை சொன்னாள்.''ஓ... அப்படியா,'' என்ற மித்ரா, ''கார்ப்பரேஷன் ஆபீசுல குடிநீர் இணைப்பு வழங்குறதுக்கும் லஞ்சம் வாங்குறாங்களாமே,'' என, நோண்டினாள்.''ஆமாப்பா, கார்ப்பரேஷன் ஆபீசுல லஞ்சம் வாங்காத அதிகாரிகளை விரல் விட்டு எண்ணிடலாம். அந்தளவுக்கு 'கரப்ஷன்' அதிகமாயிடுச்சு. வழக்கமா, அரசு ஊழியர்களை துாக்கியடிக்கணும்னா, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு அனுப்புவாங்க. இப்ப, அப்படியில்லை; ஜே.என்.என்.யு.ஆர்.எம்., பிரிவுக்கு அனுப்புறாங்க,''

''அக்கா, இன்னொரு விஷயம் தெரியுமா,'' என்ற மித்ரா, ''ஜே.என்.என்.யு.ஆர்.எம்., என்கிற பிரிவு, காங்கிரஸ் ஆட்சிக்காலத்துல உருவாக்குனது; 56 போஸ்ட்டிங் தோற்றுவிச்சாங்க. அந்த பிரிவை கலைச்சிருக்கணும். அதிகாரிகளுக்கு பதவி கொடுக்கணுங்கிறதுக்காக, பொதுப்பிரிவுல இருந்து, சம்பளம் கொடுத்து, சமாளிச்சிட்டு இருக்காங்க. தணிக்கை பிரிவு அதிகாரிகள், இதையெல்லாம் தோண்டி துருவி, கேள்வி கேட்காமல், விட்டுடுறாங்க,'' என்றபடி, நவ இந்தியா சிக்னலில் 'ரெட்' விழுந்ததால், ஸ்கூட்டரை நிறுத்தினாள் மித்ரா.

''மித்து, 'மாஜி' கமிஷனர் ஒருத்தரு, டிராவல்ஸ் அதிபருடன் உற்சாக பானம் குடிச்ச ஓட்டல்காரங்க, கார்ப்பரேஷனுக்கு, 4 கோடி ரூபாய் சொத்து வரி செலுத்தணுமாம். கார்ப்பரேஷனுக்கு சாதகமாக கோர்ட் தீர்ப்பு சொல்லியும், அதிகாரிகள் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காம இருக்காங்களாம்,''''ஊழியர்களுக்கு சம்பளம் போட பணமில்லைன்னு, அக்கவுன்ட்ஸ் செக்சன்காரங்க புலம்புறாங்க. கோடிக்கணக்குல வரி வசூலிக்காம, வருவாய் பிரிவுக்காரங்க, ஜாலியா சுத்துறாங்களா,'' என, கேட்டாள் மித்ரா.

''மித்து, அவுங்களுமே யோக்கியமில்லை! அந்த செக்சன்ல இருக்குற சில பேரு, கறார் பேர்வழியாம். ஒரு கோடி ரூபாய் பட்டுவாடா செய்யணும்னா, 50 ஆயிரம் கேட்குறாங்களாம். ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்கு நெருக்கமானவங்களுக்கு பட்டுவாடா செய்ய, சல்லிக்காசு கேட்க மாட்டாங்களாம். மத்தவங்க, யாரா இருந்தாலும், கரன்சி வெட்டாம, 'பில்' சாங்ஷன் ஆகாதாம்,''''ஓ... அப்படியா...'' என, கேட்டபடி, லட்சுமி மில்ஸ் சிக்னலை கடந்த மித்ரா, ''அக்கா, இன்ஜி., செக்சன்ல இருக்குற ஒரு அதிகாரிக்கு, வடவள்ளிக்காரர் ஆதரவு இருக்கறதுனால, நாலு பதவி கொடுத்திருக்காங்களாமே,'' என, கிளறினாள்.

