பொது செய்தி

இந்தியா

பாலியல் வன்கொடுமையை கடவுள் வழிபாட்டுடன் இணைப்பதா? - பெண் வக்கீலின் கார்ட்டூன் டிரெண்டிங்

Updated : அக் 21, 2020 | Added : அக் 20, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement
புதுடில்லி : பிரபல பெண் வக்கீல் தீபிகா சிங் ராஜவத் பதிவிட்ட கார்ட்டூன் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அவரை கைது செய்ய வேண்டும் என டுவிட்டரில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருவதால் இந்த விஷயம் இந்திய அளவில் நம்பர் 1ஆக டிரெண்ட் ஆனது.கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆஜராகி பிரபலமானவர் பெண் வக்கீல் தீபிகா சிங் ராஜவத். இவர் தனது டுவிட்டரில் பக்கத்தில்
Arrest_Deepika_Rajawat,

புதுடில்லி : பிரபல பெண் வக்கீல் தீபிகா சிங் ராஜவத் பதிவிட்ட கார்ட்டூன் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அவரை கைது செய்ய வேண்டும் என டுவிட்டரில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருவதால் இந்த விஷயம் இந்திய அளவில் நம்பர் 1ஆக டிரெண்ட் ஆனது.

கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆஜராகி பிரபலமானவர் பெண் வக்கீல் தீபிகா சிங் ராஜவத். இவர் தனது டுவிட்டரில் பக்கத்தில் கார்ட்டூன் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஒரு சித்திரம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்வது போன்றும், மற்றொன்றில் பெண்ணை வழிபடுவது போன்றும் உள்ளது. முதல் சித்திரத்திற்கு மற்ற நாட்களில், 2வது சித்திரத்திற்கு நவராத்திரியில் என குறிப்பிட்டு 'என்ன ஒரு முரண்பாடு' என கூறியுள்ளார்.


