உள்ஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல்: கவர்னரிடம் அமைச்சர்கள் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உள்ஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல்: கவர்னரிடம் அமைச்சர்கள் வலியுறுத்தல்

Updated : அக் 20, 2020 | Added : அக் 20, 2020 | கருத்துகள் (24)
Share
சென்னை: மருத்துவ படிப்புக்கான சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் அளிக்கும்படி, கவர்னர் பன்வாரிலாலை, தமிழக அமைச்சர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.எம்.பி.பி.எஸ்., மற்றும் பிற மருத்துவ படிப்புக்கான சேர்க்கையில், 7.5 சதவீத இடங்களை, அரசு பள்ளி மாணவர்களுக்கு, உள்ஒதுக்கீடாக வழங்க அரசு முடிவு செய்தது.
உள்ஒதுக்கீடு,ஒப்புதல், கவர்னர், அமைச்சர்கள், வலியுறுத்தல்

சென்னை: மருத்துவ படிப்புக்கான சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் அளிக்கும்படி, கவர்னர் பன்வாரிலாலை, தமிழக அமைச்சர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

எம்.பி.பி.எஸ்., மற்றும் பிற மருத்துவ படிப்புக்கான சேர்க்கையில், 7.5 சதவீத இடங்களை, அரசு பள்ளி மாணவர்களுக்கு, உள்ஒதுக்கீடாக வழங்க அரசு முடிவு செய்தது. இதற்காக, 'தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலான சேர்க்கை சட்டம்' சட்டசபையில், செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டம், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இன்னமும் கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'நீட்' தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், தமிழகத்தை சேர்ந்த, அரசு பள்ளி மாணவர்கள், 738 பேர் தேர்ச்சி பெற்றதாக, தகவல் வெளியாகி உள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு, உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு, கவர்னர் ஒப்புதல் அளித்தால், 300 மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர வழி பிறக்கும். அதனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்த பின்னரே, மருத்துவ பட்ட படிப்பிற்கான கவுன்சிலிங்கை துவக்க, அரசு முடிவு செய்துள்ளது.


latest tamil news




இதனிடையே, தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர், கவர்னர் பன்வாரிலாலை நேரில் சந்தித்து 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் தரும்படி வலியுறுத்தினர்.

கவர்னரை சந்தித்த பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க கவர்னர் உறுதியளித்துள்ளார். மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தால் தான் , மருத்துவ கவுன்சிலிங் நடத்த முடியும் என தெரிவித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X