ஆயுத பூஜை: சொந்த ஊர் செல்ல மக்களுக்கு ஆர்வமில்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆயுத பூஜை: சொந்த ஊர் செல்ல மக்களுக்கு ஆர்வமில்லை

Updated : அக் 21, 2020 | Added : அக் 21, 2020 | கருத்துகள் (9)
Share
சென்னை: இந்தாண்டு ஆயுத பூஜை, வரும், 25 ஞாயிற்றுக் கிழமையும், தசரா பண்டிகை, 26ம் தேதி திங்கள் கிழமையும் கொண்டாடப்படுகிறது. வரும், 24ம் தேதி, சனிக்கிழமை என, மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், சொந்த ஊர்களுக்கு செல்ல, பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுவர் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு, கொரோனா பரவல், பருவ மழை போன்ற காரணங்களால், சொந்த ஊர்களுக்கு செல்ல, மக்கள் தயக்கம்
ஆயுத பூஜை, விடுமுறை, அரசு விரைவு பஸ்

சென்னை: இந்தாண்டு ஆயுத பூஜை, வரும், 25 ஞாயிற்றுக் கிழமையும், தசரா பண்டிகை, 26ம் தேதி திங்கள் கிழமையும் கொண்டாடப்படுகிறது. வரும், 24ம் தேதி, சனிக்கிழமை என, மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், சொந்த ஊர்களுக்கு செல்ல, பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுவர் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு, கொரோனா பரவல், பருவ மழை போன்ற காரணங்களால், சொந்த ஊர்களுக்கு செல்ல, மக்கள் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.

அதாவது, கடந்தாண்டு, ஆயுத பூஜை விடுமுறை திங்கள், செவ்வாய் கிழமைகளில் வந்தது. அதனால், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்திருந்தனர். இந்தாண்டு, 4,000 பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர்.


latest tamil news



இது குறித்து, அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:இந்தாண்டு, மிகக் குறைவான எண்ணிக்கையில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, ரயில்கள், ஆம்னி பஸ்கள் இயங்குவதும், பருவ கால மாற்றமும் காரணமாக இருக்கலாம். முன்பதிவு செய்த பயணியருக்கு தேவையான பஸ்களை, இயக்கத் தயாராக உள்ளோம். பயணியர் பாதுகாப்பாக பயணிக்க, முன்பதிவு செய்வது அவசியம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X