பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : அக் 20, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
அக்., 21, 1984திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி எனும் ஊரில், 1904 ஆக., 18ம் தேதி பிறந்தவர், டி.எஸ்.சவுந்தரம். இவரது தந்தை, டி.வி.எஸ்., மோட்டார் நிறுவன அதிபர், டி.வி.சுந்தரம் அய்யங்கார். 12ம் வயதில், சவுந்தரத்திற்கு திருமணம் ஆகியது. அவரது கணவர் இறந்ததால், இளம் வயதிலேயே விதவை ஆனார். இதையடுத்து, அவர் டில்லி சென்று மருத்துவம் பயின்று, டாக்டர் பட்டம் பெற்றார். மதுரையில், மருத்துவமனை
 இதே நாளில் அன்று

அக்., 21, 1984

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி எனும் ஊரில், 1904 ஆக., 18ம் தேதி பிறந்தவர், டி.எஸ்.சவுந்தரம். இவரது தந்தை, டி.வி.எஸ்., மோட்டார் நிறுவன அதிபர், டி.வி.சுந்தரம் அய்யங்கார். 12ம் வயதில், சவுந்தரத்திற்கு திருமணம் ஆகியது. அவரது கணவர் இறந்ததால், இளம் வயதிலேயே விதவை ஆனார். இதையடுத்து, அவர் டில்லி சென்று மருத்துவம் பயின்று, டாக்டர் பட்டம் பெற்றார். மதுரையில், மருத்துவமனை துவக்கி, ஏழைகளுக்கு இலவச மருத்துவம் பார்த்தார்.ஹரிஜன சேவை சங்கத்தைச் சேர்ந்த ஜி.ராமச்சந்திரனை காதலித்து, மஹாத்மா காந்தியின் ஆசியுடன், அவரை மறுமணம் செய்தார். திண்டுக்கல் சின்னாளப்பட்டியில், இவர் துவக்கிய காந்தி கிராம அறக்கட்டளை தான், காந்தி கிராம பல்கலையாக மாறியது. சட்டசபையில் நுழைந்த, முதல் பெண் எம்.எல்.ஏ., இவர் தான்!மத்திய கல்வித் துறை துணை அமைச்சராகவும் பணியாற்றினார். 'பத்மபூஷன்' உட்பட ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். 1984 அக்., 21ம் தேதி, தன், 80வது வயதில் காலமானார்.சமூக சீர்திருத்தவாதி, டி.எஸ்.சவுந்தரம் காலமான தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijaya Raghav - chennai,இந்தியா
21-அக்-202011:44:17 IST Report Abuse
Vijaya Raghav அம்மையாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
21-அக்-202006:43:41 IST Report Abuse
Loganathan Kuttuva புரட்சியாளர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X