''குப்பை ஊழல், மூணு லாரி மாயமான விவகாரத்துல சிக்குன அதிகாரியை பத்திதானே, கேக்குறே,'' என்ற சித்ரா, ''அவரை பற்றிய தகவல்களை சேகரிச்சு, ஆளுங்கட்சி வி.ஐ.பி., தரப்புக்கு சொல்லிட்டாங்களாம். ஆதாரம் சிக்குச்சுன்னா, அவ்ளோதானாம்,''''அக்கா, அப்படிதான் சொல்லுவாங்க. புதுசா வந்திருக்கிற அதிகாரியும், 'இரட்டையர்' பிடிக்குள் சிக்கிடுவாருன்னு, கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் பேசிக்கிறாங்க,'' என்ற மித்ரா,

''ஜே.என்.யு.ஆர்.எம்., பிரிவுல கண்காணிப்பு பொறியாளர் பதவி காலியா இருக்கு. இரண்டு வருஷமா, அந்த போஸ்ட்டிங்கிற்கு அதிகாரி நியமிக்காம இருக்காங்க,'' என்றபடி, ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்ட சாலைக்குள் ஸ்கூட்டரை ஓட்டினாள்.அப்போது, அவர்களை கடந்து சென்ற போலீஸ் ஜீப்பை பார்த்த சித்ரா, ''மித்து, வெரைட்டி ஹால் ரோடு போலீஸ்காரங்க, ரொம்பவே நொந்து போயிருக்காங்ளாம்,'' என்றாள்.''ஏன்க்கா, என்னாச்சு, கலெக்சன் குறைஞ்சிடுச்சா,''

''அப்படியில்லை, மித்து! கொரோனா பரவலுக்கு பிறகு, வெரைட்டி ஹால் ரோடு ஸ்டேஷனில் வேலைபார்க்குற போலீஸ்காரங்களுக்கு 'டியூட்டி டைம்' மாத்தாம இருக்காங்களாம். கொரோனா தடுப்பு வேலை செய்றவங்க, வறுமையில் வாடுறாங்களாம். மார்க்கெட் ஏரியாவை கவனிக்கிறவங்க குபேரனா மாறிட்டு இருக்காங்களாம். போலீஸ் வட்டாரத்துல, புலம்பல் சத்தம் அதிகமா இருக்கு,''

''தி.மு.க., நிர்வாகிகளும் கொந்தளிப்புல இருக்கறதா, கேள்விப்பட்டேனே, உண்மையா,'' என, 'ரூட்' மாறினாள் மித்ரா.''அதுவா, வரப்போாற சட்டசபை தேர்தலில் ஜெயிக்கணும்ங்கிறதுக்காக, கோவை மாவட்ட தி.மு.க.,வை அஞ்சா பிரிச்சு, 64 பேரை பொறுப்புக்குழு உறுப்பினரா, கட்சி தலைமை நியமிச்சிருக்கு,''''மேலிடத்துக்கு பட்டியல் கொடுத்த, மாவட்ட பொறுப்பாளர்கள், லட்சக்கணக்கில் பணம் வாங்கிட்டு போஸ்டிங் போட்டிருங்காங்களாம். மாநகர் தெற்கு, கிழக்கு, தொண்டாமுத்துார், மேட்டுப்பாளையத்துல, நில மோசடி வழக்கில் தொடர்புடையவங்க, கட்சிக்கு புதுசா வந்தவங்கிட்ட, அஞ்சு லட்சம் ரூபாய் வரைக்கும் வசூல் பண்ணியிருக்காங்களாம்,''

''கட்சியில் சீனியரா இருக்கறவங்களை விட்டுட்டு, பக்கத்து மாவட்டத்தை சேர்ந்தவங்களையும் நியமிச்சிருக்காங்களாம். வர்ற, 21ம் தேதி சென்னையில் நடக்குற கூட்டத்துல, புகார் கொடுக்கப் போறாங்களாம்,'' என்றாள் சித்ரா.''அப்ப, எதிர்க்கட்சி கூடாரத்திலும் சலசலப்பு இருக்குன்னு சொல்லுங்க,'' என்றபடி, வீட்டை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் மித்ரா.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X