அமைச்சரிடமே 'ஆட்டை'... அதிகாரியின் சேட்டை!

Added : அக் 20, 2020 | |
Advertisement
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்துக்கு, திருத்தம் தொடர்பாக, சித்ராவும், மித்ராவும் சென்றனர்.கூட்டம் சற்று அதிகமாக இருக்கவே, அருகிலிருந்த பெஞ்சில், சமூக இடைவெளி விட்டு உட்கார்ந்தனர்.''ஆர்.டி.ஓ.,வ திடீர்னு டிரான்ஸ்பர் பண்ணாங்க தெரியுமா?" ஆரம்பித்தாள் சித்ரா.''கலெக்டருக்கு கூட பயப்படாம, குவாரி, பட்டா திருத்தம்னு, பல வகைல, டார்கெட்' வச்சு நல்லாவே
அமைச்சரிடமே 'ஆட்டை'... அதிகாரியின் சேட்டை!

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்துக்கு, திருத்தம் தொடர்பாக, சித்ராவும், மித்ராவும் சென்றனர்.

கூட்டம் சற்று அதிகமாக இருக்கவே, அருகிலிருந்த பெஞ்சில், சமூக இடைவெளி விட்டு உட்கார்ந்தனர்.

''ஆர்.டி.ஓ.,வ திடீர்னு டிரான்ஸ்பர் பண்ணாங்க தெரியுமா?" ஆரம்பித்தாள் சித்ரா.
''கலெக்டருக்கு கூட பயப்படாம, குவாரி, பட்டா திருத்தம்னு, பல வகைல, டார்கெட்' வச்சு நல்லாவே கல்லா கட்டிட்டாங்க. பணம் கைமாத்துறல அவங்களோட அப்பாவே 'ஹெல்ப்' பண்றார்ன்னு, சில தாசில்தாருங்க, நேரடியாக கலெக்டர்கிட்ட சொல்லிட்டாங்க. பொறுத்தது போதும்னு, கலெக்டர் மேலிடத்துக்கு 'ரிப்போர்ட்' போட்டுட்டாருக்கா,''

"ஓ...அதனால தான், 'வெயிட்டிங் லிஸ்ட்ல' வச்சுட்டாங்களாம்..." சொன்ன சித்ரா, ''சில ஆபீசில், ரிட்டயர்டு அதிகாரிங்களோட, நாட்டாமை தாங்க முடியலை,'' என புதிர் போட்டாள்.

"அடடே, இந்த கூத்து எங்கீங்க்கா?"

''தாராபுரம் தாலுகா ஆபீசிலதான். சமீபத்தில், ரிட்டயர்டு ஆன அந்த அதிகாரியோட ஆலோசனைப்படி தான், எல்லாரும் வேலை பாக்கறாங்களாம். முக்கியமான சில டாக்குமென்ட்களை, அவர் வீட்டுக்கு கொண்டு போய் தர்றாங்களாம். அதில, சில 'டாக்குமென்ட்' காணாம ேபான கதை கூட உண்டாம்,''

அப்போது, 'பீர்ஜாபர்' பேரில் யாராவது இருக்கீங்களா?' என, ஆதார் மைய உதவியாளர் சத்தம் போட்டதும், வயதான ஒருவர் எழுந்து சென்றனர்.
அரட்டையை தொடர்ந்த மித்ரா, ஒரு போலீஸ் ஆபீசர், தன்னோட ஆபீசுக்குள் 'அந்தப்புரமா' மாத்திட்டாருன்னு, போன வாரம் பேசினோம்ல. இந்த விவகாரம் கமிஷனர் காதுக்கு போனதில், 'அங்க இனி லேடி போலீசை யாரையும் அனுப்பாதீங்கனு' ஆர்டர் போட்டு, எல்லாரையும், ஆயுதப்படைக்கு மாத்திட்டாரு,''

''இது தெரிஞ்சவுடன், உச்சகட்ட அதிர்ச்சி அடைஞ்ச ஆபீசர், 'நான் என்ன பண்ணுனேன். இப்படி பண்றாங்கன்னு' புலம்பற புலம்பல், புதுக்கோட்டை வரை கேட்குதாம்''

அதைக்கேட்டு சிரித்த சித்ரா, ''மித்து, சிட்டியில ஒரு அதிகாரி, குடும்பம், பிள்ளைன்னு, செட்டில் ஆகிட்டார். ஆனாலும், அங்க வேல பார்த்த லேடிைய கல்யாணம் பண்ணிகிட்டாராம். அதோடு மட்டுமல்லாமல், அவங்களோட, அக்காகிட்டயும், 'ஜொள்' விடுறாராம்,'' என்றார்.

