பொது செய்தி

தமிழ்நாடு

ஆயுத பூஜை: சொந்த ஊர் செல்ல மக்களுக்கு ஆர்வமில்லை

Updated : அக் 21, 2020 | Added : அக் 21, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: இந்தாண்டு ஆயுத பூஜை, வரும், 25 ஞாயிற்றுக் கிழமையும், தசரா பண்டிகை, 26ம் தேதி திங்கள் கிழமையும் கொண்டாடப்படுகிறது. வரும், 24ம் தேதி, சனிக்கிழமை என, மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், சொந்த ஊர்களுக்கு செல்ல, பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுவர் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு, கொரோனா பரவல், பருவ மழை போன்ற காரணங்களால், சொந்த ஊர்களுக்கு செல்ல, மக்கள் தயக்கம்
ஆயுத பூஜை, விடுமுறை, அரசு விரைவு பஸ்

சென்னை: இந்தாண்டு ஆயுத பூஜை, வரும், 25 ஞாயிற்றுக் கிழமையும், தசரா பண்டிகை, 26ம் தேதி திங்கள் கிழமையும் கொண்டாடப்படுகிறது. வரும், 24ம் தேதி, சனிக்கிழமை என, மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், சொந்த ஊர்களுக்கு செல்ல, பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுவர் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு, கொரோனா பரவல், பருவ மழை போன்ற காரணங்களால், சொந்த ஊர்களுக்கு செல்ல, மக்கள் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.

அதாவது, கடந்தாண்டு, ஆயுத பூஜை விடுமுறை திங்கள், செவ்வாய் கிழமைகளில் வந்தது. அதனால், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்திருந்தனர். இந்தாண்டு, 4,000 பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர்.


latest tamil news



இது குறித்து, அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:இந்தாண்டு, மிகக் குறைவான எண்ணிக்கையில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, ரயில்கள், ஆம்னி பஸ்கள் இயங்குவதும், பருவ கால மாற்றமும் காரணமாக இருக்கலாம். முன்பதிவு செய்த பயணியருக்கு தேவையான பஸ்களை, இயக்கத் தயாராக உள்ளோம். பயணியர் பாதுகாப்பாக பயணிக்க, முன்பதிவு செய்வது அவசியம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sami Sam - chidambaram ,இந்தியா
21-அக்-202018:51:25 IST Report Abuse
Sami Sam பல நிறுவனங்கள் இன்னமும் திறக்கப்படாமலேயே உள்ளது அந்த பணியாளர்கள் சொந்த ஊர் வந்து மாதக்கணக்காகி விட்டது தவிர ஒர்க் அட் ஹோம் நிகழ்வில் பலர் சொந்த ஊருக்கு வந்து நீண்ட நாட்களாகிவிட்டது தவிர ரயில்கள் ஓம்னிபுஸ்கள் பருவநிலை மாற்றம் எப்போதும் போல்தான் உள்ளது முக்கியமான காரணம் நோய் தொற்று ஏற்படும் என்ற அச்சமே
Rate this:
Cancel
V.Balasubramanian - Chennai,இந்தியா
21-அக்-202017:25:41 IST Report Abuse
V.Balasubramanian கோவேர்ந்மேன்ட் ஆயிரம் ரூபா குடுத்த கண்டிப்பா ஊருக்கு போகலாம். பணம் இல்லே. பாக்கெட் காளி. சப்ப்டக்கு வழி இல்லை.
Rate this:
Cancel
kumaravel - chennai,இந்தியா
21-அக்-202014:44:14 IST Report Abuse
kumaravel ஏற்கனவே சொந்த ஊரில் தான் உள்ளனர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X