பிரதமர் மோடி அரசுக்கு விவசாயிகள் ஆதரவு

Updated : அக் 21, 2020 | Added : அக் 21, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு, விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக, கருத்துக் கணிப்பில் விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.விவசாயிகள், தங்கள் உற்பத்தி பொருட்களை எங்கு வேண்டுமானாலும், விற்பனை செய்வது உள்ளிட்டவை தொடர்பாக, மூன்று வேளாண் மசோதாக்கள் சமீபத்தில் பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டு, சட்டமாகியுள்ளன.இந்நிலையில், 'கோவான் கனெக் ஷன்' என்ற
பிரதமர் மோடி அரசுக்கு விவசாயிகள் ஆதரவு


புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு, விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக, கருத்துக் கணிப்பில் விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.
விவசாயிகள், தங்கள் உற்பத்தி பொருட்களை எங்கு வேண்டுமானாலும், விற்பனை செய்வது உள்ளிட்டவை தொடர்பாக, மூன்று வேளாண் மசோதாக்கள் சமீபத்தில் பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டு, சட்டமாகியுள்ளன.

இந்நிலையில், 'கோவான் கனெக் ஷன்' என்ற தனியார் அமைப்பு, விவசாயிகளிடம் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. நாடு முழுதும், 16 மாநிலங்களில், 53 மாவட்டங்களில், அக்., 3 - 9 வரை கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டு உள்ள செய்தியில் கூறிஉள்ளதாவது:


latest tamil news


வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு தெரிவித்துள்ளவர்களில், பெரும்பாலானோருக்கு அந்த மசோதாவில் என்னென்ன

உள்ளன என்பதே தெரியவில்லை. உதாரணத்துக்கு, இந்த மசோதாக்களுக்கு, 52 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதில், 36 சதவீதம் பேருக்கு, மசோதா குறித்து எதுவும் தெரியவில்லை. அதேபோல், ஆதரவு தெரிவித்துள்ள, 35 சதவீதம் பேரில், 18 சதவீதம் பேருக்கும், விபரம் தெரிய வில்லை.
கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில், 57 சதவீதம் பேர், குறைந்த விலையில் தங்கள் பொருட்களை விற்க நேரிடுமோ என்ற அச்சத்தை தெரியபடுத்தி உள்ளனர். அதேபோல், 33 சதவீதம் பேர், எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதார விலை நிறுத்தப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தை தெரிவித்து உள்ளனர்.'பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு, விவசாயிகளுக்கு ஆதரவான அரசு' என, 44 சதவீத விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 28 சதவீதம் பேர், அதற்கு எதிராக கருத்து தெரிவித்து உள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-அக்-202012:00:22 IST Report Abuse
ஸ்டாலின் :: இந்த துக்கத்திலும் ஒருத்தன் கருது திணிப்பு என்று இறங்கி உள்ளன பாருங்கள் பாராட்டுவோம், DEMONITAIZATION 100 நாளில் கருப்பு பணம் ஒழியும் ஆமாம் வெள்ளை பணம் ஆகிவிட்டது அல்லவா அது போல தான் விவசயிக்கு நிலத்துக்கு CARD என்று கொடுத்து அப்புறம் அந்த நிலத்திற்கு வரி போடப்போகிறார் பாருங்கள் என்ன வோ விவசயி CARD என்று இன்றய சந்தோஷம் நாளைய துக்கம்
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
21-அக்-202010:34:44 IST Report Abuse
M  Ramachandran தமிழகத்தில் விவாசியிகள் முக்கிய பிரச்னை ஆற்றுப்பாசனம். முக்கிய ஆறு காவேரி. இந்த காவேரி ஆறு பழைய தஞ்சாவூர் மாவட்டத்திற்கு விவசாயத்திற்கு உயிர்நாடி.கடந்த ஐம்பது ஆண்டுகளாக காவேரி முன்யஜனை இல்லாமல் அரசியல் வாதிகளின் பணத்தாசைக்கு உட்பட்டு ஆற்று மணல் சுரண்டப்பட்டு ஆற்றின் நீர் செல்லும் பாதையில் மாற்றதை ஏற்படுத்திருக்கிறது. அணையிலிருந்து எவ்வளவு தண்ணீர் திறந்து விட்டாலும் அது பாசன வாய்க்காலுக்கு கீழே சென்று கொண்டிருக்கிறது. ஆற்றில் நீர் சென்று கொண்டிருக்கும்போது ஆற்றின் அருகில் உள்ள ஆற்று படுகை விவசாயிகளுக்கு மட்டும் மோட்டார் செட் பம்பு உள்ளவர்களுக்கு உபயோகப்படும்.அவர்கள் விவசாயத்தில் ஓரளவுக்கு லாபம் பார்க்கமுடியும். மற்றவர்களுக்கு கடினம்தான். எவ்வளவு நீர் காவேரில் திறந்து விட்டாலும் அது கடலுக்கு தான் பொதுசேரும்.என்னசெய்வது.காமராஜர் மற்றும் அதற்க்கு முந்தய ஆங்கில அரசாங்கம் விவசாயிகளுக்கு எடுத்து கொண்ட முயற்சியை பின்வந்த அரசாங்கங்கள் எடுக்கவில்லை. தமிழக அரசு நீர்ப்பாசன(ஆங்கில அரசால் போடப்பட்ட) மேப்பை பார்த்தல் தமிழத்தில் எத்தனை பாசன் கிணறுகள் குளங்கள் ஏரிகள் வாய்க்கால்கள் காணவில்லை என்று தெரியும்.அவ்வை பாட்டி சொன்ன "சோழ நாடு சோறுடைத்து" என்ற மூதுரை பழமொழியை மறந்து விட்டோம்.
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
21-அக்-202010:08:27 IST Report Abuse
siriyaar உண்மையில் விவசாயிகளிடம் சிறிது நம்பிக்கை ஏற்பட தொடங்கியிருக்கிறது. அதே சமயம் அரசு தற்றோது செயல்படுத்த முயலும் ஒரு தோட்டத்திற்கு ஒரு டிரான்ஸ்பார்மர் என்னும் திட்டம் கடும் கடுப்பை ஏற்படுத்தி உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X