பொது செய்தி

இந்தியா

ஏ.டி.எம்.,மில் ரொக்க பணம் செலுத்தினால் இனி கட்டணம்

Updated : அக் 21, 2020 | Added : அக் 21, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
புதுடில்லி: விடுமுறை நாட்கள் மற்றும் வங்கி வேலை நேரம் அல்லாத தருணங்களில், பணம் செலுத்தும் ஏ.டி.எம்., மெஷின் மூலமாக, நம் கணக்கில் ரொக்க பணத்தை செலுத்துவதற்கு, தனியார் வங்கிகள் கட்டணம் வசூலிக்க துவங்கி இருக்கின்றன.ஏற்கனவே, ஆக்சிஸ் வங்கி ஆகஸ்ட் மாத துவக்கத்திலிருந்து இப்படி ரொக்கம் செலுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க துவங்கி விட்டது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அடுத்த
ATM,Bank,cash deposit,ஏடிஎம்

புதுடில்லி: விடுமுறை நாட்கள் மற்றும் வங்கி வேலை நேரம் அல்லாத தருணங்களில், பணம் செலுத்தும் ஏ.டி.எம்., மெஷின் மூலமாக, நம் கணக்கில் ரொக்க பணத்தை செலுத்துவதற்கு, தனியார் வங்கிகள் கட்டணம் வசூலிக்க துவங்கி இருக்கின்றன.

ஏற்கனவே, ஆக்சிஸ் வங்கி ஆகஸ்ட் மாத துவக்கத்திலிருந்து இப்படி ரொக்கம் செலுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க துவங்கி விட்டது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அடுத்த மாதத்திலிருந்து, வாடிக்கையாளர்களிடமிருந்து இத்தகைய கட்டணத்தை வசூலிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

வங்கி விடுமுறை நாட்களிலும், மாலை, 6 மணி முதல் காலை, 8 வரையிலான நேரத்திலும் பணம் செலுத்தும் ஏ.டி.எம்., மிஷின் மூலம் ரொக்கம் செலுத்துவதற்கு, 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.மேலும், அடுத்த மாதம், முதல் தேதியிலிருந்து இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.


latest tamil news


அதுமட்டுமின்றி; ஒரு மாதத்தில் ஒரு முறையிலோ அல்லது, பல முறையாகவோ, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மெஷின் மூலம் பணம் செலுத்தும் பட்சத்திலும், கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.இந்த கட்டணம் அடிப்படை சேமிப்புக் கணக்கு, ஜன் தன் கணக்கு, மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு கிடையாது என்றும் அறிவித்துள்ளது.


latest tamil newsஆக்சிஸ் வங்கியும் இதேபோல், 50 ரூபாய் கட்டணத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வசூலித்து வருகிறது.தனியார் வங்கிகளின் இத்தகைய முடிவுகளால் கடைக்காரர்கள், சிறு வணிகர்கள் ஆகியோர் தாங்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாவோம் என தெரிவித்துள்ளனர்.

இவர்கள் பெரும்பாலும் அன்றைய வணிகத்தை முடித்த பிறகு, மிஷின் மூலம் கணக்கில் பணத்தை செலுத்திவிட்டு வீட்டுக்கு செல்வர்.அதிகாலையில் கடை திறக்கும் சமயத்தில், பணத்தை எடுத்துக் கொள்வார்கள். ஆனால், இனி இவர்கள் ரொக்கப் பணத்தை கடையிலேயே வைத்துவிட்டு செல்லவேண்டும்; அல்லது, வீட்டுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற நிலை உருவாகும்.

இதுகுறித்து வங்கி தரப்பினர், பணத்தை கலெக்ட் செய்வதற்கு கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். மேலும், 'குறைந்த ரொக்கம்; அதிக டிஜிட்டல்' எனும் அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவு காரணமாகவும், இக்கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
25-அக்-202015:41:56 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி பலய மாதிரீரியே வைக்கமில்ல.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
22-அக்-202017:37:22 IST Report Abuse
madhavan rajan ஆயிரக்கணக்கில் இரவு பாதுகாப்பாக வைக்க ஐம்பது ரூபாய் செலவுக்கு கணக்கு பார்த்தால் இழப்பு ஏற்படும்போது ஆயிரக்கணக்கில் போய்விடுமே. நோகாமல் நோம்பு கும்பிடுவதில் நமது வணிகர்கள் சமர்த்தர்கள்.
Rate this:
Cancel
Vinoth - Hyderabad,இந்தியா
21-அக்-202021:15:07 IST Report Abuse
Vinoth வங்கிகளும் வியாபாரம் தான் செய்கிறது. அதாவது, வட்டிக்கடை வியாபாரம். சாதாரணமாக வட்டிக்கு விடுபவர்கள் கந்து வட்டி, மீட்டர் வட்டி, தண்டால் வசூல் என்று தங்கள் சேவைகளை அழைக்கின்றனர். வங்கிகள் கௌரவமாக, இன்ட்ரெஸ்ட், இ.எம்.ஐ, சர்விஸ் சார்ஜ் என்றெல்லாம் அழைகிற்றனர். ஒட்டுமொத்தத்தில் எல்லாமே வசூல் தான். ATM இல் பணம் போடுவதற்கு கட்டணம் வசூலிப்பதால் ஏழைகள் பாதிப்படைய வாய்ப்பில்லை. இந்த வசதியை வியாபாரிகள் தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள், வங்கியோ, லாபத்தில் பங்கு கேட்கிறது... அவளவுதான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X