பொது செய்தி

இந்தியா

வேட்பாளர் செலவு உச்சவரம்பு உயர்வு: பீஹார் தேர்தலில் அமல்

Updated : அக் 21, 2020 | Added : அக் 20, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் உள்ளதால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்கான உச்ச வரம்பு, 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பீஹாரில் சட்டசபை தேர்தலில், இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. கட்டுப்பாடு மாநிலத்தின், 243 சட்டசபை தொகுதிகளுக்கு,
வேட்பாளர், செலவு, உச்சவரம்பு, உயர்வு, பீஹார், தேர்தல், அமல்

புதுடில்லி: கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் உள்ளதால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்கான உச்ச வரம்பு, 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பீஹாரில் சட்டசபை தேர்தலில், இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது.


கட்டுப்பாடுமாநிலத்தின், 243 சட்டசபை தொகுதிகளுக்கு, மூன்று கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், 28, நவ., 3 மற்றும் 7ம் தேதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. நவ., 10ல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு அமலுக்குப் பின் நடக்கும் தேர்தல் என்பதால், பிரசாரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, 'வேட்பாளர்களின் பிரசார செலவுக்கான உச்சவரம்பை, 10 சதவீதம் உயர்த்தலாம்' என, தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்திருந்தது.அதை ஏற்று, மத்திய சட்ட அமைச்சகம், புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்கான உச்சவரம்பு, 10 சதவீதம் உயர்த்தப்பட்டுஉள்ளது. இந்த உச்சவரம்பு, மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். பீஹார் சட்டசபை தேர்தலில் இது அமலுக்கு வருகிறது.


இடைத்தேர்தல்மேலும், பீஹாரில், ஒரு லோக்சபா தொகுதி மற்றும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள, 59 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அதற்கும் இந்த புதிய உத்தரவு பொருந்தும்.இதற்கு முன், 2014ல், லோக்சபா தேர்தலுக்கு முன், வேட்பாளர் செலவுக்கான உச்சவரம்பு உயர்த்தப்பட்டது.புதிய உத்தரவின்படி, பீஹாரில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு உச்சவரம்பு, 28 லட்சம் ரூபாயில் இருந்து, 30.8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. லோக்சபா தொகுதிக்கான செலவு உச்சவரம்பு, 70 லட்சம் ரூபாயில் இருந்து, 77 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.


வேட்பாளர்கள் மீது வழக்குகள்பீஹார் சட்டசபையின், 71 தொகுதிகளுக்கு, வரும், 28ம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த தகவல்களை, ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:முதல் கட்டத் தேர்தலில், 1,064 பேர் போட்டியிடுகின்றனர். அதில், 328 பேர், தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மொத்த வேட்பாளர்களில், 375 பேர் கோடீஸ்வரர்கள். ஐந்து பேர், 1 ரூபாய் கூட சொத்து இல்லை என, வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.கட்சி வேட்பாளர்களில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த, 41 பேரில், 30 பேர் மீது வழக்குகள் உள்ளன. பா.ஜ.,வைச் சேர்ந்த, 29 பேரில், 21 பேர் மீது வழக்குகள் உள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


விளம்பரத்துக்கு தடைமுன் அனுமதி பெறாத விளம்பரங்களை, தேர்தல் நாளன்று மற்றும் அதற்கு முந்தைய நாளும் வெளியிடுவதற்கு, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.'தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டுள்ள பரிசீலனை குழுவின் அனுமதி பெற்ற, சான்று பெற்ற விளம்பரங்களை மட்டுமே, அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் மற்றவர்கள் வெளியிட வேண்டும்' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-அக்-202020:26:53 IST Report Abuse
தமிழவேல் தேர்தலில், 1,064 பேர் போட்டியிடுகின்றனர். அதில், 328 பேர், தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மொத்த வேட்பாளர்களில், 375 பேர் கோடீஸ்வரர்கள். ஐந்து பேர், 1 ரூபாய் கூட சொத்து இல்லை 😂😂😂
Rate this:
Cancel
90s kid - karaikkal,ஐக்கிய அரபு நாடுகள்
21-அக்-202005:30:47 IST Report Abuse
90s kid இவ்ளோ லட்சங்கள் எதுக்காக செலவு பண்ணனும் ,அப்போ காசு உள்ளவன் செலவு பண்ணிக்கலாம் ,பிரச்சாரத்துக்கு தடைவிதிச்சிட்டு அந்த அந்த தொகுதிகளில் நல்லது பண்றவங்கலா தொகுதி மக்களுக்கு நல்லது பண்றவங்கலா நிக்கட்டும் அப்படி நிக்குறவங்களுக்கு எலெக்சன் கமிஷன் அவங்களுக்காக விளம்பரம் பண்ணட்டும், 30லட்சம் (கணக்கு கட்டுறது )செலவு பண்ணிதான் MLA ஆகலாம்ன்னா ஜனநாயகம் யாருக்கானது ?சாமானியமாணவனுக்கு வாய்ப்பே இல்ல ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X