பொது செய்தி

தமிழ்நாடு

சொத்து மதிப்பில் ஒரு சதவீதம் லஞ்சம் : சார் பதிவாளர் அலுவலகங்களில் வசூல்

Updated : அக் 21, 2020 | Added : அக் 20, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement
பத்திரப்பதிவின் போது,சம்பந்தப்பட்ட சொத்தின் மதிப்பில், ஒரு சதவீத தொகை, சார் - பதிவாளர் பெயரில், லஞ்சமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்ய, 575 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில், பத்திரங்களை பதிவு செய்ய, அதன் மதிப்பில், ௭ சதவீதம் முத்திரை தீர்வையாகவும், ௪ சதவீதம் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.அரசு
சொத்து மதிப்பு, லஞ்சம், அலுவலகங்கள், வசூல்

பத்திரப்பதிவின் போது,சம்பந்தப்பட்ட சொத்தின் மதிப்பில், ஒரு சதவீத தொகை, சார் - பதிவாளர் பெயரில், லஞ்சமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில், சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்ய, 575 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில், பத்திரங்களை பதிவு செய்ய, அதன் மதிப்பில், ௭ சதவீதம் முத்திரை தீர்வையாகவும், ௪ சதவீதம் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.அரசு நிர்ணயித்த, இந்த கட்டணங்களை தவிர்த்து, வேறு வகையில் மக்களிடம் பணம் வசூலிக்க கூடாது. இருப்பினும், பத்திரப்பதிவுக்கு செல்வோரிடம், மறைமுகமாக வசூல் வேட்டை நடத்தப் படுவதாக கூறப்படுகிறது.

சார் - பதிவாளர் அலுவலகங்களில், ரொக்க பண புழக்கம் இருக்கக் கூடாது என்பதற்காக, 'ஆன்லைன்' பத்திரப்பதிவில் உரிய நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், பதிவுக்கு நேரம் ஒதுக்கும் முன், ரகசிய முறையில் லஞ்ச வசூல் நடப்பதாக கூறப்படுகிறது.இது குறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது:பத்திரப் பதிவுக்கான வரைவு ஆவணம் தயாரிக்கும் நிலையிலேயே, முத்திரை தீர்வை, பதிவு கட்டணத்துடன் கூடுதலாக, ஒரு சதவீத தொகை வசூலிக்கப்படுகிறது. சார் - பதிவாளர்கள் பெயரில், ஆவண தயாரிப்பு மையங்களில், இந்த வசூல் நடக்கிறது.

இதனால், பத்திரப்பதிவுக்கு செல்ல, மக்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து புகார் அளித்தால், மேலதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. எந்த சார் பதிவாளர் மீது புகார் வருகிறதோ, அவர் இல்லாத நேரத்தில், திடீர் சோதனை நடத்தப்படுகிறது. இதனால், வசூல் அதிகாரிகள் எளிதாக தப்பித்து விடுகின்றனர்.நீதிமன்றங்கள் கண்டனம் தெரிவித்தாலும், சார் - பதிவாளர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்வதாக இல்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர். - நமது நிருபர் --

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R chandar - chennai,இந்தியா
21-அக்-202022:12:51 IST Report Abuse
R chandar This is true fact to avoid this on filling up application form itself there should be detail capturing portion in form on filling up this form itself there should be a print out sale deed gets printed after paying the related fees for guide line value through online itself , there should not be document writer required for uting sale deed when purchaser filled up all format in the requirement after paying the online fee through the website of the registration department on submitting when sale deed uted and signed automatically by registrar all names in corporation record,revenue record,EB record,Water board record should get d automatically
Rate this:
Cancel
raguram - madurai,இந்தியா
21-அக்-202019:46:07 IST Report Abuse
raguram நம்முடைய உழைப்பில் வந்த வெள்ளை பணம் கருப்பு பணமாக முடங்குகிறது. மக்கள் அத்த நிலத்தை விற்க்கும்போது அவர்களும் கருப்பு பணமாக வாங்கும் நிலைக்கு தள்ளபடுகிறார்கள் என எல்லோருக்கும் தெரிந்தாலும்,தெரிந்தே மௌனம் காக்கிறோம்.
Rate this:
Cancel
R.TAMILKUMARAN - tiruvannamalai,இந்தியா
21-அக்-202018:40:34 IST Report Abuse
R.TAMILKUMARAN உண்மை தான் , சொத்து வாங்கவே இங்க கடன் அங்க கடன் வாங்கியே ரெஜிஸ்டர் பன்னா, ரெஜிஸ்டார் புரோக்கர் பசங்க ரேட் பேசுறாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X