"யாருங்க்கா, அப்படிப்பட்ட ஆபீசர்?''

"சொல்றேன், கொஞ்சம் பொறுமையா இருடி. திருமுருகநாதர் குடி கொண்ட ஸ்டேஷன் ஆபீசர் லீவுல இருக்கிறதால, அவருக்கு அடுத்த நிலையில இருக்கிற ஒரு 'குட்டி' ஆபீசரோட அதிகாரம் கொடிகட்டி பறக்குதாம். யாரையும் மதிக்கிறது இல்லையாம். கணியாம்பூண்டி, வஞ்சிபாளையம் இப்படி பல இடங்களில், மாமூல் மழையில நனைகிறாராம்,''

அப்போது, அருகில் வந்த ஒருவர், 'ஏம்மா, அரசன்பாபு சார் ஆபீஸ், எத்தனாவது புளோர் என கேட்க, ''சார், எனக்கு தெரியாது, அங்கே கார்த்திக்னு ஒருத்தர் இருப்பார், அவர்கிட்ட கேளுங்க'' என்றாள் சித்ரா.

பிளாஸ்க்கில் இருந்த தண்ணீரை குடித்த மித்ரா, ''கோழிப்பண்ணை ஊர்ல வருவாய்த்துறைக்கு பட்டா மாறுதல், சிட்டா, அடங்கல், அதுஇதுன்னு எந்த வேலையா போனாலும், 'கமிஷன்' இல்லாம, மண்டல அதிகாரி வேலை செய்றது இல்லையாம், அக்கா. வி.ஏ.ஓ.,ங்க கிட்ட, 'டார்க்கெட் பிக்ஸ்' பண்ணி கலெக் ஷன் பண்றாராம். இதனால, பாதிக்கப்பட்ட வி.ஏ.ஓ.,க்கள், 'வட்ட அதிகாரிகிட்ட' கம்ப்ளைன்ட் பண்ணிட்டாங்களாம்,'' என்றாள்.

சித்ராவின் மொபைல் போன் ஒலிக்கவே, ''புஷ்பராஜ் அங்கிள் சொல்லுங்க. அப்பா நாளைக்குத்தான் வருவாரு,'' என பதில் சொல்லி அணைத்தாள்.
போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர், 'படபட'வென போனில் பேசியவாறு, கலெக்டர் பி.ஏ., அறைக்கு செல்ல, 'லிப்டில்' ஏறினார்.

அதைப்பார்த்த சித்ரா, ''ஏ.ஆர்., போலீஸ் வளாகத்தில, மிட்நைட்ல, லேடி போலீஸ் தங்கியிருக்குற இடத்துக்குள், சுவர் ஏறி குதிச்ச ஒருத்தரை புடுச்ச அடிக்க போனாங்க. ஆனா, அவரு ஏ.ஆர்.,போலீஸ்காரருன்னு தெரிஞ்சதால, விட்டுட்டாங்க. அதுவுமில்லாம, அவர் 'புல் போதையில' இருந்திருக்காரு. இதெல்லாம் தெரிஞ்சும், பெரிய அதிகாரி நடவடிக்கை எடுக்கலையாம்,'' ஆதங்கத்துடன் சொன்னாள்.

"இப்ெபல்லாம் கட்டப்பஞ்சாயத்து அதிகமாயிடுச்சுங்க்கா,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.

