பொது செய்தி

இந்தியா

அரசுக்கு வாடகை பாக்கி: கவர்னருக்கு 'நோட்டீஸ்'

Updated : அக் 21, 2020 | Added : அக் 21, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
டேராடூன்: உத்தரகண்டில், அரசு பங்களாவிற்கு வாடகை செலுத்தாத மஹாராஷ்டிர கவர்னர் பகத் சிங் கோஷ்யாரிக்கு, அம்மாநில உயர் நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.உத்தரகண்டில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில முன்னாள் முதல்வர் பகத் சிங் கோஷ்யாரி, தற்போது மஹாராஷ்டிர கவர்னராக பதவி வகிக்கிறார். இவருக்கு, முன்னாள் முதல்வர் என்ற
Uttarakhand, Maharashtra, Governor, CourtNotice, Government Bungalow, Rent, உத்தரகாண்ட், மஹாராஷ்டிரா, கவர்னர், கோர்ட், நோட்டீஸ், வாடகை

டேராடூன்: உத்தரகண்டில், அரசு பங்களாவிற்கு வாடகை செலுத்தாத மஹாராஷ்டிர கவர்னர் பகத் சிங் கோஷ்யாரிக்கு, அம்மாநில உயர் நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

உத்தரகண்டில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில முன்னாள் முதல்வர் பகத் சிங் கோஷ்யாரி, தற்போது மஹாராஷ்டிர கவர்னராக பதவி வகிக்கிறார். இவருக்கு, முன்னாள் முதல்வர் என்ற தகுதியின் அடிப்படையில், உத்தரகண்டில் அரசு பங்களா ஒதுக்கப்பட்டு உள்ளது. 'இதற்கான வாடகையை ஆறு மாதங்களுக்குள் அவர் செலுத்த வேண்டும்' என, உத்தரகண்ட் உயர் நீதிமன்றம், 2019ல் உத்தரவிட்டது. ஆனாலும், அவர் இதுவரை வாடகை, மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்களையும் செலுத்தவில்லை.


latest tamil news


இதனால், 'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தவறிய பகத் சிங் கோஷ்யாரி மீது, அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, டேராடூனைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் தரப்பில், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி சரத்குமார், மனுவில் கூறப்பட்டு உள்ள விபரங்கள் தொடர்பாக, கவர்னர் தன் கருத்தை தெரிவிக்க வேண்டும் என, அவரது வழக்கறிஞர் வாயிலாக, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-அக்-202020:24:13 IST Report Abuse
தமிழவேல் இதுக்கு ஒரேயொரு கமெண்ட் மட்டும் வந்தது ஆச்சர்யப் பட வைக்குது. 😂😂😂
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
21-அக்-202013:49:59 IST Report Abuse
Ramesh Sargam இதே ஒரு ஏழை விவசாயி தான் வாங்கிய கடனை பல காரணங்களால் திருப்பி செலுத்தாமல் இருந்திருந்தால் அவன் இந்நேரம் சிறையில் அடைக்கப்பட்டிருப்பான். நமது நாட்டில் சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான். ஆனால், அது மக்களின் வசதிக்கு ஏற்றாற்போல் 'அமுல் படுத்தப்படுகிறது' வெட்கம் வேதனை.
Rate this:
seth - pondi,கனடா
21-அக்-202021:29:00 IST Report Abuse
sethஅவர் செய்தது தவறு ... ஆனால் நீங்கள் ஒரு விவசாயீ கடன் செலுத்தாமல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தால் அதை நிரூபியுங்கள் ... இந்தியாவில் சட்டப்படி அதற்கு இடமில்லை ..Sorry Ramesh....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X