ஐ.எஸ்.ஐ.எஸ்., பாணியில் காஷ்மீரை தாக்க திட்டம் - பயங்கரவாதிகளுக்கு பாக்., பயிற்சி

Updated : அக் 20, 2020 | Added : அக் 20, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: காஷ்மீரில் உள்ள இந்திய பாதுகாப்பு நிலைகள் மீது டுரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த பயங்கரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு பயிற்சி அளித்து வருகிறது.காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காஷ்மீர் மீதான மத்திய அரசின் அதிகாரம் கூடியுள்ளது. மத்திய அரசின் இம்முடிவுக்கு காஷ்மீரில்
ISIS, Pakistan, J&K, IS_Tactics, DroneBombs

புதுடில்லி: காஷ்மீரில் உள்ள இந்திய பாதுகாப்பு நிலைகள் மீது டுரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த பயங்கரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு பயிற்சி அளித்து வருகிறது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காஷ்மீர் மீதான மத்திய அரசின் அதிகாரம் கூடியுள்ளது. மத்திய அரசின் இம்முடிவுக்கு காஷ்மீரில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த குழப்பத்தை பயன்படுத்தி இந்திய பாதுகாப்பு நிலைகள் மீது டிரோன்கள் மூலம் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்த பாக்., திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்டம் ஏப்ரலில் பாக்.,ன் பஞ்சாப் மாகாணத்தில் போடப்பட்டுள்ளது. அப்போது லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தளபதிகளை ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பினர் சந்தித்துள்ளனர். அதற்கு அடுத்த மாதம் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கோட்லி மாவட்டத்திலும் சந்திப்பு நடந்துள்ளது.


latest tamil news


இந்த திட்டத்தை ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பிடமிருந்து காப்பி அடித்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவில் பாதுகாப்பு படையினரை தாக்க வணிக ரீதியாக கிடைக்கும் டுரோன்களை அவர்கள் பயன்படுத்தினர். அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் கண்டனர். அதனை தொடர்ந்து பல கோடிகள் செலவு செய்து அமெரிக்காவும், உற்பத்தியாளர்களும் டுரோன் தொழில்நுட்பத்தில் மாற்றத்தை ஏற்படுத்தினர். தற்போது அதே பாணி தாக்குதலை காஷ்மீரில் செயல்படுத்த பாக்., உளவு அமைப்பு பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது.

3 கிலோ மீட்டர் தூரம் வரை இயங்கக் கூடிய டுரோன்களில் 5 கிலோ வெடிகுண்டுகளை பொருத்தி தாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலை நேரடியாக பதிவு செய்து அதனை பிரசாரத்திற்கு பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். இத்தகவல் கிடைத்ததும், எல்லை தாண்டி வரும் டுரோன்களை கண்டதும் அழிக்க பாதுகாப்பு படை மற்றும் ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

“பாக்., எல்லை தாண்டிய தாக்குதலை தொடங்கினால் அதே பாணியில் அல்லது வேறு வகையில் கடுமையான பதிலடி தரப்படும்” என ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21-அக்-202003:40:17 IST Report Abuse
J.V. Iyer இந்திய வீரர்கள் பாக்கிஸ்தான் எல்லையில் அவர்களுக்கு அப்போதும் குடைச்சல் கொடுத்தால் தான் அடங்குவார்கள். இவர்கள் நம் நண்பர்கள் அல்ல.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
20-அக்-202022:45:11 IST Report Abuse
Ramesh Sargam பாகிஸ்தான் இந்தியாவிடம் அடிவாங்கி ரொம்ப நாளாகிவிட்டது. வாங்கிய அடியை மறந்துவிட்டார்கள். ஆகையால் இந்தியா மீண்டும் ஒரு சரியான அடியை பாகிஸ்தானுக்கு கொடுக்கவேண்டும். Pakistan need another "Surgical Strike" stronger and heavier than the earlier one.
Rate this:
Cancel
20-அக்-202022:24:58 IST Report Abuse
Ganesan Madurai கம்யூனிஸ்ட் முஸ்லிம் காண்டு கான்கிரஸ் இப்ப வாயத்தொரக்க மாட்டனுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X