''அணைக்காடு பகுதியில நில பிரச்னையை முடிச்சு தர்றதா சொல்லி, தாமரை கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர் கட்டப்பஞ்சாயத்து பண்ணி, பல லட்சம் ரூபாயை வாங்கி ஏப்பம் விட்டுட்டாராம்,''

''கட்சி 'சின்ன'தா இருந்தாலும், 'சாமி' ரேஞ்சுக்கு பல வேல பண்றாங்க,'' என சிரித்த சித்ரா, ''பொங்கலுார் ஏரியாவில், மண் கடத்தல் ஜோரா நடக்குதாமே...'' கேள்வி கேட்டாள்.

''உண்மைதாங்க்கா. போன வாரம் அங்கிருக்கிற விவசாய நிலங்களில் இருந்த, ஓடைக்கல்லை, லாரி லாரியாக கடத்தி, கோபி பக்கத்தில் இருக்க சுண்ணாம்பு சூளைக்கு கொண்டு போயிருக்காங்க. போலீசார் ரெய்டு பண்ணதுல, பர்மிட் இல்லாம ஓடின லாரிகள் சிக்கிடுச்சு"

"ஒரு ரெவின்யூ ஆபீசர், ஒரு லாரிக்கு, மூவாயிரம் ரூபாய் வீதம், 30 லாரிக்காரங்க கிட்ட வசூல் பண்ணி, அதிகாரிங்க துவங்கி வி.ஏ.ஓ., வரை பங்கு போட்டு கொடுத்திருக்கிற விஷயமும் தெரிஞ்சிருக்கு. எல்லாம் அந்த செந்தில்குமரனுக்கே வெளிச்சம்...'' விளக்கினாள் மித்ரா.

''அதுதான், எங்க பார்த்தாலும் நடக்குது. ஆயிரம் பிரச்னை இருந்தாலும், மண் அள்ளி செல்லும் லாரியை புடிக்கிறதில, பெரும்பாலான ரெவின்யூ ஆபீசர்கள்
கண்ணும் கருத்துமாகத்தான் இருக்காங்கடி,''

''கரெக்டா, சொன்னீங்க'' என்ற மித்ரா, ''அக்கா, இருங்க, போய் கேட்டுட்டு வர்றேன்,'' என்றவாறு, எழுந்து சென்றாள். சுவற்றில் அடித்த பந்து போல, திரும்பி வந்தவள், ''சர்வர் கோளாறாம்,'' என்றபடி பெஞ்சில் உட்கார்ந்தாள்.

''மண் மேட்டர் போலவே, நெருப்பெரிச்சலில், ஒரு லேண்ட் மேட்டர். அங்கே, 5 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை, 'ஸ்வாஹா' செய்ய ரெண்டு பேர் 'ட்ரை' பண்றாங்க. 'லேண்ட் டாக்குமென்ட்டை' தங்களோட பேருக்கு மாத்த, ரெவன்யூ அதிகாரிகள, 'தாஜா' பண்ண ஆரம்பிச்சிருக்காங்களாம். பெரிய லெவல்ல டீலிங் போகுதாம்டி,''
''எந்த ஆட்சி வந்தாலும், இதுமாதிரி 'கரப்ஷன்' ஓயாது போல,'' என்ற மித்ரா, ''இதெல்லாம் அந்த ஆண்டவனுக்கே பொறுக்காது அக்கா,'' என திடீரென்று சொன்னாள்.

''புரியற மாதிரி சொல்லுடி...''

"லிங்கேஸ்வரர் ஊர்ல, ஏற்கனவே, 28 டாஸ்மாக் கடை இருக்கு. அவிநாசி நகர பகுதியை ஒட்டி மட்டும், 12 கடை இருக்குது. இதுக்கு மேல கடை திறந்தா தாங்காதுன்னு, அதிகாரிகளே முடிவு பண்ணிட்டாங்க. இருந்தாலும், உடுமலை மந்திரியோடு ரெகமெண்டேஷன்னு சொல்லிட்டு, இன்னொரு கடை திறக்க போறாங்க..."

