துர்கை வடிவத்தில் கமலா ஹாரிஸ்: ஹிந்து அமைப்பினர் கண்டனம்

Updated : அக் 21, 2020 | Added : அக் 21, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
வாஷிங்டன்,:அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசை, துர்கை வடிவத்தில் சமூக வலைதளத்தில், அவரது மருமகள் வெளியிட்டார். இதற்கு, அங்குள்ள ஹிந்து அமைப்பினர், கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.அமெரிக்க அதிபர் தேர்தல், நவ., 3ல் நடைபெற உள்ளது. துணை அதிபர் பதவிக்கு, ஜனநாயக கட்சி சார்பில் இந்தியாவை பூர்வீகமாக உடைய கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.இவரது மருமகள் மீனா
துர்கை வடிவத்தில் கமலா ஹாரிஸ் ஹிந்து அமைப்பினர் கண்டனம்

வாஷிங்டன்,:அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசை, துர்கை வடிவத்தில் சமூக வலைதளத்தில், அவரது மருமகள் வெளியிட்டார். இதற்கு, அங்குள்ள ஹிந்து அமைப்பினர், கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல், நவ., 3ல் நடைபெற உள்ளது. துணை அதிபர் பதவிக்கு, ஜனநாயக கட்சி சார்பில் இந்தியாவை பூர்வீகமாக உடைய கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
இவரது மருமகள் மீனா ஹாரிஸ், 35. வழக்கறிஞரான இவர், குழந்தைகளுக்கான
புத்தகங்களையும் எழுதி வருகிறார். மீனா தரப்பில், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், தற்போதைய அதிபரும், குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்டு டிரம்ப், மஹிஷாசுரனாகவும், அவரை வதம் செய்யும் துர்கையாக, கமலா ஹாரிசும் சித்தரிக்கப்பட்டு இருந்தனர்.

துர்கை வடிவில் கமலா அமர்ந்திருக்கும் சிங்கமாக, ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் இருந்தார்.இந்த பதிவுக்கு அமெரிக்காவில் உள்ள ஹிந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், 'மீனா மன்னிப்பு கோர வேண்டும்' என, கூறினர். இதற்கிடையே, அந்த பதிவு நீக்கப்பட்டது.

இதுகுறித்து மீனா ஹாரிஸ் கூறுகையில், ''நான் தற்போது, பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளேன். நவராத்திரியின் முதல் நாள், எனக்கு வேதனை அளிப்பதாக மாறியுள்ளது,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sandeha pandiyan - Plano TX,யூ.எஸ்.ஏ
21-அக்-202023:25:09 IST Report Abuse
sandeha pandiyan நவம்பர் 4 தேதி தெரியும் யார் வதை பட போகிறார்கள் என்று. இது எல்லாம் என்ன வெட்க கேடு.
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
21-அக்-202021:26:05 IST Report Abuse
jagan இங்கே ஜெயலலிதா முதல் நயன்தாரா வரை துர்கா லட்சுமின்னு பாத்தாச்சு . அவுங்க பண்ணினா கோவம் வரும்....ஹா ஹா ஹா
Rate this:
Cancel
Biil Brace - kandala,ஆப்கானிஸ்தான்
21-அக்-202018:43:58 IST Report Abuse
Biil Brace காளீ வேஷம் போட்டால் .காணாமல் போயி விடுவாள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X