பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக கொரோனா தடுப்பூசி: விலங்குகளுக்கு பரிசோதிக்க ஐசிஎம்ஆர் அனுமதி

Updated : அக் 20, 2020 | Added : அக் 20, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தினை, விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதிக்க ஐசிஎம்ஆர் அனுமதியளித்துள்ளது.கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கோவிஷீல்டு தடுப்பு மருந்து மற்றும் இந்தியாவின் பாரத் பயோடெக் கண்டுபிடித்த கோவேக்சின்
Tamilnadu, CoronaVaccine, ICMR, ClinicalTest, Approval, தமிழகம், கொரோனா, தடுப்பு மருந்து, ஐசிஎம்ஆர், பரிசோதனை, அனுமதி

சென்னை: தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தினை, விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதிக்க ஐசிஎம்ஆர் அனுமதியளித்துள்ளது.

கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கோவிஷீல்டு தடுப்பு மருந்து மற்றும் இந்தியாவின் பாரத் பயோடெக் கண்டுபிடித்த கோவேக்சின் உள்ளிட்ட மருந்துகள் பல்வேறு கட்ட சோதனைகளில் வெற்றி பெற்று, தற்போது மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனை நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் சென்னை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைகழக ஆராய்ச்சி மையமும் தடுப்பு மருந்து கண்டறியும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.


latest tamil news


தடுப்பு மருந்தின் முதற்கட்ட சோதனைகள் முடிக்கப்பட்டு அதன் ஆய்வு அறிக்கை இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்திற்கு அனுப்பப்பட்டது. இதனை ஆய்வு செய்த ஐ.சி.எம்.ஆர் முதற்கட்டமாக விலங்குகளிடம் அந்த மருந்தை பரிசோதனை செய்ய அனுமதியை வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து சிறு விலங்கினங்கள் ஆன முயல், எலி போன்ற விலங்குகளிடம் பரிசோதனை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றி பெறும் பட்சத்தில் அடுத்த கட்டமாக மனிதர்களிடம் இந்த மருந்து சோதனை செய்ய அனுமதி பெறப்படும்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SASIBUSHANAN S - ooty,இந்தியா
20-அக்-202020:44:54 IST Report Abuse
SASIBUSHANAN S இது நல்ல முன்னனேற்றம் இந்தியா சரியான மருந்தை சரியான நேரத்தில் வழங்க வேண்டும்
Rate this:
Cancel
20-அக்-202017:24:23 IST Report Abuse
ஆப்பு இந்தியா வர வர மனிதாபிமானம் இல்லாத அமெரிக்கா மாதிரி ஆயிட்டு வருது. இனிமே எலி, முயல் , பூனை, நாயெல்லாம் புடிச்சிட்டுப் போய் சோதனை நடத்துவாங்க. மோடி ஐயா பரம சாகபட்சினி என்பது வேற விஷயம்.
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
20-அக்-202014:12:59 IST Report Abuse
Dr. Suriya ஜல்லி கட்டுக்கு தடை வாங்கிய ப்ளூ கிராஸ் இதுக்கெல்லாம் போராடாதே ... பாவம் வாயில்லா ஜீவன்கள் ......விலங்குகளை சொன்னேங்க...........
Rate this:
P Karthikeyan - Chennai,இந்தியா
20-அக்-202016:00:33 IST Report Abuse
P Karthikeyanயானையை மின்சாரம் பாய்ச்சி கொன்னுருக்காங்க அதை கேள்வி கேக்க யாரும் முன் வரல. இதுக்கு நீட்டி முழக்கிட்டு வாங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X