latest tamil news
நாடு முழுக்க நவராத்திரி கொண்டாடப்பட்டு வரும் வேளையில் இவரின் இந்த கேலி சித்திரம் சர்ச்சையாகி உள்ளது. சிலர் அவரின் இந்த கார்ட்டூனுக்கு ஆதரவு தெரிவித்தாலும் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமையையும், நவராத்திரி வழிபாட்டையும் ஏன் ஒப்பிட வேண்டும். இது இந்துக்கள் மனதை புண்படுத்துவது போன்று உள்ளது என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்து மதத்தை மட்டும் ஏன் இழுக்கிறீர்கள் என சிலர் கருத்து பதிவிட்டனர். இன்னும் சிலர் அவர் ஒரு பப்ளிசிட்டி பைத்தியம், அவரை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள் என தெரிவித்தனர். அதேசமயம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் அவரை கைது செய்ய வேண்டும் என கூறி Arrest_Deepika_Rajawat என்ற ஹேஷ்டாக்கை உருவாக்கி டுவிட்டரில் டிரெண்ட் செய்தனர். இது இந்திய அளவில் நம்பர் 1 ஆக டிரண்ட் ஆனது.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kattus - chennai,இந்தியா
21-அக்-202013:34:01 IST Report Abuse
kattus காமல்நாத் எப்படி கூப்பிடுவான் இந்த லேடி ய? 😂
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
21-அக்-202013:12:14 IST Report Abuse
r.sundaram பாலியல் வன்முறைக்கும் மதங்களுக்கும் சம்பந்தமில்லை என்பதை தெரிந்து கொள்ளாத இவர் வக்கீலுக்கு படித்தும் என்ன பிரயோஜனம்? பொதுஅறிவு என்பது இல்லையே.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
21-அக்-202011:12:39 IST Report Abuse
skv srinivasankrishnaveni எல்லா வெறிநாய்களிலும் எல்லா மதத்துபொறுக்கிகளும் இருக்கானுகளே இந்துக்களைக் கேவலமா சித்தரிக்கும் இந்த லேடி இதறமதத்துக்காராலை இப்படிக்கேவலமா கார்டுன்போடுவாளா?? நம்மளை நாமளே என்னாத்துக்கு இழிவு செய்யவேண்டும் கேவலமாக்கவேண்டும் ஏவாளுக்கு எந்தபொண்ணுகளுக்கும் (மீன்ஸ் குழந்தைகள் லெந்து சாவப்போவும்கிலவிவரை )சாதி மத பேதமேயில்லாமல் கேடு செயறவனெல்லாரும் பொறுக்கிகளேதான் (டீனேஜ் டு பல்லுப்போன கிழவன் வரை) இதென்ன நேற்று இரா நடக்குது ஆதம் ஏவாள் லெந்து நடக்குதுஎன்று படிக்கிறோம் அன்று அவனுள் படிக்கவே இல்லீங்க ஆங்கிலேய ஆட்சிலேயும் அந்த பன்றிகள் செய்துருக்கானுக, . இது உ மையேதான்அன்று இளம்வயசுலே பருவம் எய்துவதற்கு முன்னாடியே திருமணம் ஆவும் மனைவி செத்தால் அவன் மீண்டுமீண்டு ம் மாப்பிள்ளை ஆவான் கணவன் செத்தால் 8வயசே ஆனாலும் அந்த குழந்தை விதவை என்று சொன்னது நம்ம சமூகமேதான் அவள் பிறந்த வீட்டுலேயே சாவும்வரை மறைஞ்சுதான் வாழ்ந்து சாவணும் என்று நீதியும் எவண்டா வகுத்தான், படிப்பும் தராமல் அவாளைவாழவே விடாமல் கொடூரமா கொடுமை செய்ததே இந்த ஆண்வர்க்கமே தான் கேட்டால் சாஸ்திரம் சம்பிரதாயமான விஷயம் என்று சப்பைக்கட்டு காட்டுவான் இப்போதும் நான் தினம் ரெண்டு பாட்டிகளை காண்கிறேன் எனக்குஅண்டை வீட்டுலேயிருக்காங்க முதுமையால் அந்த இளம்வயசுலே கிழவியானவளை இந்த ஹோமேலே விட்டுருக்கா வயசு 96 என்று எண்ணுகிறேன் 10 வயசுலே கலியாணம் 12 வயசுலே அவள் கணவன் மலைஜூரம் வந்து செத்துட்டானாம் 12வயசுக்குப்பிறகு இன்னிவரை அவள் கண்டது நாரடி சேலையும் கதைபுக்க்சும்தான் காலைலே ஜபம் செய்வார் மாலைநேரங்கள்லே ஸ்லோகம் சாண்ட் செய்வார் அவருக்கு துணை யாக இருப்பவருக்கு வயது என்பது ரொம்பவே ஒலியென்று திருமணம் ஆகவே இல்லே அந்தக்கிழவிக்கு இந்தக்கிழவி உதவி ரெண்டுபேரும் நடந்துண்டுருக்காங்க வீட்டுக்குள்ளியே பெரிய பாட்டிக்கு இந்த சின்னபாட்டியேதான் சகலமும் செய்றார் துரத்தது உறவுலே பெரியப்பாட்டிக்கு கசின் இல்லாமையால் இன்வாலிடம் வந்து ஹெல்பேர் ஆகா இருக்காரு .இந்தவயசுலேயும் ரெண்டுபேரும் அவ்ளோபக்தியுடன் இருக்காங்க கொரோனாவால் வாசலுக்கே கூடவரமுடியலேபாவம் கண்ணாபின்னான்னு அலையறாவா எல்லோரும் யாருன்னுபாருங்க டீனேஜ் லே அந்தப்பாட்டிகளுக்கும் ஆசைகளிருந்துருக்குமே என்று ஏவாளும் சிந்திக்கறதே இல்லீயே , இப்போது கல்வி கிடைக்குது ஏழையில்லாதவான்னு பேதமே இல்லாமல் மெழுக்கும்வரங்க சிலர் விரும்பித்திருமணமும் செய்றா நன்னாவும் இருக்காளே எந்த ஆணும் மனைவி செத்தால் வெளியே தெரியுமா அவன் ஒருவிதவன் (விதவைக்கு ஆண்பால்) இப்போது நல்லா முன்னேற்றம் பெண்கள் ஆன்றுபோல வேஷம் போடவேண்டிய அவசியம் இல்லே முதல்ல படிச்சுருக்கா வேலைக்கும் போறாங்க போட்டுவிடுறாங்க தப்பெ இல்லீங்க மஞ்சள் நூல் இல்லே தாளிசரைடும் தங்கமலே இல்லே ஏதாவது செயின் கைலே ஒரு வளையல் என்று இருக்காங்க அவளையும் நாய்மாதிரி துரத்த ஒருகூட்டம் அலையுதே அதாங்க கொடும இவனெல்லாம் கற்பழிக்குறெதும் அதை செலஃபீ எடுத்துபயம் காட்டுறதுமாயிருக்கானோ அவனுக்களை எல்லாம் கொடூரமா தண்டிக்கவேண்டும் யு பைல் என்று நியாபகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X