பொது செய்தி

இந்தியா

இந்தியாவின் சிறந்த சுற்றுலா தலம் 'உத்தரப் பிரதேசம்'

Updated : அக் 21, 2020 | Added : அக் 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
லக்னோ : உத்தரபிரதேசம் இந்தியர்களின் சிறந்த சுற்றுலாத் தலமாகவும், 2019 ல் வெளிநாட்டினருக்கு மூன்றாவது இடமாகவும் திகழ்கிறது என சுற்றுலா துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் வரலாற்று ரீதியாகவும், வளமான இடங்களில் ஒன்றாகவும் உத்தர பிரதேசம் அதிகமான சுற்றுலா பயணிகளால் பார்வையிடப்பட்ட மாநிலமாக மாறியுள்ளது என உ.பி., மாநில சுற்றுலா துறை அமைச்சகம் நேற்று (அக்.,20)

லக்னோ : உத்தரபிரதேசம் இந்தியர்களின் சிறந்த சுற்றுலாத் தலமாகவும், 2019 ல் வெளிநாட்டினருக்கு மூன்றாவது இடமாகவும் திகழ்கிறது என சுற்றுலா துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.latest tamil newsஇந்தியாவில் வரலாற்று ரீதியாகவும், வளமான இடங்களில் ஒன்றாகவும் உத்தர பிரதேசம் அதிகமான சுற்றுலா பயணிகளால் பார்வையிடப்பட்ட மாநிலமாக மாறியுள்ளது என உ.பி., மாநில சுற்றுலா துறை அமைச்சகம் நேற்று (அக்.,20) அறிவித்தது. நாடு முழுவதுமாக பயணம் செய்யும் இந்தியர்களுக்கு உ.பி., முதல் மற்றும் சிறந்த தேர்வாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டில் சுமார் 53 கோடி இந்திய சுற்றுலாப் பயணிகள் இந்த மாநிலத்தைப் பார்வையிட்டனர். அதேசமயம் 47 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களும் உ.பி., விமான நிலையங்களில் இறங்கினர்.

அதே ஆண்டில் வெளிநாட்டு பயணிகளை பொறுத்தவரை, உ.பி., சிறந்த மாநிலமாக (சுற்றுலா தலங்களில்) மூன்றாம் இடத்தில் உள்ளது. சுற்றுலாவை மேம்படுத்துவதில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் முயற்சிகள் தற்போது சிறப்பான பலன்களையும் பாராட்டையும் வெளிப்படுத்துகின்றன என சுற்றுலா மற்றும் கலாச்சார முதன்மை செயலாளர் முகேஷ் மேஷ்ராம் கூறினார். மத, கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களைக் கொண்ட உத்தரபிரதேசத்தின் மிகப்பெரிய சுற்றுலா திறனை முதல்வர் யோகி எடுத்துரைத்ததாக மேஷ்ராம் கூறினார்.


latest tamil newsஉ.பி. அரசாங்கத்தின் சுற்றுலா அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, சிறந்த இடங்கள் : ஆக்ரா - பதேபூர் சிக்ரி, மதுரா - பிருந்தாவன், லக்னோ, வாரணாசி - சாரநாத், அயோத்தி, குஷிநகர், ஸ்ராவஸ்தி, கபில்வாஸ்து, பிரயாகராஜ் - சித்ரகூட், பரேலி, ஜான்சி - தியோகர் மற்றும் மீரட் - சர்தானா ஆகும். மாநிலத்தில் 75 மாவட்டங்கள் மற்றும் 689 நகரங்கள் உள்ளன. மேலும் தாஜ்மஹால் (உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று), ஆக்ரா கோட்டை, பதேபூர் சிக்ரி, ஜான்சி கா குய்லா, அக்பரின் கல்லறை, பரா இமாம்பாரா, சாரநாத் ஸ்தூபா, அலகாபாத் கோட்டை, தியோகர் நினைவுச்சின்னங்கள் உள்ளன. அத்துடன் துத்வா தேசிய பூங்கா, கட்டர்னியா காட் வனவிலங்கு சரணாலயம், சம்பல் வனவிலங்கு சரணாலயம், சுர் சரோவர் (கீதம்) பறவைகள் சரணாலயம், நவாப்கஞ்ச் பறவைகள் சரணாலயம், சந்திர பிரபா வனவிலங்கு சரணாலயம், சுஹெல்வா வனவிலங்கு சரணாலயம் மற்றும் பிலிபர்விட் ரிசர்வ் போன்ற பல தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன.


latest tamil newsமில்லியன் கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் 'மகா கும்ப மேளா'விற்கும் உத்தரபிரதேசம் பிரபலமானது. இது இந்தியா முழுவதும் மிகப்பெரிய மத சபையாகும். பிரயாகராஜில் உள்ள சங்கம் தீர்த்தராஜ் (தீர்த்தர்களின் ராஜா) என்று அழைக்கப்படுகிறது, இங்கு மகா கும்பம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
21-அக்-202014:55:29 IST Report Abuse
Vivekanandan Mahalingam தமிழ் நாட்டில் திராவிட அரசியல் வாதிகளின் செயல் பாடு காரணாமாக இங்கு யாரும் வர விருப்பப்படுவதில்லை. எந்த கோவிலுக்கும் முறையான தரிசன முறை, நல்ல தரமான தங்கும் இடம், கழிவறை வசதி, வாகனங்கள் நிற்கும் வசதி சாலை வசதி எதுவும் கிடையாது. மேலாக இதையும் மீறி வருபவர்களிடம் இருந்து பணம் பிடுங்கும் ப்ரோக்கர்கள், கொள்ளை அடிக்கும் அறமற்ற துறை. நமது முன்னோர்கள் சொத்தை அழித்து கொண்டிருக்கும் அரசாங்கத்திடம் இருந்து கோவில்கள் மீட்கப்பட்டால் கோடிக்கணக்கில் வருமானம் வரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X