சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத பிரபல துணிக்கடைக்கு 'சீல்'

Updated : அக் 21, 2020 | Added : அக் 21, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை : கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காமல், வாடிக்கையாளர்களை அதிகமாக கூட்டிய, சென்னை - தி.நகரில் உள்ள பிரபல துணி கடைக்கு, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று(அக்.,20), 'சீல்' வைத்தனர்.கொரோனா ஊரடங்கிற்கு பின், படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஜவுளிக்கடைகள் திறக்க, தனிமனித இடைவெளி, கட்டாய முககவசம், குறைந்த வாடிக்கையாளர்களுக்கு அனுமதி என, பல்வேறு கட்டுப்பாடுகள்
Textile showroom, sealed, T Nagar

சென்னை : கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காமல், வாடிக்கையாளர்களை அதிகமாக கூட்டிய, சென்னை - தி.நகரில் உள்ள பிரபல துணி கடைக்கு, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று(அக்.,20), 'சீல்' வைத்தனர்.

கொரோனா ஊரடங்கிற்கு பின், படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஜவுளிக்கடைகள் திறக்க, தனிமனித இடைவெளி, கட்டாய முககவசம், குறைந்த வாடிக்கையாளர்களுக்கு அனுமதி என, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.ஆனால், இந்த விதிமுறைகளை பல்வேறு வணிக வளாகங்கள் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


latest tamil news


இந்நிலையில், தி.நகர் பிரபல துணிக்கடைகளில், தனிமனித இடைவெளி கடைப்பிடிக்காமல், வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதும் வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, அக்கடையில், கோடம்பாக்க மண்டல அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்த போது, கொரோனா விதிமுறைகளையும், அரசு உத்தரவையும் கடைப்பிடிக்காதது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கடைக்கு, மாநகராட்சி அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
21-அக்-202011:39:26 IST Report Abuse
S. Narayanan கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டால் சீலாவது மண்ணாவது. எல்லாம் சும்மா.
Rate this:
Cancel
RD Rameshbabu - madurai,இந்தியா
21-அக்-202009:02:04 IST Report Abuse
RD Rameshbabu Today seal tomorrow penalty paid.And then after shop
Rate this:
Cancel
Krishnan G - Chennai,இந்தியா
21-அக்-202008:53:03 IST Report Abuse
Krishnan G அதென்ன "பிரபல துணி கடை" என்று போட்டு அதன் பெயரை குறிப்பிடாது விட்டுவிட்டீர்கள்... "குமரன் சில்க்ஸ்" என்று சில ஊடகங்களில் தெளிவாக குறிப்பிட்ட பின்னும் கடையின் பெயர் சொல்ல என்ன தயக்கமோ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X