பொது செய்தி

இந்தியா

தைவானுடன் வர்த்தக பேச்சு: மத்திய அரசு ஆலோசனை

Updated : அக் 20, 2020 | Added : அக் 20, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: தைவானுடன் வர்த்தக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இரு நாடுகளுடனும், சீனா மோதல் போக்கை கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.பல ஆண்டுகளாக வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இந்தியாவை, தைவான் அழைப்பு விடுத்து வருகிறது. ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தாகி அது உலக வர்த்தக அமைப்பில் பதிவானால், சீனாவின்
இந்தியா, தைவான், வர்த்தகபேச்சு, சீனா, மத்தியஅரசு

புதுடில்லி: தைவானுடன் வர்த்தக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இரு நாடுகளுடனும், சீனா மோதல் போக்கை கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாக வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இந்தியாவை, தைவான் அழைப்பு விடுத்து வருகிறது. ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தாகி அது உலக வர்த்தக அமைப்பில் பதிவானால், சீனாவின் அதிருப்திக்கு ஆளாகும் எனக்கருதி, அதனை மத்திய அரசு ஏற்காமல் இருந்து வந்தது.
இந்நிலையில், தற்போது, தைவானுடன் வர்த்தகரீதியில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது, இந்தியாவில் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு துறையில் அதிகளவு முதலீடு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பேச்சுவார்த்தை குறித்து இறுதி முடிவு எதுவும் இன்னும் எடுக்கப்படவில்லை.


latest tamil news



முன்னதாக, தைவானை சேர்ந்த பாக்ஸ்கான் டெக்னாலஜி நிறுவனம், விஸ்ட்ரான் கார்ப் மற்றும் பெகட்ரான் கார்ப் உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்த 5 ஆண்டுகளில், 10.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு ஏதுவாக இந்தியாவில் முதலீடு செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. பேச்சுவார்த்தை தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்க இந்தியா மற்றும் தைவான் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
சீனாவின் அழுத்தம் காரணமாக, பெரிய பொருளாதார நாடுகள் தைவானுடன் வர்த்தக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்த தயங்கும் நிலையில், இந்தியா பேச்சுவார்த்தை நடத்தினால், அது தைவானுக்கு கிடைத்த பெரிய வெற்றியாக கருதப்படும். மற்ற உலக நாடுகளை போல், தைவானை, இந்தியா இன்னும் அங்கீகரிக்கவில்லை. இரண்டு நாடுகளும் அதிகாரப்பூர்வமற்ற வகையில் பிரதிநிதிகள் அலுவலகத்தை வைத்துள்ளன.
கடந்த 2018 ம் ஆண்டு, இந்தியாவும் தைவானும் முதலீடு குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதனையடுத்து இரண்டு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், 2019ம் ஆண்டில் 18 சதவீதம் உயர்ந்து 7.2 பில்லியன் டாலராக இருந்தது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian Ravichandran - Chennai,இந்தியா
20-அக்-202019:28:41 IST Report Abuse
Indian  Ravichandran தைவானுடன் வர்த்தக ஒப்பந்தம் சீனாவை கடுப்பேத்தும், ஒரு முடிவு வரட்டும்.
Rate this:
Cancel
20-அக்-202017:39:02 IST Report Abuse
இராமன் பல ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கி இருக்க வேண்டியது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X