மறு பயன்பாடு மருந்துகள் இணையதளம் துவக்கம்

Updated : அக் 21, 2020 | Added : அக் 21, 2020
Share
Advertisement
புதுடில்லி :சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும், அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சிலின் மறு பயன்பாட்டு மருந்துகள் குறித்த தகவல்கள் அடங்கிய இணையதளத்தை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று துவக்கி வைத்தார். கொரோனா தொற்று பரவல் துவங்கியதில் இருந்து, அந்த வைரசை கட்டுப்படுத்தி சிகிச்சை அளிக்கும் மருந்தை தயாரிக்கும் பணியில், அறிவியல் மற்றும் தொழில் துறை
 மறு பயன்பாடு மருந்துகள் இணையதளம் துவக்கம்

புதுடில்லி :சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும், அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சிலின் மறு பயன்பாட்டு மருந்துகள் குறித்த தகவல்கள் அடங்கிய இணையதளத்தை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று துவக்கி வைத்தார்.

கொரோனா தொற்று பரவல் துவங்கியதில் இருந்து, அந்த வைரசை கட்டுப்படுத்தி சிகிச்சை அளிக்கும் மருந்தை தயாரிக்கும் பணியில், அறிவியல் மற்றும் தொழில் துறை கவுன்சில் ஈடுபட்டு
வருகிறது.


latest tamil news



ஆயுஷ் மருந்துகளின் மருத்துவப் பரிசோதனைகளுக்காக, மத்திய ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து, இந்த ஆராய்ச்சியை செய்து வருகிறது.மிக தீவிர கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை குணப்படுத்த, 'செப்சிவாக்' என்ற மருந்தின், இரண்டாம் கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதன் மூன்றாம் கட்ட பரிசோதனை நடக்கவுள்ளது. இதுபோன்ற, ஐந்து விதமான மருந்துகளின் சோதனைகளில், சி.எஸ்.ஐ.ஆர்., ஈடுபட்டுள்ளது. இந்த மறு பயன்பாடு மருந்துகள் மீதான சோதனை குறித்த தகவல்களை அறியும் இணையதளத்தை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், டில்லியில் நேற்று துவக்கி வைத்தார். -



Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X