ராகுல் அதிருப்தி அடைந்தாலும் மன்னிப்பு கேட்க மாட்டேன்: கமல்நாத்

Updated : அக் 20, 2020 | Added : அக் 20, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
போபால்: எனது கருத்தில் ராகுல் அதிருப்தி அடைந்திருந்தாலும், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.மத்திய பிரதேசத்தில் காங்., கட்சியிலிருந்து 21 எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்து பாஜ.,வில் சேர்ந்தனர். இதனையடுத்து கமல்நாத் தலைமையிலான காங்., ஆட்சி கவிழ்ந்து, சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜ., ஆட்சியை பிடித்தது.
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி, கமல்நாத்,Kamalnath,

போபால்: எனது கருத்தில் ராகுல் அதிருப்தி அடைந்திருந்தாலும், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் காங்., கட்சியிலிருந்து 21 எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்து பாஜ.,வில் சேர்ந்தனர். இதனையடுத்து கமல்நாத் தலைமையிலான காங்., ஆட்சி கவிழ்ந்து, சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜ., ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், ராஜினாமா செய்யப்பட்ட தொகுதிகளில் நவ.,3ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், மீண்டும் வென்று ஆட்சியை கைப்பற்ற காங்., கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. காங்.,கில் இருந்து பாஜ.,விற்கு சென்ற முன்னாள் பெண் அமைச்சர் இமர்தி தேவிக்கு, அந்த தொகுதி இடைத்தேர்தலில் பாஜ., வாய்ப்பளித்துள்ளது. அவரை எதிர்த்து போட்டியிடும் காங்., வேட்பாளருக்கு ஆதரவாக டாப்ரா பகுதியில் கமல்நாத் நேற்று (அக்.,18) பிரசாரம் செய்தார்.

அப்போது கமல்நாத் பேசுகையில், ‛எங்கள் வேட்பாளர் மிகவும் எளிமையானவர். எதிரணியில் இருப்பவரைப் பற்றி என்னை விட உங்களுக்கு நன்றாகத் தெரியும். அந்த "ஐட்டத்தை " நான் பெயர் சொல்ல வேண்டுமா?' என்று கேட்கவும், கூட்டத்தினர், இமர்தி தேவி என்று கத்தினர். கமல்நாத்தின் இந்த பேச்சுக்கு பலத்த கண்டனம் எழுந்தது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பல தரப்பில் இருந்து குரல் வலுத்தது.


latest tamil newsஇந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ராகுல், வயநாட்டில் நிருபர்களிடம் கூறியதாவது: கமல்நாத், எங்களது கட்சியை சேர்ந்தவராக இருக்கலாம். ஆனால், தனிப்பட்ட முறையில் அவர் பயன்படுத்தியது போன்ற வார்த்தைகள் எனக்கு பிடிக்காது. அப்படி யார் பேசினாலும் அதனை நான் ஆதரிக்க மாட்டேன். இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்றார்.


latest tamil news


இது தொடர்பாக கமல்நாத் கூறுகையில், இது ராகுலின் கருத்து. எந்த நோக்கத்தில், அந்த வார்த்தையை பயன்படுத்தினேன் என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேன். யாரையும் அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லாத போது நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? அவமானப்பட்டதாக யாராவது உணர்ந்தால், அதற்கு நான் ஏற்கனவே வருத்தம் தெரிவித்துவிட்டேன் எனக்கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bismi - Cincinnati,யூ.எஸ்.ஏ
20-அக்-202023:30:54 IST Report Abuse
Bismi பெண்ணை தலைவியை கொண்ட ஒரு கட்சியின் உண்மை முகமோ இது? இந்த கட்சியில் உள்ள மற்ற பெண்கள் இதை கடுமையாக கண்டிக்காமல் விட்டால், அவர்களுக்கு இந்த கருத்து உடன்பாடு என்றே பொருள்.
Rate this:
Cancel
20-அக்-202022:48:15 IST Report Abuse
ஆரூர் ரங் இவரை மீண்டும் முதல்வராக்க இத்தாலி 💃ஐட்டம் பிரசாரம் ?
Rate this:
Cancel
20-அக்-202022:30:29 IST Report Abuse
Ganesan Madurai அதென்னடா ஒரு திருட்டு திராவிட கம்னாட்டி கபோதி காண்டு குல்லா பாவாடை பயலுகளும் சொந்த பெயர்லேயே கருத்து போட மாட்டேங்குறான்? ஒரு வேளை அப்பன் பெயர் தெரியாதா இல்ல எத்தனை அப்பன்கள்னு தெரியாதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X