பொது செய்தி

தமிழ்நாடு

கிலோ ரூ.100க்கு விற்ற வெங்காயம் இன்று முதல் ரூ.45!

Updated : அக் 21, 2020 | Added : அக் 20, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
சென்னை: பண்டிகைக் காலத்தில், தேவை அதிகரித்துள்ளதால், வெங்காயம் விலை கிலோ, 100 ரூபாயைத் தாண்டியது. விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், கூட்டுறவு சங்கங்கள் நடத்தும், பண்ணை பசுமைக் கடைகளில், இன்று முதல், வெங்காயம் கிலோ, 45 ரூபாய்க்கு விற்கப்பட்டது.தமிழகத்தில், பெரிய வெங்காயம் விளைச்சல் குறைவாக இருப்பதால், அதன் தேவை, பிற மாநிலங்கள் வாயிலாக பூர்த்தி செய்யப்படுகிறது.
வெங்காயம், அரசு பண்ணைக்கடை

சென்னை: பண்டிகைக் காலத்தில், தேவை அதிகரித்துள்ளதால், வெங்காயம் விலை கிலோ, 100 ரூபாயைத் தாண்டியது. விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், கூட்டுறவு சங்கங்கள் நடத்தும், பண்ணை பசுமைக் கடைகளில், இன்று முதல், வெங்காயம் கிலோ, 45 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

தமிழகத்தில், பெரிய வெங்காயம் விளைச்சல் குறைவாக இருப்பதால், அதன் தேவை, பிற மாநிலங்கள் வாயிலாக பூர்த்தி செய்யப்படுகிறது.



பொதுமக்கள் அதிர்ச்சி



மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து, தமிழக மார்க்கெட்டுகளுக்கு, தினமும் லாரிகளில் வெங்காயம் வருகிறது. அம்மாநிலங்களில், தற்போது, மழையால் வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது.இதனால், அதிக விலைக்கு விற்க ஆசைப்பட்டு, மொத்த வியாபாரிகள், கமிஷன் ஏஜன்டுகள், வெங்காயத்தைப் பதுக்கி வருவதால், அதற்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, தினமும், 100 லாரிகளில் வெங்காயம் வரத்து இருக்கும்.

தற்போது, 40 லாரிகளில் மட்டுமே வருகிறது. இதேபோல், மற்ற மார்க்கெட்டிற்கும் வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதன் விளைவாக, வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. மொத்த விற்பனை மார்க்கெட்டில், நேற்று தரம் வாரியாக, கிலோ, 100 ரூபாய், 85 ரூபாய், 60 ரூபாய் என்ற விலைகளில் விற்கப்பட்டது. அந்த விலைகளுக்கு வாங்கிய, சில்லரை வியாபாரிகள், கிலோ, 120 ரூபாய் வரை விற்றனர். ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் என, தொடர்ந்து பண்டிகைகள் வரும் சமயத்தில், வெங்காயம் விலை உயர்ந்து வருவதால், பொது
மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கூட்டுறவு சங்கங்கள் சார்பில், சென்னை உட்பட, பல இடங்களில், பண்ணை பசுமை என்ற பெயரில், 79 காய்கறிக் கடைகள் நடத்தப்படுகின்றன. விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், பண்ணை பசுமைக் கடைகளில், குறைந்த விலைக்கு வெங்காயம் விற்பது தொடர்பாக, சென்னை, தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு, துறையின் உயர்அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.


முதல்வர் உத்தரவு


இதையடுத்து, பண்ணை பசுமைக் கடைகளில், இன்று முதல், வெங்காயம் கிலோ, 45 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. அமைச்சர் ராஜு கூறியதாவது:மழைக் காலங்களில், வெங்காயம் விலை உயர்வது வழக்கமானது. வெங்காயம் விளைச்சல் அதிகம் உள்ள மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் அதிக மழையால், வெங்காயம் வரத்து குறைந்து, விலை உயர்ந்து காணப்படுகிறது.வெங்காயம் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, குறைந்த விலையில் விற்க, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.

அதனால், சென்னை உட்பட, அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் உள்ள, பண்ணை பசுமைக் கடைகளில், வெங்காயம் கிலோ, 45 ரூபாய் என்ற விலையில், இன்று முதல் விற்கப்படும்; இதர பகுதிகளில் உள்ள கடைகளில், நாளை முதல் விற்கப்படும்.தேவை மற்றும் வரத்து அடிப்படையில், வெங்காயம் விலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி, தரமான வெங்காயம், கூட்டுறவுத் துறை சார்பில் வழங்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-அக்-202022:24:53 IST Report Abuse
அராrajan வட இந்தியாவில் வெங்காயத்தை பதுக்குவது யாரு... எல்லாம் சரத்பவார் தான். அவர் ஒரு குறுநில மன்னர்.. வெங்காயம் தமிழ்நாட்டில் ஏன் அதிகம் பயிர் செய்வது இல்லை.... மகாராஷ்டிரா கர்நாடகம் மாநிலங்களை ஏன் எதிர்பார்த்து இருக்க வேண்டும்... தமிழக பூமியில் வெங்காயம் விளையாதா.
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
21-அக்-202020:15:39 IST Report Abuse
கொக்கி குமாரு உலகத்தில் இருக்கும் எல்லா பொருட்களும் விலை ஏறலாம். ஆனால், விவசாயி கஷடப்பட்டு விளைவிக்கும் உணவு பொருட்கள் விலை மட்டும் ஏறக்கூடாது. நல்லா இருக்கு உங்க நியாயம். விவசாயிக்கும் குடும்பம் இருக்குனு ஒரு பயலாவது யோசிக்கிறானுங்களா?
Rate this:
Cancel
bigu -  ( Posted via: Dinamalar Android App )
21-அக்-202017:57:42 IST Report Abuse
bigu எந்த இடத்தில் மதுரையில் இருக்கு Rs.45கு விற்கும் அரசு கடை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X