''ஸ்கூல் திறக்காறாங்களோ இல்லையோ, இதய மட்டும் திறந்துட்டே இருக்காங்க,'' கோபமாக சொன்ன சித்ரா, ''இதுக்கெல்லாம், யார் முடிவு கட்டுவாங்கன்னு தெரியலே,'' என்றவாறு தண்ணீர் குடித்து விட்டு தொடர்ந்தாள்.
''தகவல் தொடர்பு அமைச்சர், 'ஒரு 500 டி--ஷர்ட் வேணும்னு, நம்ம மாவட்ட வி.ஐ.பி.,கிட்ட கேட்டிருக்கார். அவரும், பி.ஆர்.ஓ., ஆபீஸ் மூலமா ஏற்பாடு செஞ்சு கொடுத்திருக்காரு. ஆனா, சைக்கிள் கேப்புல, ஒரு 'டி-சர்ட்'க்கு எக்ஸ்ட்ரா கணக்கு காண்பிச்சு, சில ஆயிரங்களை அங்கிருக்கும் ஒரு 'குட்டி' ஆபீசர் பாக்கெட்டில் போட்டுட்டாராம்,''

அருகில் நின்றிருந்த ஒருவர், 'பாலாஜி எங்கிருக்கிற. நா வந்து, ஒன் ஹவர் ஆச்சு,' என சத்தம் போட்டு பேசினார். அதைக்கேட்ட மித்ரா, ''போனில் பேசாம, இங்கிருந்தே பேசினால், அவருக்கு காது கேட்டுடும்,'' என சிரித்தாள்.

ஆதார் மைய உதவியாளர் கூப்பிடவே, இருவரும் சென்று, விண்ணப்பத்தை கொடுத்து, திருத்தம் பற்றி கூறி, வெளியேறினர்.

அப்போது, கலெக்டர் அலுவலகத்துக்குள் பத்திரப்பதிவுத்துறை ஜீப் நுழைந்தது. அதைப்பார்த்த சித்ரா, ''அவிநாசியில நடந்த கூத்து தெரியுமா?'' என்றாள்.

''தெரிலீங்களே...''

''போன வாரம், அவிநாசியில சப்-ரிஜிஸ்டர் ஆபீசில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டுக்கு போயிருக்காங்க. வாரவாரம், சனிக்கிழமைதான், பணம் பரிவர்த்தனையாகுதுன்னு புகார். ஆனா, பெரிசா ஒண்ணும் கெடைக்கல. மொத்தம், 12 ஆயிரத்து சொச்சம் ரூபாய் மட்டும், கணக்கில் வரலைன்னு பறிமுதல் பண்ணிட்டாங்க,''

''அப்ப, அந்த ஆபீசில், ஒருத்தர் குறுக்கும், நெடுக்குமா போயிட்டிருந்தார். அவரை கூப்பிட்டு, 'நீங்க யார், எந்த கிரேடு'னு கேட்டதற்கு, ''ஐயா, பேரு ராமசாமிங்க. கவர்மென்ட் சர்வன்ட் இல்லீங்கய்யா. வெறும், அஞ்சாயிரம் சம்பளத்துக்கு, பைல் எடுத்து கொடுத்து, பத்திரத்தில வேல்யூ சரிபார்த்து குடுக்கற வேல செய்றேன்,'னு அழாத குறையா சொல்லியிருக்கார்,''

''உடனே, கோபமான போலீஸ் அதிகாரி, 'உடனே இங்கிருந்து கிளம்பு. இனிமே, இங்க வரக்கூடாதுன்னு,' சத்தம் போட்டார். துண்டக்காணோம், துணிய காணோம்னு, அவரு, ஓடியே போயிட்டாராம்,'' சொல்லி சிரித்தாள்.

''இது மட்டுமில்ல மித்து. பத்திரத்தில, அவரு 'டிக்' அடிச்சு குடுத்தாதான், ஆபீசரு கிரயம் செய்வாராம். தன்னை கவனிக்கலைன்னா, 'சர்வே நெம்பர் தப்பு. கைடு லைனில் வேல்யூ' இல்லேன்னு எதையாவது சொல்லி தடுத்து நிறுத்திடுவாராம். அவரு வெளியே போனங்காட்டிதான், 'நவராத்திரியில, நல்லது நடந்திருச்சுன்னு, டாக்குமென்ட் ரைட்டர்ஸ் நிம்மதி பெருமூச்சு விடறாங்களாம்,'' சொன்ன சித்ரா, ''மித்து, உட்கார்டி,'' என கூறியவாறே, வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X